தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வு...........!
தாழ்த்தப்பட்டவர்களுக்கு பதவி உயர்வில் ஒதுக்கிடு செய்யவேண்டும் என்று உச்சநிதிமன்றம் உத்திரபிரதேச அரசின் உத்திரவை ரத்துசெய் துவிட்டதாக கூக்குரலிடுகிறார்கள் .தீர்ப்பை . வாசித்துப்பார்த்தால் உயர்நிதி மன்றம் சில தகவல்களை தரும்படி கேட்டுள்ளது தெரியவரூகிறது.அது சரியானமுறையில் கொடுக்கப்படாததால் தீர்ப்பு பாதகமாகவந்துள்ளது.
_______
அப்படி என்ன கேட்டுவிட்டார்கள்.
1.இந்த உத்திரவால் பயன்படுவோர் பின்தங்கியவர்களா?
2.பதவி உயர்வு பெற்றவர்களில் தாழ்த்தப்பட்டவர்கள் எவ்வளவு சதம்?
3இதனால்நிரவாகத்தின் செயல் திறன் பாதிக்கப் படுமா?
உத்திரப் பிரதேச அரசு என்ன சொல்கிறது என்பது இருக்கட்டும் . அரசியல் சட்டத்தின்படி தாழ்த்தப்பட்ட மக்கள் பின் தங்கியவர்கள் தான் என்று வரையருக்கப்பட்டிவிட்டது.எனவே அதனை மீண்டும் கேள்விக்கு உட்படுத்தவேண்டிய அவசியமில்லை. மத்திய அரசின் கிட்டத்தட்ட 67 செயலாளர்களில் ஒரவர் கூட தாழ்த்தப்பட்ட சமுகத்தை செர்ந்தவரில்லை .முன்றாவதாக திறமை பாதிக்கப் படுமா?
திறமை merrit பதிக்கப்படும் என்று மேல்சாதி கூ குரலின் வெளிப்பாடு இது. இதனை வெகு சாதுரியமாக பயன் படுத்தி ஒதுக்கிட்டுக்கு எதிராக பயன்
படுத்துகிறார்கள். பிரபாத் பட்நாயக் என்ற பொருளாதார நிபுணர் இது பற்றி குறிப்பிடும் பொது ரயிலில் பயனச்ச்சிட்டு பரிசோதிப்பதில் என்னடா திறமை பாக்கணும்? கிளார்க்கு, கலக்டர்,என்னடாவேனும்? ஒரு விஞஞானி
மெரிட்ட பாக்கணும் ! என்கிறார் . விளையாட்டு துறைல பாரு! அதுலயும் பல கிழிசல் இருக்கு. அசாருதின் மெரிட் தான! பாவம் ஜெயிலுக்குபோகல! தங்கப்பதக்கத்தை போதைமருந்துக்காகபரிக்கலையா! ஒரு கோடி கொடுத்தா கடைசி முணு ஓவர்ல மூனு no paal போட தயாரா இருக்கான்! அப்புறம் என்னடா merit !
அவரு பேரென்ன! உமாசங்கர்! மெரிட் தான்டா! அவரு இப்ப எங்க? ஆளை அமுக்கிபுட்டிங்களேடா! அப்புறம் என்ன மேரிட்டு? ம..று ?
------------------------------------------------------------------------------------------------------------
எனக்கு கோபம் பொத்துக்கிட்டு வருது. இந்தியா சுதந்திரமடந்து 65 வர்சம் ஆச்சு.முதல் இருபது வர்சம் காங்கிரஸ் செத்தபயலுக ஆண்டாங்க! சரி ! பாக்கி 45 வேசம் இந்த திராவிட குஞ்சுகள் தான ஆண்டாங்க! தமிழக அரசுல தாழ்த்தப்பட்டவனுக்கு பதவி உயர்வுல ஒதுக்கிட்டு இல்லையே! தாழ்த்தப்பட்டவன் என்சம்மந்தி னு சோல்லியே ஏச்சுப்புட்டானுவளே!
தோல் திருமா கேக்கலியே! கிருஷ்ணசாமி கேக்கலியே!வைகோ.சிமான் கேக்கலியே! அவர்கள் கேக்கமாட்டார்கள்!
தொழிலாளர்கள் கேட்கிறார்கள்!
தொழிற்சங்கங்கள் கேட்கின்றன!
இடது சாரி சங்கங்கல்கேட்கிறன!
அகில இந்திய இன்சுரன்ஸ் உழியர் சங்கம் கேட்டு போராடி அதனைப் பெற்றுத்தந்தது!!
11 comments:
மத்தியப்பல்கலைகழகங்களின் இட ஒதுக்கீட்டில் கிட்டத்தட்ட40 சதமானத்திற்கும் அதிகமாக sc st காலிப்பணியிடங்கல் நிரப்பப்படவே இல்லை, என் செய்ய என் தமிழ்ச்சாதியே...
வாருங்கள் திளீப் அவர்களே! நீங்கள் குஜராத் மாநிலத்தில் பணியாற்றியுள்ளீர்கள்! ம.பி,உபி, ராஜஸ்தான் பீஹார் மாநில தலித்துகளின் நிலமையை அறிந்திருப்பீர்கள்.தமிழ்ச்சாதிமட்டுமல்ல ஒட்டுமொத்த தலித்சாதி விடுதலை முக்கியம் தோழரே!---காஸ்யபன்.
சமுதாய சமன்பாட்டிற்கு இன்னமும் நம் நாடு தொலைதூரம் பயணிக்க வேண்டுமோ? 65 வருடங்கள் போதவில்லை...
