Wednesday, October 01, 2014

இந்தியாவின்(ல் ) சுகாதாரம் .......! 



ஆப்பிரிகாவிலிருந்து  காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள காந்திஜி இந்தியா வந்தார் ! அவருடைய நோக்கம் ஆப்பிரிகாவில்மக்கள் பிடிட்டிஷாரால் நடத்தப்படுவதை இந்திய தலைவர்களுக்கு எடுத்துச்சொவது தான் !

மாநாட்டுத்திடலில் உள்ள சுகாதாரக் கேடுகளைப் பார்த்து ஒரு வாளியையும்,விளக்குமாறையும் எடுத்துக்கொண்டு கழிப்பிடங்களை சுத்தம் செய்ய ஆரம்பித்து விட்டார் !

தனிமனிதசுத்தம் என்பத சமூகத்தின்  சுகாதாரத்தைமேமப்டுத்தும் என்பதில் நம்பிக்கை உள்ளவர் அண்ணல் காந்தி அடிகள் ! 

பா.ஜ.க அரசு என்ன காரணத்தினால் காந்தி ஜெயந்தியை சுகாதார தினமாக அறிவித்துள்ளது என்பது தெரியவில்லை ! 

37 லட்சம் அரசு ஊழியர்கள் உறுதி எடுக்கவிருக்கிறார்கள் என்று அரசு விளம்பரங்கள் ஓலமிடுகின்றன !

மதுரையில் தொழில்குழுமம் நடத்தும்  அறக்கட்டளை யின் சார்பாக  கல்லூரி ஒன்று நடக்கிறது ! அதில் படிக்க அருப்புக்கோட்டையிலிருந்து 12ம் வகுப்பு தேறிய பதின்ம வயது மாணவி வந்தார் !

கல்லூரி கட்டிடத்தைப் பார்த்து பிரமித்தவ்ர் கழிவறைக்கு அடிகடி சென்றுவந்தார் ! "ஏன்மா ! உடம்பு சரியில்லையா ? "என்று கேட்டபோது தலையக் குனிந்து கொண்டு "சார் ! நான் கிராமத்திலிருந்து வருகிறேன் ! நாங்கள் இருட்டிய பிறகு வெட்ட வெளியை தான் பயன் படுத்துவோம் !இங்கு பளிங்கு கற்களால் ஆனா கழிப்பறையை  பார்த்துக் கொண்டே இருக்க தோணுதுசார் !" என்றார் ! 

சென்னையில் 6வது வகுப்பிலிருந்து 12 வது வகுப்பு வரை பதின்வயது பெண்குழந்தைகள் லட்ச்க்கணக்கில்படிக்கிறார்கள் ! அந்தப் பள்ளிகளில் கழிப்பறைகள் கிடையாது ! அந்தக்குழந்தைகள் காலையிலிருந்து குடிநீர் அருந்துவது இல்லை ! குடித்தா ல் ஏற்படும் உபாதைகளை தவிர்க்கிறார்கள் !

கிராமப்புறங்களில் கழிப்பிடம் இல்லாத வீடு- மன்னிக்கவும் -இருப்பிடங்களே அதிகம் ! 

அரசு ஊழியர்கள் உறுதிமொழி எடுப்பது என்பது கண்துடைப்பு நாடகமே !

Sanitation and Health care is a bigger task Modi Sir !!!








2 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

சுதந்திரம் பெற்று இத்துனை ஆண்டுகள் ஆகியும், அடிப்படை வசதிகளில் கூட நிறைவி பெறவில்லை என்பது வருத்துதற்குரியது ஐயா

சிவகுமாரன் said...


டாஸ்மாக் வருமானத்தில் அக்கறை காட்டும் அரசு சுகாதாரத்தில் காட்டுவது இல்லை. அதில் என்ன வருமானமா வருகிறது?
வெட்கப்பட வேண்டிய விஷயம்.