Tuesday, August 21, 2012

"பாஞ்சாலி சபதம் " நாடகமும் ,பன்சி கவுலும்...!

 

"தேசிய நாடகப் பள்ளி " டெல்லியில் இருக்கிறது. அவர்கள் நாடகம் பற்றிய விழிப்புணர்வு உருவாக மாநிலங்களில் நாடகப் பட்டறை நடத்துவார்கள். காந்தி கிராம பலகலை கழகத்ல் பணியாற்றிய நாடக ஆசான் சே.ராமானுஜம் அந்தப்பள்ளியின் முன்னாள் மாணவர் காந்தி கிராமத்தில் நாடகப்பயிற்சியை டெல்லியில்  இருந்து  வந்து  நடத்துவார்கள்  .பயிற்சி முடிந்ததும் அந்த மாணவர்கள் தயாரித்த நாடகம் அரங்கேறும். அநேகமாக மதுரை காந்தி கண்காட்சியகத்தின் அரங்கில்
நடக்கும்

ஒருஆண்டு அந்தமாணவர்கள் பாரதியின் "பாஞ்சாலி சபதம்" நாடகத்திலிருந்து  சில காட்சிகளை சித்தரித்திருந்தார்கள்.பாஞசாலியைத் துகிலுரியும் காட்சியில்   கிருஷ்ணர்  வரும்காட்சி.  .கொத்து வேலைக்கு  வரும்  கூ லியாள் மாதிரி ஒரு நாலு முழம் வேட்டி, இடுப்பில் சொருகியிருந்த புல்லாங்குழல்,தகையில் ரிப்பன் போன்று ஒரு தலைப்பாகை துணி  பாகை அதில் ஒரு மயில் பிலி என்று கிஷ்ணர் வந்தார் இந்தநாடகத்தை காஷ்மிரத்தை  சேர்ந்த  பன்சி கவுல் என்பவர் இயக்கினார்..

பத்திரிகைக்காக அவரிடமொரு நேர்காணல் எடுத்தேன்.கிருஷ்ணருக்காக   "நாடகங்களில்  நல்ல சிவப்பாக, அழகான நடிகர்களை  தேர்ந்தெடுப்பார்கள். தலையில் கிரீடம் கைகளில்  கங்கணம் உத்தரியம் தலையில் மயில்பிலி என்று பார்த்திருக்கிறோம்" உங்கள் கிருஷ்ணர் வித்தியாசமாக இருக்கிறாரே!" என்று கேட்டேன்.

 எனஅருகில் கவுல்  வந்து தொளில் கைபோட்ட  படி "நண்பரே! மாடு மேய்ப்பவன்  எப்படி இருப்பான்?ஒரு துணியை இடுப்பில் சொருகியிருப்பான். கையில் கம்பு இருக்கும்.தலைப்பாகை இருக்கும்.மாலை ரோஜாமாலை எல்லாம் அப்போது  ஏது ?.இஸ்லாமியர் கொண்டுவந்ததுதான் ரோஜா! well shaved சிவன் ராமர் எல்லாம் ரவி வர்மா வரைந்ததுதான்."என்று விளக்கினார்.

இந்த நாடகத்தில் கிருஷ்ணராக k A .குணசேகரன் நடித்தார்.அவருடைய குரலின்
timbre அரங்கத்தை துடிக்க வைக்க பாடவும் செய்வார்  . 

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அறிந்தேன்...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஐயா...

John Chelladurai said...

Ayya vanakkam.
interesting write up. realistic depiction of Krishna.
I am glad you wrote about K A Gunasekaran.

You may remember the 'Commune' I lived in for 7.5 years before coming to Nagpur. One of the four friends in the commune was Adv. K Selvaraj, hails from Narasinghampatti near Melur. K A Gunasekaran is Selvaraj's brother (periyappa mahan).

Nice to hear his name from you.

Ranjani Narayanan said...

அன்புள்ள காஷ்யபன் அவர்களுக்கு,
வலைத்தளம் மூலம் உங்களை அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி!
திரு கவுல் சொன்னதைப் பற்றி உங்கள் கருத்தை எழுதவில்லையே?
அன்புடன்,
ரஞ்ஜனி

kashyapan said...

ரஞ்சனி அவர்களே! சிறுவயதில் "பெரிய எழுத்து ராமாயணம்" என்ற புத்தகத்தை பெரியவர்கள் படித்து வந்ததை பார்த்திருக்கிறெண். அதில் மரக்கட்டையில் செதுக்கிய "பிளாக்" கொண்டு படம் அச்சடிக்கப்பட்டிருக்கும்.அதில்ராமர் ,விசுவாமித்திரர்,லட்சுமணன் எல்லாருமே தாடியோடுதான் இருப்பார்கள். அது தான் logicaly correct என்று கருதுகிறேன் ராமாயணம் தொலைக்காட்சி தொடரில் பதினாங்கு ஆண்டுகள்காட்டிலிருந்த ராமர் (அருண் கோவில்) தாடியில்லாமல் வந்தது .விமரிசிக்கப்பட்டதுநினைவிருக்கும் என்று நினைக்கிறென்.இயக்குனர் பன்சி கவுல் சொன்னது சரியென்றே எனக்குப் படுகிறது.---காஸ்யபன்

Vetirmagal said...

எளிமையாக , நல்ல குறிப்புகளை எழுதி உள்ள பதிவை படிக்கும் போது, மன நிறைவு அடைய முடிகிறது.
வணக்கம்.