Thursday, October 25, 2012

பா.ஜ.க.தலைவர் "கட்காரி" நல்லவர்..........!!!





பாரதீய ஜனதா கட்சியின் தலைவராக இருப்பவர் கட்காரி. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினால் வளர்க்கப்பட்டவர். அவர்களால் பா.ஜ.கவின் தலைவராக பரிந்துரைக்கப்பட்டவர்.அத்வானி சேக்காளி என்று கூறமுடியாது.சமீப காலமாக நரெந்திர மோடியை ஆதரித்து வருகிறார்.



வசதியானவர். பா.ஜ.க-சிவசேனை கூட்டாட்சியில் பொதுப்பணித்துறை அமைசராக இருந்தார். அது தேன்கூடு. ஆனாலும் கடகாரி புறங்கையை நக்காமல் இருந்தார்



அவர் வீட்டில் மூன்று கார்கள் உண்டு.ஒன்று அவருக்கு. குடும்பத்தினர் பயன்பாட்டுக்காக ஒன்று.விருந்தினர்கள் வசதிக்காக ஒன்று.



ஒரு நாள் அவர் பயன்படுத்தும் காரின் பின்சீட்டில் பத்து வயது சிறுமியின் சடலம் கண்டெடு க்கப்பட்டது.அந்தச் சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் காயம் இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.போலீசார் விசாரித்து வருகின்றனர்.ஒரு வருடமாக!



பாவம்! அப்பாவிமனுஷன் ! அவர்மிது ஊழல் கூற்றச்சாட்டுகள் அவருடைய கமபெனியான "பூர்த்தி".

கரும்பு ஆலைகள். மின் உற்பத்தி என்று மக்கள் தோண்டாற்றி வருகிறது. அதற்கு பல கம்பெனிகள் அவருக்கு பண உதவி செய்துள்ளன. ஏகப்பட்ட கம்பெனிகள்- எல்லாமே அவருக்கு வேண்டியவர்கள் தான். சில கம்பெனிகளின் இயக்குனர் களின் பெயர்களையும் விலாசத்தையும் விசாரித்தபோது அப்படி யாருமே இல்லையென்று கூறுகிறார்கள். அந்தேரியில் உள்ள சேரிப்பகுதியில் ஒரு கம்பெனி இயக்குனர் முகவரி உள்ளது .அந்த குடிசை பூட்டப்பட்டுள்ள படத்தை "டைம்ஸ் ஆஃப் இந்தியா "போட்டுள்ளது.



இன்னும் மூன்று கமபெனியின் இயக்குனராக இருப்பவர் அவருடைய காரை ஒட்டும் டிரைவர். அவருடைய வீடு -கோடிகணக்கில் மதிப்புப்பெறும் வீடு - நாகபுரியில் உள்ளது.. தன் டிரைவரின் மீது கட்காரிக்கு பாசம் அதிகம்.



டிரைவர் நல்லவர்! வல்லவர்! எல்லம் தெரிந்தவர்! எல்லாம்--எல்ல்ல்ல்லாம் தெரிந்தவர்!





நம்ம காரைக்குடி ஆடிட்டர் ராஜா,தஞ்சாவூர் கணெசன், நாகர்கோவில் ராமகோபாலன் ஆகியோருக்கும் தெரியும் கட்காரி நல்லவர் என்பது. . .வர் ......!!!

7 comments:

அப்பாதுரை said...

ஊழலில் எல்லாக் கட்சிகளும் #1 போல.

kashyapan said...

ஊழலில் எல்லாகட்சிகளும் ஒன்று போல இல்லை. திரிபுராவில் முதலமைச்சர் அவருடைய சம்பளத்தை கட்சிகுக் கொடுத்துவிட்டு அவர்மனைவியின் பென்ஷனில் வாழ்கிறார்.அவர்மனைவி வெளியே செல்வதென்றால் வடகை ஆட்டோவை பயன்படுத்துகிறார். கட்சியின் எம்பிகள்,எம்.எல் எ.க்கள் சம்பளத்தை கட்சிக்கு கொடுத்துவிட்டு கட்சி கொடுக்கும் அலவன்சில் குடும்பம் நடத்துகிறார்கள். பொதுச் செயலாளர் பிரகாஷிலிருந்து சாதரண முழு நெர ஊழியர் வரை ஒரே அலவன்சு தான். தவறு செய்தால் தண்டனை நிச்சயம். முன்னாள் முதல்வர் நிருபன் சக்ரவர்த்திபதவியிலிருந்து விலகும் பொது ஒரு தகரப்பெட்டியில் இரண்டு மாற்று உடை, சிலபுத்தகங்களோடு கட்சி அலுவலகத்த்ல் வந்து தங்கினார்.அவர் கட்சியின் நிலைபாட்டை எதிர்த்து செயல்பட்டதற்காக கட்சியிலிருந்து கடசிக் காலத்தில் வெளியேற்றப்பட்டார். லோக சபா சபாநாயகர் சோம்னாத் சடர்ஜி கட்சிக் கட்டுப்பாட்டை மீறினார் என்பதற்காக சபானாயகராக இருக்கும்போதே அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.எல்லாக் கட்சியும் ஒன்றுதான் என்பது மிகவும் பொதுமைப்படுத்தப்பட்ட கருத்தாகும். . Highly generalised ! அப்பாதுரை அவர்களே! வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.

