Thursday, September 05, 2013

உண்மையும் ,கருத்தும் .....?

உண்மை - கருத்து  ! இரண்டும் ஒன்றா ? வெவ்வேறா ?
நெருப்பு சுடும் ! இது உண்மையா ? இல்லைகருத்தா ?
என்னைக் கேட்டால்  உண்மை என்பேன் !

" நெருப்பு இருக்கிறது ! தொட்டேன் ! சுட்டது !" அதனால்   உண்மை என்பேன் ! சின்னப் பையனிடம் கேட்டாலும் உண்மை என்பான் ! அதை விளக்கச் சொன்னால் விழிப்பான் ! "ம்ம் ..எங்க அம்மா அப்பா சொன்னாங்க ! தாத்தா சொன்னாங்க ! என்பான் ! அவனுக்கு அவர்கள் சொன்ன கருத்து அது !

இரண்டும் இரண்டும் நான்கு ! இது உலகம் எற்றுக் கொண்ட உண்மை ! பல கணித  விதிகளுக்கு   உட்பட்டு தர்க்க ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று ! சின்ன பையனிலிருந்து பேராசிரியர் வரை ஏற்றுக்கொண்ட உண்மையான கருத்து !

ஒரு கருத்து தர்க்கரீதியாக எல்லாராலும் எற்றுக் கொள்ளப்பட்டதால் உண்மையாகிவிடுமா ?

ஒரு உண்மை நிரூபிக்கப் படாததால் கருத்து என்று ஒதுக்கப்படுமா ?

சென்னையில் நாத்திகத் திருவிழா நடந்தது !

"கடவுளில்லை !கடவுள்  உண்டு என்பவன் முட்டாள் !" என்று பதாகை களோடு ஊர்வலம்வந்தார்கள் !

உலகம் பூராவிலும் உள்ள நாத்திகர்களுக்குமிவர்களுக்கும் வித்தியாசமுண்டு ! இவர்களுக்கும் ஆத்திகர்களுக்கும் அடிப்படையில்வித்தியாசமில்லை ! இருவருமே கடவுளை அவருடைய இருத்தலை நம்புகிறார்கள் !

கடவுள் இல்லை என்பது உண்மை ! அதனை   நிருபிக்க சங்கடப்படுகிறது ! அதனாலேயே அதனை  கருத்து என்று பெரும்பாலானவர்கள்   ஒதுக்குகிறார்கள் ! 

நம்ம ஊர் கருப்புச்சட்டை நாத்திகர்கள்  அறிவியல் ரீதியில் கடவுள் இல்லை என்பதை நிறுவ முற்படுவதை விட கடவுள் எதிர்ப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் !

உண்மையான நாத்திகனுக்கு கடவுள் எதிரி அல்ல ! கடவுள்   இல்லை
  என்பவனுக்கு இல்லாத ஒன்று எப்படி எதிரியாக முடியும் ? 

( நண்பர் அப்பாதுரை எழுதி வரும் கலர் சட்டை நாத்திகம் என்ற இடுகையிலிருந்து எடுத்த பகுதியோடு நான் எழுதியதும் , ! சுட்டி naathikan . blog spot )


















































1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆம் ஐயா கடவுள் எதிர்ப்பிற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்