Monday, August 13, 2012

சிகாகொவோலிருந்து வந்த "அப்பாதுரை"............

நாகபுரியில் உள்ள  டாக்டர் அம்பெத்கர் சர்வதேச விமான நிலயத்தில்  வக்கீல் ராமலிங்கம்  (என்மைத்துனர்)அவர்களோடு பயணிகள் வருமிடத்தில
  
     ஜூலை மாதம் 25ம தேதி காத்திருந்தேன்.பயணிகள் வரத்துவங்கினார்கள்.அனேகமாக எல்லாருமே 
மாக எல்லாரும் வெளியேறிவிட்டார்கள்.லேசான ஏமாற்றம்  மனதிற்குள் . "சரி! ராசு!அந்தப்பக்கம் பார்ப்போம் "  ன்று கூறிக்கொண்டே நகர்ந்தேன்! முன் பார்த்திராத முகம் ! தொலைபேசியில் பேசியதுண்டு ! இடுகையில் ஸ்டாம்ப் சைசில் போட்டோ பார்த்தது.! தவற விட்டு விட்டோமா! மனதில் உளைச்சல் !

"சார்!" மெல்லிய குரல் என் காதருகில் கேட்டது! திரும்பினேன்! "அப்பா துரைதானே !" இறுகக் கட்டிக்கொண்டேன் !
 என்னை இவ்வளவு வயதானவனாக எதிர்பார்த்திராத அவர் நான் கையில் கம்போடு நடப்பதைப்பார்த்து மெல்ல மெள்ள என்றர்! என் மகனைவிட சிறிய வயது! உயரம் என்று கூறமுடியாது! தலை முடி குறைவு! மிகவும் நிதானமான உறுதியான பாவனைகள்!

"நசிகேத வெண்பா" என்ற அற்புதமான படைப்பை தமிழுக்கு தந்தவர்! கடோபநிஷதின் தத்துவ விசாரணையை மனதில் இறுத்தி அதனையும் மனிதவள,மற்றும் நிர்வாக துறையை அலசி ஆராய்ந்தவர்! அவருடைய கையை மெதுவாக அழுத்தி என் பாராட்டை மெலிதாக தெரிவித்தேன்! காரில்   ஏறும் பொது என்னை கவனமாக ஏற்றினார்!

வீட்டில் முத்து மீனாட்சி முகமன் கூறி வரவேற்றார்! புல்லாரெட்டி பழ ச்சாறு  கலந்த இனிப்பு, வீட்டில் தயாரித்த "தேன் குழல் " கொடுத்து குடிக்க காபியும் கொடுத்தோம்! என் மைத்துனரும் என் துணைவியாரும் அப்பாதுரை அவர்களை கேள்விகளால்
 துளைத்து எடுத்துவிட்டார்கள் .அப்பாதுரையவர்களின்   தந்தையார்  "வீரக்   கனல்"  "ஆலயமணி"   ஆகிய திரைப்படங்களை எடுத்தவர் என்பது  அப்போதுதான்  தெரியவந்தது.

அவருடைய தமிழ்ப் புலமைக்கு மரியாதை செலுத்தும் வகையில் பொன்னாடை
    போர்த்தி,வேஷ்டி,துண்டு,மற்றும் சில புத்தகங்களை வழங்கினேன்!மதிய உணவு முடிந்ததும், உலகப் பொருளாதாரம் , அந்நிய முதலீடு,அவர் குடும்பம் குழந்தைகள் என்று பேசிக்கொண்டிருந்தோம்.! மாலை நான்கு மணிக்கு விமானத்தில் ஹைதிராபாத் செல்லவிருப்பதால் காபி அருந்தி விட்டு புறப்பட்டோம் ! விமானநிலையத்தில் "stop and drop " ல் இறங்கும் பொது கை குலுக்கி விடை பெற்றார்!. கார் நகர ஆரம்பித்தது.! தொண்டை அடைத்தது.! அடிமனதில் "பதிவுலகம் வாழ்க" என்று குரலேழும்பியது !!!

5 comments:

இராஜராஜேஸ்வரி said...

"நசிகேத வெண்பா" என்ற அற்புதமான படைப்பை தமிழுக்கு தந்தவர்! கடோபநிஷதின் தத்துவ விசாரணையை மனதில் இறுத்தி அதனையும் மனிதவள,மற்றும் நிர்வாக துறையை அலசி ஆராய்ந்தவர்!

சந்திப்புக்கு வாழ்த்துகள்...

"பதிவுலகம் வாழ்க"

திண்டுக்கல் தனபாலன் said...

இனியதொரு சந்திப்பை பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி...

பதிவுலகம் வாழ்க...

தொடருங்கள்... வாழ்த்துக்கள்...

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

உங்களைச் சந்தித்து வந்ததைப் பற்றி என்னிடம் பலதடவைகள் சிலாகித்துச் சொன்னார் அப்பாதுரை.

அவர் சிலாகிப்புக்கு உரிய சந்திப்புதான் என்பது உங்கள் வார்த்தைகளில் தெரிந்தது.

அப்பாதுரை said...

நன்றி காஸ்யபன் சார். உங்களைச் சந்திக்க முடிந்ததில் எனக்கும் நிறைவு. கொஞ்சம் திக்குமுக்காட வைத்துவிட்டீர்கள் :)
ஆலயமணிக்கும் என் அப்பா/பாட்டனாருக்கும் தொடர்பு இல்லை. அந்த சமயத்தில் எல்லாம் கை நழுவிப் போனதாகச் சொல்வார்கள்.

ஓலை said...

Glad to hear your meet. :-)