அப்பாதுரை said...

திரிபுரா அரசு ஏதாவது கம்யூனிஸ்ட் கட்சிப் பிரிவா?

hariharan said...

எடியூரப்பாவை இடறிவிட்டு கட்காரியை காப்பாற்றிவருகிறார்கள். ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்.

kashyapan said...

அப்பதுரை அவ்ர்களே! இந்திய கம்யூனிஸ்ட கட்சி(மார்க்சிஸ்ட்) கட்சி தலமையில் இடதுமுன்னணி ஆட்சி திரிபுராவில் நடக்கிறது.---கஸ்யபன்.

veligalukkuappaal said...
This comment has been removed by the author.
veligalukkuappaal said...

'கலயத்தில் உறங்கும் சாம்பலும் ஒரு ஜோடி காலணிகளும்' என்ற எனது கட்டுரையில் (புதுவிசை ஜனவரி-மார்ச் 2009) இப்படி எழுதி இருந்தேன்:/புனாவில் உள்ள கோபால் கோட்சேவின் வீட்டில், நாதுராம் கோட்சேவின் சாம்பல் ஏன் இன்னும் கரைக்கப்படாமல் கலயத் தில் உறங்குகின்றது என்று பேச வேண்டியுள்ளது; 'ராமருக்கு கோவில் கட்டுவதாக மசூதியை இடித்தவர்கள், ஐந்து வருடம் முழுமையாக ஆட்சியில் இருந்தபோதும் ஏன் கட்டவில்லை?' என்று கேட்க வேண்டியுள்ளது; கடந்த ஐந்து வருடங்களாக காங்கிரஸ் கட்சி கொண்டு வந்த பல தேசவிரோத, மக்கள் விரோத மசோதாக்களை நாடாளுமன்றத்தில் விவாதிக்காமல் அப்படியே நிறைவேற்றும் வண்ணம் அவையில் கூச்சல் குழப்பத்தை உண்டுபண்ண பாரதீய ஜனதாக் கட்சி காங்கிரஸ் கட்சியிடம் இருந்து ஒவ்வொரு கூட்டத்தொடரிலும் எவ்வளவு அன்பளிப்பாகப் பெறுகின்றது என்பது பற்றியும், இரண்டு கட்சிகளுக்கும் இடையே திரைமறைவில் இருக்கின்ற கள்ள உறவு பற்றியும் பேச வேண்டியிருக்கின்றது/. இது எழுதப்பட்டது 2009இல். இப்போது நிலக்கரி சுரங்க ஊழல் உள்ளிட்ட பல முறைகேடுகளை வைத்து ‘மன்மோஹன் அரசு பதவி விலக வேண்டும்’ என பிஜேபி நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் அமளி செய்தது; மார்க்சிஸ்ட் கட்சி ‘சபையில் விவாதம் நடத்த வேண்டும்’என வலியுறுத்தியது, அந்த நாடாளுமன்றத்தொடரும் ஒண்ணுக்கும் பிரயோசனம் இல்லாமல் போனது. ஆனால் நிலக்கரி சுரங்க ஊழல் பிஜேபி-யின் அரசு இருந்தபோதே தொடங்கி விட்டது என இப்போது தெரிகின்றது!நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் அமளி செய்த ரகசியம் இதுதான்! அது மட்டும் இல்லை, கர்நாடகாவில் மாறிமாறி பிஜேபியின் முதல்வர்கள் ஊழலில் முதலிடம் பெற போட்டி போடும் விசயமும் விவாதத்துக்கு வரும் என்பது பிஜேபி அறியாததா!...இக்பால்