Sunday, October 19, 2014

சுப்பா ராவ் -வேணுகோபால் ஆகியோர் 

தகவலுக்காக ..........!!!


 நாவல்கள் திரைப்படமாவது பற்றி சுப்பாராவின் கட்டுரையை படித்தேன் !(தீக்கதிர் -இலக்கிய சோலை) ! The irresistable  s .v . தன்  பங்கிற்கு ஒரு மின் அஞ்சலை அனுப்பியிருந்தார் !  அதன் தாக்கத்தினால் இந்த தகவல்களை கொடுத்திருக்கிறேன் !

இற்று விழும் இந்து மத கோட்பாடுகள் பற்றி 20ம்னூற்றாண்டின் முற்பகுதியிலேயே அற்புதமான நாவலை எழுதியவர்  விபூதி பூஷன் பந்தோபாத்யாயா ! 

சத்யஜித் ரெயின் புகழ்பெற்ற triology  என்று வர்ணிக்கப்படும் பதேர் பாஞ்சாலி ,அபராஜிதா,அபூர்  சன்சார் , அந்த நாவலின் திரை வடிவம் !

முன்ஷி பிரேம்சந்தின் சிறுகதை "கப்ஃன் " ! மிருணாள்சென் இதனை தெலுங்கு மொழியில் "ஒக்க ஊரு கதா " என்று கொடுத்தார் ! சாதுமெஹர் ,வாச்தேவராவ் நடித்த அற்புதமான படம் அது !

பீஷ்ம சஹானி ஆங்கில பேராசிரியர் ! பால்ராஜ் சஹானியின் இளைய சகோதரர் ! பிரிவினையின் போது ஆர.எஸ் .எஸ் ,கம்யுனிஸ்ட் கட்சி ஆகியவை செய்லாற்றியதை சித்தரிக்கும்  "தமஸ்" என்ற நாவலை எழுதினார் ! 

கோவிந்த் நிகிலானி அதனை டெலிபிலிமாக தயாரிக்க ஆறுமணி நேரப்படம்  ஆறுவாரம் தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது ! ஓம் பூரி,சாக்சேனா, பாதக்,சிக்ரி  என்று இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்கள் நடித்தது !

U . R .அன்ந்தமூர்த்தியின் சிறு கதை "கடஸ்ரார்த்தா " ! திரைப்படமாக கன்னடத்தில்வந்தது ! "நானாபடேகரின்"நடிப்புஇன்றும் கண் முன்னால நிற்கிறது !

கன்னடத்தில் வந்த "சம்ஸ்காரா" வை மறக்க முடியுமா ! கன்னட திரை உலகை அகில உலகத்திற்கும் அறிமுகப்படுத்தியபடம்  அது !

முன்ஷி பிரேம் சந்தின் "சேவாசதனம் " 39 களில் தமிழில் வந்தபடம் ! S .D. சுப்புலட்சுமி நடித்தார் ! பாப நாசம் சிவம் ஆகியோரும் உண்டு ! கே.சுப்பிரமானீயம் இயக்கினார் !

கல்கி எழுதிய "தியாக பூமி "  எம்.எஸ் சுப்புலட்சுமி அறிமுகமான படம் ! பாபநாசம் சிவன் ஆகியோர் நடித்த படம் ! கே.சுப்பிரஂமணியம் தான் இயக்கினார் !

ஸ்டூடியோசிஸ்டம் முடிந்து ஸ்டார் சிஸ்டம் ஆரம்பமான பிறகு தமிழ் திரை உலகம் சீரழிய ஆரம்பித்தது !

உமாசந்திரனின் நாவலை ரஜனிக்காக சிதைத்தனர் ! பாலு மகேந்திரா இருந்ததால் முழுவதுமாக சிதைய வில்லை ! 

"சித்தி "சிறுகதையை எழுதிய புதுமை பித்தன் அவர்  மறைந்த பிறகு தான் வந்தது ! நல்லதாகப் போயிற்று !

தமிழ் திரை உலகம் பற்றி நிறைய நல்லதும் பொல்லாததுமாக எழுத இருக்கிறது ! பார்க்கலாம் .......!!!


  



 படம் அது !

1 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

குடும்பத்தினர் , உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்