அந்த ராமபக்தரின் .........!!
அன்னல்காந்தி அடிகள் நெஞ்சில் குண்டு பாய்ந்த போதும் "ஹே ! ராம்" என்று அழைத்தாக கூறுவார்கள்.
1946ம ஆண்டு இந்திய சுதந்திர சூரியன் அடிவானத்தில் தன சிவப்பு கிரணங்களை காட்டியபோதே கலவரங்கள் வெடிக்கத் தொடங்கி விட்டன .மே. பாகிஸ்தானிலிருந்து இஸ்லாமியர் அல்லாதவர்கள் விரட்டப்பட்டனர். லட்சக்கணக்கானோர் குடும்பம்குடும்பமாக தங்கள் உடமைகளைத்துறந்து
நிர்கதியாக அகதிகளாக தில்லிப் பட்டணத்து சாலைகளில் தங்கினர். அவர்களுக்கு உதவியாக நிவாரணப் பணிகளை செய்ய தொண்டர்களை வேண்டினார் காந்தியடிகள்.அந்த பாவப்பட்ட மக்களுக்கு குடி தண்ணிரி லிருந்து குடியிருப்பு வரை செய்து கொடுக்க ஏற்பாடு செய்ய விரும்பினார்.
ஏராளமான தொண்டரகள் வந்தனர். அவர்களின் பணியைப் பார்த்து மகிழ் ந்தார் காந்தியடிகள். அவர்களை நேரடியாக சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார். முகாம் முகாமாக சென்றார். ஒரு முகாமில் சில தொண்டர்கள் .அரை அவர்களுடைய அலுவலகத்திற்கு வரும்படி கேட்டுகொண்டனர்.
மறுநாள் அவர்களுடைய அலுவலகம் சென்றார் ..அவர்களுடைய தலைவர்கள் அவரை வரவேற்றனர்.காந்தியடிகளுக்கு அலுவலகத்தை
சுற்றி காண்பித்தனர். சிவாஜி மகராஜ், ரானா பிரதாப் ,பொன்ற வீரர்களின் படங்கள் பிரும்மாண்டமாக வைக்கப்பட்டிருந்தன.
அடிகள் விடபெற்று திரும்பும்நேரம் வந்தது தலைவர் காந்தியிடம் "எங்கள் அலுவலகம் எப்படி இருக்கிறது?என்று கேட்டார்.
"சிறப்பாக இருக்கிறது.நான் ஒரு ராம பக்தன். இவ்வளவு படங்கள் இருக்கும்போது சிறியதாகவாவது ஒரு ராமர் படத்தை வைத்திருக்கலாம்" என்றார்.
"சிவா ஜி யும் ரானாவும் முஸ்லிம்களை எதிர்த்தார்கள்.அதனால் அவர்கள் படங்களை வைத்திருக்கிறோம்! ராமர் முஸ்லிம்களை எதிர்க்கவில்லையே "
என்றார் தலைவர்.
அந்த அலுவலகம் ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங்க அலுவலகம்.
4 comments:
அப்போதே இந்தப் பிரச்சனையா...?
அப்பொதுதான் ஆரம்பித்தார்கள்! அதற்கான விதையைதூவியவர்கள் ஆங்கிலேயர்கள்.! ---காஸ்யபன்
Since their birth... Creating trouble
British = divide and rule
RSS= divide and polarize get vote bank and rule
ஹா!
Post a Comment