பிர்லா டாடா வை கிண்டல் செய்து கவிதை!
"சக்ரவ்யூகம்" திரைப் படத்தில்..........!
பிரகாஷ் ஜா என்ற இயக்குனர் "சக்ர வியூகம்" என்ற படத்தை எடுத்துள்ளார். இது முழுக்க முழுக்க மவோயிஸ்டுகள்,அவர்களுடைய போராட்டங்கள் ஆகியவற்றை சித்தரிக்கும் படமாகும்.இதில் ஒரு பாடல் காட்சி வருகிறது." விலைஉயர்வு"என்ற தலைப்பில் ஒரு படல் காட்சிப்படுத்தப் படுகிறது.
"முதலாளி மார்கள் லாப வெறியில் ஏழை மக்களை சுரண்டுகிறார்கள்" என்பதாக வரும் அந்தப் பாட்டில் "பிர்லா டாடா, அம்பானி பாடா" என்ற வரிகள் வருகின்றன.இதுபற்றி இந்தியாவின் மிகப்பெரும் முதலாளிகளின் பெயரையே குறிப்பிட்டு எழுதுவானேன் என்று இயக்குனர் பிரகாஷ் ஜாவிடம்கேட்டபொது." இது ஒரு சாதாரண அன்றாட பேச்சு. கிராமத்தில் எவனாவது பணக்காரத்தனத்தை காட்டி பெருமையாக அளந்தான் என்றால் " ஆமாம்! இவரு பெரிய பிர்லா,டாடா என்கிறொம். யாரவது ஒரு பெண் "டான்சுஆடினால் "ஆமாம்! இவ பெரிய மாதுரி தீட்சித்" என்கிறோம். இந்தப் படத்தில் போராளிகள் இந்த முத முலாளிகளின் மீது அவர்களுக்கு உள்ள கோபத்தைகாட்டுவதாக வருகிறது.ஊயிரற்ற, குறியீடான பெயர்களைசொல்லி சாரமற்று காட்சிகளை பதிவு செய்ய நான் விரும்பவிலிலை.வளர்ச்சி என்பது எல்லாரையும் அணைத்துக் கொள்வதாக இருக்க வேண்டும் என்று கருதுகிறேன். தோழிலதிபர்கள் எப்படியெல்லாம்காரியங்களைசாதித்துக் கொள்கிறார்கள்,என்பதையும். தங்கள் லாபத்தில் எப்படி குறியக இருக்கிறார்கள்.என்பதையும் சொல்ல விரும்பினேன். நவீன் ஜிண்டால் என்பவர் ஆண்டுக்கு 73 கோடி ரூ சம்பளம் வாங்குவதாக செய்தி.உள்ளது.ஏழை இந்தியன் தினம் 30 ரூ.கூலி வாங்குகிறான். இந்த மக்கள் இந்தியாவில் 75 சதமுள்ளார்கள். இது எப்படி எல்லாறையும் அணைத்துச் செல்லும் வளர்ச்சியாக இருக்க முடியும்.நம் நாட்டின் மொத்த உற்பத்தியில் 25 சதம் 100 பெர் கையில் இருக்கிறது" என்றார்.
"தணிக்கையில் யாரையும் குறைகூறவில்லை".என்று எழுத்தில் போட்டு விட்டு காட்சியைக் காட்டும் படி கூறியுள்ளார்கள்.
தொழிலதிபர்கள் தடை வாங்காமல் இருக்க வேண்டும்!!
6 comments:
தொழிலதிபர்கள் தடை போட்டால் அந்த படம் பிரபலமாகிவிடும். கண்டுகொள்ள மாட்டார்கள் .
இரண்டு வகை மனிதர்கள் இருக்கிறார்கள்.
1. people who like the idea of living, and
2. people who like living the idea.
நம்மில் பல பேர் முதல் வகை. இப்படி வாழ வேண்டும் அப்படி வாழ வேண்டும் என்ற எண்ணத்திலேயே வாழ்கிறோம் - தவிர அந்த வாழ்க்கையை வாழ்வதில்லை. எண்ண வாழ்வே அசல் வாழ்வாகி விடுகிறது.
சிலர் இரண்டாவது வகை. எண்ணம் வேறு செயல் வேறு என்பதைப் புரிந்து கொண்டவர்கள்.
