Sunday, August 26, 2012

வங்கி ஊழியர்களின் போராட்டம்......!


சென்ற புதன் கிழமை அன்று அவசரமாக எனக்கு பத்தாயிரம் ரூ தேவைப்பட்டது. உடனடியாக காசொலையோடு வங்கிக்கு புறப்பட்டேன். அப்போதுதான் என் மனைவி வங்கி உழியர்கள் இரண்டுன்நாள்  வேலை நிறுத்தம் செய்கிறார்கள் என்று நினைவுபடுத்தினார்.பணத்தை எதிர்பார்த்து
காத்திருக்கும் நண்பருக்கு   என்ன சொல்வது? தெரிந்த வரை அணுகினேன்!
அவரும் உதவ முன் வந்தார்.அவருடைய குடும்பதேவையை முன்னிட்டு
விட்டில் வைத்திருந்த பணத்தை எனக்கு கொடுப்பதாக கூறினார் .


"வங்கி ஊழி யர்கள் எதற்காக வேலை நிறுத்தம் செய்கிரார்கள் தெரியுமா?" என்று கேட்டார்.

"என்ன! சம்பளம்,போனசு,ம்பாங்க!"
"அது தான் இல்லை!"
"பின்ன?"
"இந்த முட்டாப்பய அரசாங்கம் ஒரு சட்டம் கொண்டுவரான்!"
"சரி!"
"பொதுத்துறை வங்கிகளை சீர்த்திருத்த்ப்போறேன்னு சீரழிக்க  சட்டம் கொண்டுவாறான் !"
"ஏன்யா !  இவங்களுக்கு மூளையே கிடையாதா ?"
"கொள்ளையா இருக்கு! ஆனா நல்லதுக்கு இல்ல!"
"ஐந்து வருடம் கழிச்சு பொதுத்துறை வங்கிகள் ஒய்ந்து விடுமாம! அப்போ லட்சக்கணக்கான கோடி ரூபா நட்டமாயிடுமாம். அதனால இப்பவே தனியார் வங்கிக்கு சலுகை கொடுத்து அத நிமிர வைக்கப் போறாங்களாம்!"
"அட !  சண்டாளன்களா!"
"இந்த தனி முதலாளிகளுக்கு வருமான வரி,சுங்க வரி,கலால் வரி னு சலுகை  கொடுத்திருக்காங்க !"
"எம்புட்டு இருக்கும்?"
"இருபத்து ஐந்து லட்சம் கோடி ரூ !!!"

சொந்தகஷ்டனஷ்டம் இருக்கட்டும்.!
அவங்க போராடி ஜெயிக்கட்டும் "

மனதிற்குள்  சொல்லிக் கொண்டேன்!

7 comments:

venu's pathivukal said...

அன்புத் தோழர் காஸ்யபன்

மிக்க நன்றி..

வங்கி ஊழியர் அதிகாரிகள் போராட்டம் ஒரு நல்ல விவாதத்தை மக்கள் மன்றத்தில் உருவாக்கி இருக்கிறது. தனியார்மயப் பிரச்சனை முன்னெப்போதும் இருந்ததைவிடவும் அம்சமாக இப்போது முன் வந்திருக்கிறது.

மேற்கு நாடுகளில் அவர்கள் வங்கிகள் சீட்டுக் கட்டுகள் போல விழுந்து கொண்டிருக்கையில் நம்மவர்கள் எப்படி தப்பினர் என்ற கேள்வியில் இருக்கிறது, சூட்சுமமான பதில். பிறகும் ஏன் அதே சீர்த்திருத்தங்களைக் கொண்டு தலையில் கட்டுகிறாய் என்று கேட்டால் பாய்கிறார்கள் முதலாளித்துவ அறிவுஜீவிகள். அதை முறியடிக்கத் தான் இந்த போராட்ட வியூகம்.

இந்த இரண்டு நாள் வேலைநிறுத்தம் ஊழியர்களையும் நிறைய சிந்திக்கத் தூண்டி இருக்கிறது. பொதுமக்கள் ஆதரவை நோக்கி அவர்களை இது தள்ளுகிறது.

நன்றி நன்றி

எஸ் வி வேணுகோபாலன்

அப்பாதுரை said...

interesting. வங்கிகளை தேசியமயமாக்க முனைந்த போது இ.காந்தியை சகட்டு மேனிக்கு கண்டனம் செயதது லேசாக நினைவிருக்கிறது.

தனியார் மயமாக்குவதால் லாபகரமாக இயங்குவது என்பது ஒரு மாயை. தேசியமயமான வங்கிகள் அரசியல்வாதிகள் கையில் சிக்கி அழிவதும் உண்மை. கிங்பிஷர் விவகாரத்தில் கோடிக்கணக்கில் அரசு வங்கிகள் இழந்திருப்பதாகச் சொல்கிறார்களே?

still, சீர்திருத்தங்கள் என்றால் என்ன செய்யப்போகிறார்களாம்?

kashyapan said...