இந்த முறை பதிவில் எழுத்துப் பிழைகள் சில.. எடிட் செய்யுங்களேன் தோழர்!
மொகன் ஜி அவர்களே! என் பணிக்காலத்தில் கணினி எதிர்ப்பு தான் முழு மூச்சாக செய்த பணீ! இப்போது மண்டையில் ஏற மறுக்கிறது! (With vengence} ஒரு இடுகையை எழுதிவிட்டு அதனை பிரசுரிப்பதற்குள் நான் படும்பாடு! முயற்சிக்கிறேன்! பொருத்தருளுங்கள்!அன்புடன்---காஸ்யபன்.
இட ஒதுக்கீட்டில் பொருளாதார நிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். சாதீய இட ஒதுக்கீடு - நிரந்தர தீர்வல்ல -- இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ ?
முலாயம்சிங்யாதவ் பென்களுக்கு பிரதிநிதுத்துவ இடஒதுக்கீட்டில் தலித்களுக்கு, பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு வேண்டும் என்று முரண்டு பிடிக்கிறார். இந்த விசயத்தில் தலித்களுக்கு எதிராக உள்ளார் என்பதைவிட வாக்குவங்கி இங்கே அதிகம். தலித்களை எதிர்த்தால் முன்னேறிய சாதியின் ஆதரவும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறார்.
சிவகுமரன் அவர்களே! சாதியை உருவாக்கிவிட்டு,பிறப்பின் அடிப்படையில் ஒதுக்கி வைத்து விட்டு அடிமட்ட மனிதனுக்கு சலுகை என்று வரும்பொது சாதியைப் பார்க்கக் கூடாது என்பது என்ன நியாயாம்? படித்தவர்கள் நாம்? பாமரனைப் போல நிலை எடுத்தால் எப்படி?ஒதுக்கீடு இருந்தது.65 ஆண்டுகளில் இந்த கொடுமை ஒழிந்ததா? ஒழியாது.நம்மை இப்படி மொதவிட்டு இந்த சாதீய கட்டுமானத்தை நிரந்தரமாக்குவதும் அவர்களின் திட்டங்களிலொன்று! சமீபத்தில் Dr,Jhon cheella thurai எழுதிய Third Generation Dalit liberation என்ற சிறு நூலை படித்தேன். நிங்கள் சொன்ன விஷயமும் விருப்புவேறுப்பு இல்லாமல் விவாதிக்கப் பட்டுள்ளது.அதுபற்றி தனீ இடுகையிடுவேன்! மிக குறைந்த மனிதம் இந்த சலுகையை வரவேற்கும்! வாழ்துக்களுடன்---காஸ்யபன்
அய்யா.... நிரந்தர தீர்வல்ல என்று தான் சொல்கிறேன். கண்டிப்பாய் இட ஒதுக்கீடு வேண்டும். என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.
சாதி அடிப்படையிலான ஒதுக்கீடு தவறுதான் காஸ்யபன் சார்.
அது தீர்வே அல்ல - பிரச்சினையை அடக்கி வைக்க ஒரு துருப்பிடித்த பெட்டி.
சாதி அடிப்படையில் ஒதுக்கீடு வேண்டுவோர் தான் சாதியை ஆதரிப்பவர்கள். இதை ஏற்க மறுத்தாலும் இது தான் உண்மை.
ஒதுக்கீட்டுக்கு சட்டம் வேண்டும் என்று போராடுவதற்குப் பதில் சாதியே கூடாது என்று சட்டம் கொண்டு வரப் போராடலாமே? தொலை நோக்கு என்பது படித்தவர்களுக்காவது இருக்கலாமே?
சாதி ஒழிந்தால் ஒதுக்கீடு தேவையில்லையே?
பொருளாதார அடிப்படையில் ஒதுக்கீடு கோருவதும் ஆபத்தானதே.
அப்பாதுரைஅவர்களே! முதன் முதலாக "ஜாதி" என்ற பதம் புத்த மத ஏடுகளில் கானப்படுகிறது. சாதீயப் பாகுபாடு 2000 ஆண்டுகளுக்கும் முந்தியது. இத்தனை ஆண்டுகாலம் அதனை ஒழிக்க துரும்பை அசைக்கவில்லை.சாதீய தீண்டாமை காரணமாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக நெளியும் புழுவாக ஒருபகுதியை வைத்திருந்தோம்.இன்று அவன் கடைதேற சிலசலுகைகளை கொடுக்க வேண்டும் எனும்பொது அதே சாதியைக்காட்டி கொடுக்கக் கூடாது என்பது என்ன நியாயம். சாதி கூடாது,சாதி ஒழிக்கப்படவேண்டும் என்பது உங்களின் உய்ர்ந்த மனதை காட்டுகிறது. அதனால் பாதிக்கப்பட்டவனுக்கு குறந்தபட்சனிவாரணம் தான் ஒதுக்கீடு.---காஸ்யபன்
நிவாரணம் என்று வரும்பொழுது பிரச்சினையும் உருவாகிறது.
சாதியை ஒழிக்க முடியாவிட்டாலும், சாதிப்பெயரை வேண்டுவதை ஒழிக்க முடியும். முற்போக்கு என்று சொல்லிக் கொண்டு சாதி அடிப்படையிலான நிவாரணத்துக்குப் போராடுவதற்கு பதில் அத்தகைய அடையாளங்களை ஒழிக்கப் போராடலாம் என்பதே என் கருத்து.
Post a Comment