நல்ல கணவனாகவோ மனைவியாகவோ தொழிலாளியாகவோ முதலாளியாகவோ நண்பராகவோ தாயாகவோ இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்பவர்களுக்கும் அசலில் வாழ்பவர்களுக்கும் இருக்கும் வித்தியாசமே நம் சமூக முரண்களுக்குக் காரணம். எண்ணத்தில் வாழ்பவர்களுக்கும் அசல் வாழ்வின் ஆயாசமும் சோர்வமும் ஏற்படுவதுண்டு. இவர்கள் சமூக அளவில் உண்மையில் உருப்படாதவர்கள். நம்மில் பெரும்பாலானோர் இந்த வகையினரே.
கலாநிதி மாறன் பற்றிய பதிவிலேயே எழுத நினைத்தேன். டாடா பிர்லாக்களின் இத்தனை வருட சம்பளத்தை யாராவது கேட்டுக் கணக்கு பார்ப்பார்களா? அந்த வகையில், திருடனாக இருந்தாலும், தமிழ் நாட்டிலிருந்து ஒரு தொழிலதிபர் வந்திருப்பது வரவேற்கப்பட வேண்டியதே.
சம்பளம் என்பது செய்யும் தொழிலுக்கு வாங்கும் ஊதியம். முதலாளிகளின் வேலைக்கேற்ற ஊதியம் வழங்குவதில் தவறேயில்லை. முதலாளிகளுக்கு மாதம் பத்தாயிரம் சம்பளம் என்றால் எந்த முதலாளி வேலைக்கு வருவான்?
ஏழையைச் சுரண்டாதே போன்ற வீண் சவடால்கள் ஏழையை இன்னும் ஏழையாக்குமே தவிர என்னாளும் முன்னேற வைக்காது.
தமிழ் வாழ்க, இந்தி ஒழிக என்ற மாயை தமிழ்நாட்டை எந்த நிலையில் கொண்டு வைத்திருக்கிறது என்பதை நன்றாக அறிவோம். ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்கிறேன் என்றவர்கள், ஏழைகளை அதிகமாக்கினார்களே தவிர குறைக்கவில்லை. (இறைவனைப் பிடிக்காத நிலையிலும் :)
அப்பாதுரை அவர்களே! சில ஆயிரங்களை ஓய்வூதியமாக பெற்றுக் கொண்டு வாழும் என்னை விட நீங்கள் கொஞ்சம் வசதியான வாழ்க்கையை நடத்துகிறீர்கள் என்றுதான் கருதுகிறேன், அதற்காக உங்களை அம்பானியாகவோ டாடா பேரனாகவோ கொள்ளவில்லை முதலாலிகளின் சுய லாப வேட்டையால் பாதிக்கப்பட்ட கோடானுகோடி மக்களீல் நீங்களும் ஒருவர் தான். முதலாளித்துவத்தின் மிகப் பெரிய பலம் அதனால் பாதிக்கப் பட்டவர்களே அதனை போற்றி புகழ்வது தான்.ஒரு நாளைக்கு 30ரூ கூலி வாங்குபவன் இந்த நாட்டில் 75 சதமானம். நவீன் ஜிண்டாலுக்கு ஆண்டுக்கு 73 கோடி சம்பளம். இந்த நாட்டின் G.D.P.ல் 25 சதமானம் 100 பேர் வசம். கிராமங்களில் கூலி பெசத்தெரியாத village idiots பார்த்திருப்பீர்கள். பண்ணையார் வீட்டு கிணத்திலிருந்து தோட்டியில் தண்ணிர் இறைத்துக் கொண்டே இருப்பான். மதியம் சாப்படும்,நாலு முழ வேட்டியும்(ஆண்டுக்கு) கிடைக்கும் பண்ணையார் வீட்டில்கலயாணம் வருகிறது என்றால் அவனுடைய மகிழ்ச்சிக்கு .அளவே இருக்காது..அவனுக்கு கறிச் சோறூ கிடைகுமென்பதால்.உருது கவிஞன் சைலேந்திரா கவிதையை ராஜ் கபூர் ஒரு படத்தில் பாடுவார்.
பேக நே சாதிமே
அப்துல்லா திவானா!
ஜைஸே மன் மோவ்ஸி மே
முஷ்கில் ஹை சம்ஜானா!
பண்ணையார் வீட்டில் கல்யான்மென்றால் அப்துலாவின் மகிழ்ச்சிக்கு ஈடு கிடையாது..அவனுக்குத்தான் அன்று கறிச்சோறு கிடைக்குமே!பதவுரை!
வெத்திலை பாக்கு கடைக் காரன் முதலாளித்துவத்தை பாது காக்க விரும்புகிறான்.என்ன செய்ய!
( no offence pl)---காஸ்யபன்
Very interesting !
Recently I read a blog post about the big people, hilarious. http://shovonc.wordpress.com/2012/07/14/leading-industrialist-misplaces-wife-2/
Post a Comment