வாருங்கள் அப்பாதுரை அவர்களே! நீங்கள் சொன்னபடி Nationalisation for whom? and for what ? என்ற கேள்வி எழுப்பப்பட்டு விவாதம் எழுந்ததும் உண்மைதான்! வெறும் வக்கீலகள் மாஜிஸ்டிரெட் பதவிக்காக தீர்மனம் எழுத உருவானதுதான் கங்கிரஸ் பெரியக்கம். அதுதான் சுதந்திரத்திற்கான வித்தாக மாறியது. படித்த மிட்டா மிராசுகளிடமிருந்து,கங்கிரசை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றியவர் காந்தி அடிகள். சில சொந்த அரசியல் காரணங்களுக்காக முதலாளித்துவம் எடுக்கும் நடவடிக்கை களை மக்கள் நலனுக்காக மாற்றும் முயற்சிகளில் அதுவும் ஒன்று!வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.

மோகன்ஜி said...

ப்ரிய காஸ்யபன் சார்... வங்கிகள் தேசியமயமாக்கப் பட்டதன் காரணம் எதுவாயினும்,
அது வளர்ச்சிக்கான ஒரு சீரிய முயற்சி.வங்கிகளில் நுழைந்திராதவர்கள் இந்தியா ஜனத்தொகையில் ஒரு பெரிய விழுக்காடு.Financial Inclusion ஒரு இயக்கமாய் முன்னெடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. அவை வெற்றி பெற வேண்டுவோம்.ஒரு பெரிய விவாதத்திற்கான விவகாரம் அல்லவா இது?

kashyapan said...

மோகன் ஜி அவர்களே!" லோன் மேளா" பூஜாரி தலைமையில்னடந்தது.அப்பாவி விவசாயி கழுத்தில் துண்டைப்போட்டு வசூலித்தார்கள். டி.ஆர்.பாலு எம்புட்டு பாக்கி! சொல்லமாட்டாங்க! அதென்ன NPA? பட்டியல ஏன் கொடுக்கமாட்டாங்க? இந்திய முதலாளிகள் வளர்ர வரைக்கும் வால சுருட்டிகிட்டு இருந்தாங்க! இப்ப அரசாங்கத்தையே முழுங்கிக்கிட்டு இருக்காங்க! financial inclusion--குப்பனையும் சுப்பனையும் சேக்கவா? உமக்கு தெரியாததா? நிறைய பேசலாம்! விவாதிக்கலாம்! பலன்!!!---காஸ்யபன்

சிவகுமாரன் said...

|||நிறைய பேசலாம்! விவாதிக்கலாம்! பலன்!!////

அதானே ??!!!

V Mawley said...



கருப்புப்பணத்தை அயல்நாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பவர்களின் பட்டியலை கேட்டால் ,inter -national relationaship மற்றும்

சட்டச்சிக்கல்கள் என்றெல்லாம் கூறி ஆட்சியிலிருப்பவரகள் ( எந்தக்கட்சி ஆட்சியிலிருந்தாலும் ! ) பம்மாத்து வேலை செய்தே தப்பித்துக்கொள்கிறார்கள் ; சரி , அது போகட்டும் நம் நாட்டு வங்கிகளில் உள்ள NPA List -டை யாவது publish செய்யுங்களேன் ; அதில்

எத்தனை அரசியல்வாதிகளும் , மற்றும் நாட்டில் பெரிதும் 'அலங்கரிக்கப்பட்ட' போற்றுதலுக்குரிய பிரமுகர்களும் உள்ளனர் என்று

தெரிந்து கொள்ளலாமேi ! செய்வார்களா ? நிச்சயம் செய்யமாட்டார்கள் ; இதுவரை வெளிவந்த scandals எல்லாம் ஒன்றுமில்லை

என்கிற அளவுக்கு மக்கள் அதிர்க்குச்சிக்குளாக நேரிடும் ! வங்கிகளில் credit departments களில் வேlலை செய்வோர் பெரும்பாலோர்

நன்கு அறிந்த விஷயம் ....மேலும் வங்கிகளின் நஷ்டக்கணக்குகளை குறைத்து காண்பித்து வங்கிகளின் credit Rating ஐ

ஜோடித்து காண்பிப்பதார்காக Reserve Bank மூலம் அரசாங்கமே கொண்டு வந்த One Time Settlement நியதியைப்பயன்படுத்தி பெரிய

NPA கணக்குகளில் "விட்டுக்கொடுக்கப்பட்ட" ( sacrifice என்று கூறிக்கொள்கிறார்கள்! ) தொகைகளை பட்டியலிடச்சொல்லுங்கள்...இதெல்லாம் யாராலும் பேசப்படாமல் , 'கமுக்கமாக' நிகழ்த்தப்பட்ட ( மூச்சுத்திணற வைக்கும் ) பல லக்ஷக்கணக்கான 'கோடிகள் '

ஆனால் வங்கிகளின் தொழிற் சங்க நிர்வாகிகளும் வாளாயிருப்பது ஏன் என்று தான் புரியவில்லை ...அவர்களும்

"கண்டு கொள்ள ப்படுகிறார்கள் " என்று தான் நினக்கவேண்டியிருக்கிறது ...

மாலி .