மே. வங்கத்தில் ரத்தத்தை விற்றோம்....!
அனல் மின் நிலையம்கட்டினோம்.......!!
1970ம ஆண்டுகளிலிருந்தே மின் பாற்றாக்குறை இருந்த மாநிலம் மே .வங்கம். 1978ல் இடது முன்னணி வந்ததும் பத்திரிகைகள் மின் வெட்டு பற்றியே எழுதின.. அதுவும் அவர்களுக்குப் பிடிக்காத ஜோதிபாசு அரசு என்றாகும் பொது பத்திரிக்கைகள் இரண்டுகைகளிலும் பேனாவை வைத்துக் கொண்டு எழுதின. இடது முன்னணி அரசு பக்ரேஷ்வரில் அனல் மின் நிலையம் கட்ட விரும்பியது. மத்திய அரசோ அணுமின் கட்டிக்கொள் என்று கூறியது. இடது முன்னணி அணு உலை என்ற பெயரே எங்கள் மாநிலத்திற்குள் உச்சரிக்கக் கூடாது என்றுமறுத்து விட்டது.
"
ஜோதி பாசுவின் பிடிவாதம்" மே .வங்க மக்கள்துன்பம் என்று எழுதின. அணு மின் திட்டங்களால் ஏற்படும் நன்மைகள் யாவை என்று கட்டுரைகள்\
எழுதின.இடது முன்னணி அசைந்து கொடுக்கவில்லை. தங்கள் மாநிலத்திலேயே ஏராளமாகக் கிடைக்கும் நிலக்கரியை பயன்படுத்திக் கொள்கிறோம் என்று மாநில அரசு சொன்னது.
ஒரு புதிய விதியப் போட்டார்கள். அசந்சாலில் இருந்து நிலக்கரி கொண்டுவர செலவாகாது.ஆனால் குஜராத்,மகாராஷ்டிரா மாநிலத்திற்கு கொண்டு போக போக்குவரத்து அதிகமாகும். உங்கள் ஊரில் தொழில் வளம்பெருகும்.நிலக்கரி இல்லாத மாநிலங்களில் முதலாளிகள் முதலீடு செய்யமாட்டார்கள்.இந்தியாவில் சமமான பிராந்திய வளர்ச்சி பாதிக்கப் படும். அதனால் frieght equaliser என்ற திட்டத்தை கொண்டுவருகிறோம் என்றது மத்திய அரசு .இதன்படி குஜராத்,மராட்டிய மாநிலங்களுக்கு ஆகும் போக்குவரத்து செலவின் ஒரு பகுதிய மீ.வங்கம் ஏற்க வேண்டும் .மின் உற்பத்தியின் முக்கியத்துவம் கருதி மாநிலஅரசு ஏற்றுக் கொண்டது. இறுதியாக திட்டத்திற்கான செலவு? இதோ, இதோ என்று 7அண்டுகளை மத்திய அரசு கடத்தியது. ஒருகட்டத்தில்மாநில அரசு தன சிலவிலேயே கட்ட முடிவு செய்தது.அப்போது தான் திட்டச்செலவிற்கு மக்களை அணுக முடிவு செய்தது.
மக்கள் ரத்த தானம் செய்வார்கள் அதன அரசு பெற்றுக் கொண்டு அந்தப் பணத்தில் திட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்தார்கள்.
உலகமே வியக்க மக்கள் ரத்தம் தந்தார்கள் ஒரு கட்டத்திலரத்ததை
சேகரித்து வைக்க இடமில்லாமல் திணற வேண்டியதாயிற்று..
90ம ஆண்டுகளிலிருந்து பக்ரேஷ்வரில் மின் உற்பத்தி நடக்கிறது.
இன்று மீ வங்கம் மின்சாரத்தில் முன்னணியில் இருக்கிறது.
அணு உலை கூடாது! கூடவே கூடாது !
இறக்குமதி செய்யப்பட அணுஉலைகள் கூடாது !
5 comments:
சிலிர்க்கிறது அய்யா.
நன்றி கெட்ட மக்கள் எதனை எதிர்பார்த்து அந்த அரசை தூக்கி எறிந்தனர் ?
நண்பர்களே! நூற்றுக்கும் அதிகமானவர்கள் இந்த இடுகையை பார்த்துள்ளனர்.ஆனாலும் ஒருவர்தான் பின்னுட்டமிட்டுள்ளார். காரணம் புரியவில்லை. ஒரு வேலை என் கணீணியில் த்வறு எற்பட்டுள்லதா என்று மருகுகிறேன்.---காஸ்யபன்
தலைக்கு ஒரு சீயக்காய் தாடிக்கு ஒரு சீயக்காய்...ஆதவனின் ‘தந்துகி’ வலைப்பூவை வாசிக்க வேண்டுகின்றேன்...இக்பால்
எப்படி சார் எங்களுக்கெல்லாம் இந்த மாதிரி தகவல்கள் எட்டுவதில்லை. ஆணி அறைந்தாற் போல சொல்லி விட்டீர்கள்.
இந்த மாதிரியான நல்ல , மக்கள் நலன் கருதி ,செயல் படுத்திய அரசாங்கம் , எந்த கட்சியானால் என்ன, பாராட்டப் பட வேண்டிய விஷயம்.
உங்களுக்கு , இதை வெளிச்சம் போட்டு காட்டியமைக்கு நன்றி.
Post a Comment