Saturday, April 27, 2013

"சார் ! நுள்ளிட்டான் சார் "........!!!


ஒண்ணாப்பு படிக்கிற புள்ளய "சார் ! சங்கரு நுள்ளிட்டான் சார்! " "சார் ராமு என் சிலேட்டை அழிச்சிட்டான் சார் " நு சொல்லிக்கிட்டே இருக்கும் !

அதே மாதிரீ தான் ராம சுப்பய்யர் வாரிசுகள் தங்கள் பத்திரிக்கை களில் சீனாக்காரன், நுள்ளிபுட்டான்! துப்பிட்டான் நு சொல்லிக்கிட்டே இருப்பானுக! இது பரவாயில்ல சாமி! வடநாட்ல பாத்திங்கனா! டைம்ஸ் ஆப் இந்தியாவில இருந்து அம்புட்டு பயகளும் சீன எதிர்ப்பு  செய்தி போடாம இருக்க மாட்டாங்க! 

"லடாக்குக்கு கிழக்க இருக்கற பிரச்சின ஸ்தல பிரச்சினை ! அதை எப்படி சமாளிக்கணும்னு எங்களுக்கு தெரியும் நு" நம்ம தலைப்பா கட்டு சொல்லிட்டாரு!

ஆனா இதப்பத்தி முழு விபரத்தை ஒரு பய சொல்லல ! தப்பு ...தப்பு ..."இந்து "சொல்லியிருக்கு !

கொஞ்சம் வரலாற்றை பாக்கலாமா?

1950ல   இந்தியா குடியரசாச்சு! ஒவ்வொரு நாடும் அந்த நேரத்துல தங்களோட அரசியல் எல்லை எதுன்னு அறிவிக்கும்!  நம்மூர்லயும்   அத செஞ்சாங்க! surve of India இது பற்றி வரை படம் தயாரிச்சு 1950 ஆண்டு வெளியிட்டது ! 
 
பாகிஸ்தானுக்கும் நமக்கும் இடைல  உள்ள எல்லை இப்ப இருக்கிற மாதிரியே தான் அப்பமும் போட்டிருந்தாங்க!

சீனா வுக்கான எல்லைய பொதுவா மக்மோகன் கோடு ன்னு காட்டினாங்க! ஆனா தூர கிழ்க்குப்பகுதில கலர மாத்தி unidentified நு போட்டாங்க! tirap division நு காட்டினாங்க! மத்தியபகுதில தான உத்திர காண்ட்,இமாசல்பிரதேசம் லாம் இருக்கு!

காஷ்மீருக்கு கிழக்குபகுதி,அக்சாய் சின் அங்கெல்லாம் notdefined போட்டாங்க !

இந்தப்படத்தை உலகம்பூரா அனுப்பினாங்க!

என்ன எளவோ தேரியல? 1954ல பல்டி அடிச்சுட்டாங்க! எல்லா  படத்தையும் வாபஸ் வாங்கி இப்ப சொல்ற மாதிரி படத்தை போட்டாங்க!

கெட்டிக்காரன்னு நினச்சு நாடாளு மன்ற லைப்ரரில இருந்தும் படத்தை நீக்கிட்டாங்க! 

ஆனா மத்த நாடுகளுக்கு 1950ல் அனுப்பின படம் இருக்குமே! அத என்ன செய்ய!

1955,56,57,ஆண்டுகளில் சீனா வாங்க பேசி முடிச்சுடுவம்னு சொல்லி குப்பிட்டது! சூ -யேன் -லாய் இந்தியாவுக்கே வந்தார்! 

அவர்கூட பேசப்படாது நு குடியரசுத்தலைவர் ராஜேந்திர  பிராசாத் சாதிச்சார்! மீறி  பேசினா நான் பதவிய ராஜினாமா செய்வேன் நார்!   

நெருவாலஒண்ணும் செய்ய முடியல !

