"ஜனாதிபதி"யின் முன்னால்
நடித்தேன் .........!!!
1957-62 ம் ஆண்டுகளில் ஹைதிராபாத்தில்பணியாற்றிக் கொண்டிருந்தேன் ! அப்போது மெட்ராஸ் மாகாணத்தில் திராவிடக் குஞ்சுகள் "வடக்கு வாழ்கிறது,தெற்கு தேய்கிறது என்று ஓலமிட்டுக் கொண்டிருந்தார்கள் ! இதற்கு மாற்றாக ராஜாஜி "தட்சிணப் பிரதேசம் " என்று பூச்சாண்டி
காட்டிக்கொண்டிருந்தார்!
இந்த இரண்டையும்முறியடிக்க காங்கிரஸ் ஒரு வழி பண்ணியது ! அதன் படி டெல்லியில் இருக்கும் ஜனாதிபதி தென் இந்திய மக்களுக்கு அருகில் ஆண்டுக்கு ஒரு மாதம் தங்க வேண்டும் என்றும் ஒவ்வோரு ஆண்டும்
ஆகஸ்டுமாத வாக்கில் ஹைதிராபாத்தில் தங்க வேண்டும் என்றும்முடிவு செய்தது !
ஆந்திரப்பிரதேசம் உருவாகி கர்னூலிலிருந்து ஹைதிராபாத் தலைநகராக மாறியது!கடல் கரை யோர ஆந்திர ரெட்டிகளும், கம்மா நாயுடுகளும் ஹைதிராபாத்தில் ஆதிக்கம் செய்ய இன்னும் ஆரம்பிக்கவில்லை! சமஸ்தானத்தின் நல்லதும் பொல்லாததும் மிச்ச சொச்சங்களாக நடைமுறை இருந்தது!
ஹைதிராபாத்தில் தமிழர்கள்,கன்னடியர்கள்,மலையாளிகள் அரசு பணியில் இருந்த காலம் அது! நிஜாமின் திவான் பகதூராக ஆராவாமுத ஐயங்கார் என்பவர் இருந்த காலத்தில்.தஞ்சை,திருச்சி, திருனெல்வேலி சாமிமார்கள் அரசு வேலைகளில் வந்தார்கள் ! அவர்களுக்காக உருவானது தான் South Indian cultural Association ஆகும்! உயர் நிதிமன்ற நீதிபதி சீனிவாசாசாரியார் தலைவராக இருந்தார்! A G "s .postal audit ,income tax ஆகிய மத்திய அலுவலகங்கள் பூராவும் நம்மூர் ஆட்கள் தான் ! sica கொடிகட்டி பரந்த காலம் அது!
நாடகம் போட முடிவாகியது ! ag ஆபிஸ் கணேசன் இயக்குனர்! சீனிவாசன்
(IRS ),ta நரசிம்மன் நடிப்பு ! என்போன்ற எடு பிடிகளுக்கு சின்ன பாத்திரங்கள்! தேவனின் "மிஸ்.ஜானகி "நாடகம் !
அது ஆகஸ்டு மாதம்! ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் ஹைதிராபாத்தில் தங்கி இருக்கிறார்! பெரியவர்கள் மூலம் அவரை அழை க்க முடிவாகியது !அவரும் எற்றுக் கொண்டார்! ஒரு நிபந்தன ! நாடகம் ஆரம்பித்து அரைமணி நேரம் கழி த்து கிளம்பி விடுவார்! இது ஏற்பாடு ! நிர்வாகிகள் இதனை வெளியில் சொல்ல வில்லை! தெரிந்ததும்கலாட்ட ஆரம்பித்தது!
கதாநாயகன் ,நாயகி அரை மணி நேரம் கழித்து தான் வருவார்! பலவாறு யோசனை செய்து கதாநாயகனும் கதாநாயகியும் வரும் காட்சியை முதலில் கொண்டுவர முடிவாகியது! நாங்கள் விடுவோமா! நாங்களும் ஜனாதிபதிமுன் நடிக்கக் கூடாதா ? மீண்டும் சிக்கல் !
இறுதியில் ஒரு ஆள் தெரியும் அளவு திரை திறக்கப்படும்! ஒவ்வொரு பாத்திரமும் அவர்களுடைய முக்கிய வசனத்தை ஜனாதிபதி பார்க்க சொல்லிவிட வேண்டும்! இந்த ஜனநாயக நடைமுறையை உருவாக்கியதில் எனக்கும் பங்கு உண்டு! எல்லாரும் என்னையும்பாராட்டினார்கள் !
எனக்கு உள்ள வசனத்தில் "ஐயா ! பக்கத்து சந்தில் இருக்கிறான் " என்று கூவ வேண்டும்!
என் முறை வந்தது! பயமாக வும் டென்ஷனாகவும் இருந்தது!இந்தியாவின் ஜனாதிபதி முன் நடிக்கப் போகிறேன் !
இயக்குனர் சியாமளம்- எல்.ஐ .சி என்று அறிவித்தார்! 1 ஆயிரம் முறை சொல்லிப் பார்த்த வசனம் ! சென்றேன்! நின்றேன் ! போகஸ்\லைட் என்மீது விழுந்தது !
"ஐயா ! சக்கத்து பந்தில் இருக்கிறான் " என்று கூவினேன் !
அரங்கமே அதிர சிரிப்பொலி !
ஏன் சிரித்தார்கள் ?
சக நடிகர்கள் மேடையில் இருப்பவர்கள் எல்லாருமே கைகொட்டி சிரித்தார்கள் !
ஜனாதிபதி சிரித்தாரா ?
தெரியவில்லை !
ஏன் சிரிக்கிறார்கள் !!!
6 comments:
காஸ்யபன் சார் வாய்விட்டு சிரித்தேன்! நீங்கள் நாடகம் போட்டதே ஒரு நாடகம் ஆக அல்லவா இருக்கிறது?! எப்படியும் ஜனாதிபதியின் கவனத்தை ஈர்த்திருப்பீர்கள்.. அவை சிரிப்பில் ஆர்ப்பரிக்கும் போது, தமிழ் தெரியாத ஜனாதிபதியோ நீங்கள் ஏதோ நகைச்சுவையான வசனத்தை அள்ளிவிட்டிருக்கிறீர்கள் என நினைத்திருப்பார். எப்படியும் வெற்றி உங்களுடையதே! Good Meloprop..
ஹஹஹா!
யார் சிரித்தால் என்ன? ஜனாதிபதி முன் நின்று பேசினீர்களே, அதான். சரியாகச் சொல்லியிருந்தால் சிரித்திருப்பார்களா? (ஒருவேளை, வேண்டுமென்றே அப்படிச் சொன்னீர்களோ? timing?)
இங்கேயும் பொதுவுடமைச் சிந்தனையா? பலே.
நன்றி அய்யா
பெரிய மனிதர்களைத் தலைமை தாங்க அழைத்தாலே இது போன்ற ரசனைமிக்க நிகழ்ச்சிகள் நடப்பது வாடிக்கை தான்.
என்ன வெச்சுக் காமடி கீமடி பண்ணல்லியே ந்னு ராஜேந்ரப்ரஸாத் மனசுக்குள்ள நினைச்சிருப்பாரோ என்னவோ?
கபாஷ் சாஸ்யபன் சார்!
Post a Comment