அவர்களின் வருட சம்பளம்
114,00,00,000 ரூபாய்.........!!!
சன் குழுமத்தின் உரிமையாளர் கலாநிதி மாறன் அவர்களும் அவருடைய மனைவி திருமதி காவேரி மாறன் அவர்களும் ஆவர். இவர்களுக்கு ஆண்டு சம்பளமாக ஒவ்வொருவருக்கும்சுமார் 57கோடி ரூ வழங்கப்படுகிறது.அவர்களின் குடும்ப வருமானம் ஆண்டுக்கு 114 கோடி ரூ யாகும்.
காங்கிரஸ் கட்சியின் எம்.பி யும் ஜிண்டால் குழுமத்தின் தலைவருமான நவீன் ஜிண்டாலுக்கு ஆண்டுக்கு சுமார் 74 கோடி ஆண்டு வருமானம் வருகிறது.
சன்குழுமம் தவிர ஸ்பைஸ் ஜெட் என்ற விமானக்கம்பெனியும் மாறனுக்கு சொந்தம். அந்தக் கம்பெனி தற்போது மதுரையிலிருந்து கொழும்புக்கு விமான போக்குவரத்தை ஆரம்பித்துள்ளது. இதற்காகமதுரை விமான நிலையம் விரிவாக்கப்பட்டு சர்வதேச விமான நிலையமாக்க மத்திய அமைச்சர் அழகிரி முழு முயற்சியுமேடுத்துக் கொண்டார்.
அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் சோமசுந்தரம் என்ற இளைஞன் அண்ணாமலை பல்கலைகழகத்தில் படித்து வந்தான்.மிகுந்த கஷ்டப்படும்
குடும்பம். கல்லூரியில் படிக்க வைக்கமுடியாத அளவுக்கு வறுமை. சோம சுந்தரத்தின் தாய்மாமன் தந்தை பெரியாருக்கு தெரிந்தவர். அந்த இளைஞனின் கல்விக்கான சிலவை தந்தை பெரியார் ஏற்றுக் கொன்டார் படிப்புமுடிந்தததும் தன் தாய்மாமனோடு சமுக சீர்திருத்த அஈசியல் வாழ்க்கையை தேர்ந்தெடுத்தார்.மாமனின் பத்திரிகையான முரசொலியில் பணியாற்றினார்.சோமசுந்தரம் முரசொலி மாறன் என்றானார்.
முரசொலி மாறனுக்கு இரண்டு மகன்கள் ஒருவர் கலாநிதி மாறன்.
மற்றொருவர் தயாநிதி மாறன்.இரண்டு மகன் களும் தொலைக்காட்சித்துரையிலும் பத்திரிகைத் துறையிலும் செயல் பட்டனர். தயாநிதி அரசியலில் நுழைந்து மத்திய அமைச்சரானார். கலாநிதி ஊடகத் துறையில் இன்று இந்தியாவின் முக்கியமான புள்ளியாக செயல் படுகிறார் .
அமெரிகஜனாதிபதி பில்கிளிண்டன் வந்திருந்த பொது கலாநிதியை சந்தித்து பேசினார்.
சென்ற ஆண்டு பாரக் ஒபாமா வந்திருந்த போதும் கலா
நிதியை சந்தித்தார்
மாறன் சகோதரர்களுக்கு சுமார் 15000 கோடிக்கு சொத்து இருப்பதாக நம்பப் படுகிறது.
8 comments:
என்னவாகப் போகிறது வயித்தெரிச்சல் பட்டு ?
உங்களுக்கும் எனக்கும் வருமா அந்தத் திறமை?
உங்கள் கட்சிக்காரர் தான் பட்டிமன்றப் பேச்சாளர் லியோனி . இப்போது எங்கிருக்கிறார் தெரியுமா?
அப்படி என்ன நேர்ந்ததோ? அவருக்கு வந்த கஷ்டத்தை எப்படி தீர்த்தார்களோ?
சிவகுமரன் அவர்களே! கம்யூனிசம் என்றாலே எனக்கு சுந்தர பாரதி போன்ற அற்புதமான மனைதர்களின் நினைவுதான் வருகிறது .உங்களுக்கு மட்டும் வேறு பெயர்கள் நினைவுக்கு வருவது ஏன்?---காஸ்யபன்.
தலை சுத்துது... வாழ்க வளமுடன்...
அது என்ன மாயமோ தெரியல! எத்தனையோ ஆயிரம் வாலிபர்கள் செந்தமிழ் நாட்டின் பல மாவட்டங்களில் இருந்தும் இப்போதும் கோயம்பேட்டிலும் எழும்பூரிலும் அதிகாலைகளில் ஒரு பழைய சூட்கேசுடனோ ஏர்பேக்குடனோ வந்து இறங்கத்தான் செய்கிறார்கள் அய்யா! ஆனாலும் என்ன, திருக்குவளையில் இருந்து தகரப்பெட்டியுடன் வந்து இறங்கிய அந்த ஏழைத்தமிழனும் அவன் குடும்பமும் மட்டும்தான் ஆசியாவின் ஆகப்பெரிய கோடீசுவரர்கள் லிஸ்டில் இடம் பிடிக்க முடிந்தது என்பதன் மாயம் என்ன? மர்மம்தான் என்ன? ...இக்பால்
பணம் சம்பாதிப்பது ஒரு குற்றமா?
எமாற்றுவது,திருடுவது,கொள்ளையடிப்பது குற்றமில்லையா? அப்பாதுரை அவர்களே!---காஸ்யபன்
Post a Comment