"ஒரு மாநில அமைச்சர்
ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்
ஒரு நகரத்தந்தை "
1967ம் ஆண்டு தமிகத்தில் காங்கிரஸ் ஆட்சி விழந்தது. 69ம் முதலமைச்சர் அண்ணாதுரை அவர்கள் மறைகிறார். கருணாநிதி அவர்கள் முதலமைச்சராக பதவி ஏற்கிறார். அரசியல் நிலமையில்மாற்றமேற்படுகிறது . 1972ம் ஆண்டு நடைபெற வேண்டிய தேர்தல் ஒரு ஆண்டு முன்னதாக 1971ம் ஆண்டு நடக்கிறது.
தி.மு.க-காங்கிரஸ் கூ ட்டணி சார்பில் ஒரு அணியாக நின்றார்கள். மார்க்சிஸ்ட் கட்சி தன்னந்தனியாக போட்டி இட்டது.60 க்கும் மேற்பட்ட சட்டமன்றதொகுதியிலும் , நாடளுமனரதொகுதியிலும்
போட்டியிட்டாலும் மிக்கவும்பரிதாபகரமாக தோல்வியடைந்தது. ஏன் மதுரை நாடாளுமனரதொகுதியில் போட்டியிட்ட அந்த சிவப்பு சூரியன் பி.ராமமுர்த்தி "டெபாசிட் "இழந்தார்". திண்டுக்கல்லில் சட்டமன்றத்திற்கு போட்டியிட்ட எ.பாலசுப்பிரமணியம் ஒருவருக்கு மட்டும் "டெபாசிட்"கிடைத்தது...
மார்க்சிஸ்ட் கட்சி இதோடு ஒழிந்தது என்று பத்திரிகைகள் எழுதின. கட்சி அணிகளுக்கு சோர்வு தட்டியது.
அப்போதெல்லாம் "தீக்கதிர்" அலுவலகம் சென்று வருவதுண்டு. அனேக
மாக இரவு பத்து மணிவரை அங்கிருப்பேன். ஒருநாள் நான் விடு திரும்பிய பிறகு காலையில் நண்பர்கள் பரபரப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள்.
"அரசரடி ,முக்கில் தீக்கதிர் பத்திரிகையை எரித்துக் கொண்டிருக்கிறார்கள். கட்சிக் கொடியை வெட்டி எறிகிறார்கள்.கலவர சூழல்.குறிப்பாக சோமசுந்தரம் காலனி அருகில் திமுகவினர் இதனை செய்கிறார்கள் "
என்று பேசிக்கொண்டிருந்தனர்.
தீக்கதிர் பத்திரிகையில் வந்த செய்திதான் இதற்கு காரணம் என்றும் தெரிந்து கொண்டேன் முதல் பக்கத்திலொரு பாக்ஸ் செய்தி.
"ஒரு மாநில அமைச்சர் ,
. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்
ஒரு நகரத்தந்தை " ஆகியோர் விடுகளில் சோதனை
என்ற செய்திதானது
"இந்து" பத்திரிக்கை "according to vernacular daily " என்று செய்தியை பட்டும் படாமலும் வெளியிட்டிருந்தது.தினமலர் ,தந்தி,எதுவும் வெளியிடவில்லை.
அன்று "எவர் வரினும் நில்லேன் அஞ்சேன்" என்று ஊ ன்றி நின்ற பத்திரிக்கை இப்போது 50 ம் ஆண்டுவிழாவை கொண்டாடுகிறது.
மெஷின் மென், அச்சுக்கோப்பவர் பக்கம் பார்ப்பவர், சைக்கிளில் பேருந்து ,மற்றும் ரயில் நிலையத்திற்கு கொண்டு சேர்ப்பவர் ,பிழை திருத்துபவர், துணை ஆசிரியர், ஆசிரியர்
,
தோழர்களே! இதயம் விம்ம ,கண்கள் பனிக்க
உங்களுக்கு ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.
7 comments:
தமிழ்ப் பத்திரிகை வரலாற்றில் மிகக் கண்ணியமான ஒரு இடம் தீக்கதிருக்கும், வெகுநாட்கள் அதற்கு ஆசிரியராக இருந்த உங்களுக்கும் உண்டு.
துவக்கம் முதல் இன்று வரை பங்கெடுத்த அத்தனை பேருக்கும் என் வாழ்த்துக்கள் காச்யபன் ஐயா.
Long live theekkathir, it is a voice of working class.
நினைவுகள் அருமை! வாழ்த்துக்கள்!
conviction endures change. வாழ்த்துக்கள்.
தீக்கதிர் படிக்காமல் போனதற்கு வருந்த வைக்கிறீர்கள்.
அப்பாதுரை அவர்களே! www.epaper.theekkathir.org ஆன் லைனில் வாசிக்கலாம். மதுரை,சென்னை,கோவை,திருச்சி பதிப்புகள் வருகின்றன. சென்னை பதிப்பு எளிதாக வரும். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் பண்டிகை தின வாழ்த்துக்கள்---காஸ்யபன்.
அன்புத் தோழர் காஸ்யபன் அவர்களுக்கு
ஆஹா..மிகச் சுருக்கமாக ஒரு வரலாற்றுத் தடத்தை நினைவு கூர்ந்திருக்கிறீர்கள்
உள்ளது உள்ளபடி
பெருமிதமிக்க வரலாற்றைப் படைப்பவர்கள்
தங்களது கடமையை துணிவோடு செய்கின்றனர்
உண்மைக்கான விலையைத் தரத் தயங்குவதில்லை அவர்கள்
நாளைய வரலாறு நம்மை எப்படிப் பார்க்கும், எப்படிப் பேசும் என்றெல்லாம் ஏதும் திட்டமிடுதல் இல்லாத நாணயமிக்க நேர்மையான பங்களிப்பு அவர்களது...
நன்றி
எஸ் வி வேணுகோபாலன்
Post a Comment