இப்பம் அவன்" ரோடு போட்டான்கோடு போட்டான் "நு புலம்பறாங்க! 

"If ever a proposition is made by which a border is settled through military action then that  must certainly be wrong " என்றார் இ.எம்.எஸ் .!

   புத்தியோட  போழைச்சுக்குங்கப்பா!!! 
8 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

அப்பாதுரை said...

பிரசாத் ஏன் பேச மறுத்தார்?

அப்பாதுரை said...
This comment has been removed by the author.
kashyapan said...

அப்பதுரை அவர்களே! பிரசாத் அடிப்படையில் இந்து மத சனாதன ஆதரவாளர்! கம்யூனிச வேறுப்பாளார்! சீனாவோடு சமாதானமாகபொகக்கூடது என்று மனதார நினைப்பவர்! அவருக்கு அதரவாக படேல் போன்ற பெருந்தலகள் உண்டு! அம்பெத்கர் கொண்டுவந்த இந்து மத சட்டத்தை தடுத்தவர்! என்ன கொல்லாதயும்! உங்க ஊர் பத்திரிகையாளர் நெவ்லிஷூட் என்பவர் "Indias Chaina war " என்று புத்தகமெழுதியுள்ளார்! விலாவாரியாக இருக்கு! வாழ்த்துக்களூடன்---கஸ்யபன்!

மோகன்ஜி said...

காஷ்யபன் சார்! இந்த விவரம் இப்போதே கேள்விப்படுகிறேன். பிரச்சினை இடியாப்ப சிக்கலாய் மாறிவருகிறது. கொடி மீட்டிங்கா போட்டு இழுத்துகிட்டே போவாங்க போல.. நெவ்லிஷூட் புத்தகத்தில் சொன்னதை ஒரு நாலு வரி எழுதுங்களேன் ஸார்.

kashyapan said...

மொகன் ஜி அவர்களே! படிச்சது, கெட்டது,கேள்விப்பட்டது நு எழுதரென்! 69ம் ஆண்டு வாக்கில் இந்தியாவின் சீன யுத்தம் ங்கர புத்தகத்திய ஒம்மமாதிரி ஒத்தர் கிட்ட அடிச்சேன்! அத வேற ஒரு பாவி அமுக்கிட்டான்! ஞாபகத்துல எழுதறேன் ! ஒரு சிக்கலும் வராது! சிவகாசி வியாபாரி சீனாவோடு நல்லுறவு வேணூம்ங்கான்! எத்தன கோடி தீப்பெட்டி விக்கலாம் ஒரு நாளைக்கு! யோசியும்! பெரிய கம்பேனி கூடாதும்பான்! கார்பொரேட் யுத்தம் ! அம்புட்டு பயகளும்துட்டுக்கு அலயற பயகள்! 62ல சீன தூதரகத்துக்குள்ள ஆட்ட மேய விட்டாங்க பா.ஜ.க. ! 62 க்குப் பொற்வு சீனாவுக்கு போன முதல் அமைச்சர் வாஜ்பாயி! இதுவும் கடந்து போகும் சாமி!---காஸ்யபன்!

மோகன்ஜி said...

சீனத்து முனைப்பு மண்ணுக்காய்... இங்கோ அது பொன்னுக்காய்...
அரசியல் நிலைப்பாடுகள் இவை இரண்டுக்கும் வெளியில் ஒட்டுக்காய் .. நல்லது நடக்கட்டும் என்று நம்பத்தானே வேணும்?

அப்பாதுரை said...

தேடிப்படித்துப் பார்க்கிறேன்.
ஒரு ஜனாதிபதி (தானே?) தன் சுய விருப்பு வெறுப்பு காரணமாக நாட்டுக்குத் தேவையானதை செய்ய மறுப்பது எத்தனை கொடுமை! இந்தியாவின் தலைகள் எல்லாமே இப்படித்தான் இருந்து வந்திருக்கின்றன! வெட்கம்.