அந்த மருமகனின் நூறாவது ஆண்டு இது .....!
அந்த மறுமகனின் நூறாவது ஆண்டு இது..........!
பதிவுலகநண்பர் ஒருவர் இது மறுமகன்களின் காலமென்றுபின்னூட்டமிட்டிருந்தார். அவர் ராபர்ட் வாதெராவையும், (சோனியாவின் மாப்பிள்ளை) ரஞ்சன் பட்டசார்யா (வாஜ்பாயின் மாப்பிள்ளை யையும் குறிப்புடுகிறார். ஆனால் நான் குறிப்பிடுவது அவர்களையல்ல
அலகாபாத் நகரத்திலொரு பள்ளிக்கூடம். அதன் முன்னல் காங்கிரஸ் தொண்டர்கள் .ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். ஒரு அம்மையார் தலமையில்நடக்கிறது. அவருடைய பத்துவயது மகளும் வந்திருக்கிறார்.கடுமையன வேய்யில். வெப்பம்தாங்க முடியாமல் அந்த அம்மையார் மயங்கி விழுந்து விடுகிறார்.இதனை பர்த்துக்கொண்டிருந்த சிறுவன் ஒடிவந்து அவருக்கு அருந்த நீர் கொடுத்து அவரை ஆசுவாசப்படுத்தி அவர்கள் வீட்டில் கொண்டு சேர்க்கிறான்.
அந்த அம்மையார் பெயர் கமலா நேரு.
அந்த சிறுமியின் பெயர் இந்திரா பிரியதர்சணி.
அந்த ப்தினாங்கு வயது சிறுவனின் பெயர் ஃபரோஸ் ஜஹங்கீர் காந்தி.
அதன் பிறகு அந்த ஃபரோஸ் காந்தி கமலாம்மையாரின் உற்ற தோழனாகிறான். படிப்பை நிறுத்திவிட்டு முழுமூச்சாக காங்கிரஸ் இயக்கத்தில் ஈடுபடுகிறான். காசநோயால் அவதியுறும் கமலா அம்மையாருக்கு, உதவியாக இருக்கிறான்.மருத்துவனைக்கு அழைத்துசெவ்வதிலிருந்து,மருந்து கொடுப்பதுவரை பொறுப்பாக செய்கிறான்" .ஆனந்தபவனின்"அங்கமாகிறான்.
ஃபரோஸ் ஜஹங்கீர் காந்தி ஜரதுஷ்ற்றமதம்(பார்சி).தன் அத்தை வீட்டிலிருந்து படித்துவருகிறான். காங்கிரசில் சேர்ந்து பொராட்டத்தில் கலந்துகொள்கிறான்.காங்கிரசின் வானர செனையில் ஒரு அங்கம் அவன்.(Monkey Brigade) அவனோடு சிறையில் இருந்தவர் பின்னாளில் பிரதமராய் வந்த
லால் பகதூர் சாஸ்திரியாவார்.
கமலா அம்மையாரின் காச நோய் சிகிச்சைக்காக ஸ்விஸ் நாட்டிற்கு செல்லும் பொது அவருக்கு உதவி செய்ய ஃபாரோஸும் பொகிறான். நோயின் கடுமை தாங்கமல் கமலா இறக்கிறார். அவ்ர் இறக்கும் போது அருகிலிருந்தவர்கள் கணவர் பண்டித ஜவஹர்லால்நேரு.மகள் இந்திரா பிரிய தர்சனி,ஃபாரோஸ்காந்தி ஆகிய மூவர் மட்டுமே.
ஃபரோஸ் மெல் படிப்புக்காக லண்டன் செல்கிறார். இடதுசாரி பேராசிரியர் லாஸ்கி அவ்ர்களின் பொருளாதர பள்ளியில் சேர்கிறார். இந்திரா பிரிய தர்சனியும் லண்டனில் படித்துக் கொண்டிருக்கிறார். இருவருக்கும் ஏற்கனவே பரிசயமுள்ளதால் நெருங்கி பழகி.நட்பு காதலாக மலர்கிறது இந்த்யா வந்ததும் திருமணம்செய்து கொள்ள முடிவெடுக்கிறார்கள்.
தந்தை ஜவஹருக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லை. மகத்மா கந்தியிடம் மகளின் மனதை மாற்ற
கெட்டுக்க்ள்கிறார். "நாங்கள் திருமனம் செய்து கொள்ள முடிவு எடுத்துவிட்டொம்..நீங்களும் எந்தந்தையும்வந்து நடத்தினால் மகிழ்ச்சியடைவோம் நீங்கள் வரவில்லை என்றாலும் திருமணம் நடக்கும் என்று இருவரும் அறிவித்து விட்டனர்.
திருமணம் நடந்தது. அப்பொது தான் "வெள்ளையனே வெளீயேறு" போராட்டம் நடந்தது.கணவனும்மனைவியும்போராட்டத்தில்கலந்து கொண்டு சிறை சென்றனர்.
(தொடரும் )
(தொடரும்)
3 comments:
அவருடைய பெயர் பெரோஷ்கான் என்பதுதானே. அவர் காந்தியின் பெயரை பின்னால் சேர்த்துக்கொண்டது காந்தியின் மேல் கொண்ட அன்பால் எனக்கேள்விப்பட்டிருக்கிறேன். விளைவுதான் இன்றைக்கு நாடு இந்திரா காந்தி தொடங்கிஅன்னிய முதலீடு இல்லாமல் இல்லாமல் இந்தியா முன்னேறும என்று சொல்லித்திரியும் ராகுல், வருண் என்று வந்திருக்கிறது.இந்தியா காந்தி களின் தேசமாகிப்போனது.
நல்ல தகவல், பெயரைப் பார்த்தால் இஸ்லாமியப் பெயராகத் தெரிகிறது ஆனால் பார்ஸி என்கிறீர்கள்? எப்படி பார்ஸிகளும் ஜஹாங்கீர் என்று வைத்துக்கொள்வார்களா?
நாராயணன் அவர்களே! ஹரிஹரன் அவ்ர்களே! ஜரதுஷ்டிரர் என்ற மகான் அன்றய ஈரான் நாட்டில் வசித்தார்.அன்பினை பொதித்த அவருடையா சிஷ்யர்கள் ஜரதுஷ்டிர மதத்தை உருவாக்கினர்.இது பிடிக்காத இரானிய மன்னர் அவர்களை விரட்டி அடித்தார்.கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கே வந்து இந்தியாவில் தஞ்சமடைந்தனர்.பாரசிகத்திலிருந்து வந்ததால் இவர்களை "பார்சி"கள் என்றும் அழைப்பார்கள். உருவ வழிபாடு கிடையாது. நெருப்பு தான் தெய்வம். ஹரிஹரன் அவர்களே! J .R.D .டாடாவில் J என்பது ஜஹாங்கீர் என்பதைக் குறிக்கும். நாராயணன் அவர்களே! காந்தி என்பது குடும்பப் பெயர்.மகாத்மா காந்திக்கும் இவர்களுக்கும்சம்மந்தமில்லை.நெல்லை மாவட்டத்தில் காந்தி என்ற பெயர் ஆணூக்கும் பெண்ணுக்கும் சகஜம் காந்திமதி நாதன்,காந்திமதி அம்மாள் ஆகியொரை காந்தி என்று அழைப்பார்கள்..வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.
Post a Comment