Sunday, October 04, 2015

(சிறு கதை அல்ல )





"சுத்தமான இந்தியா "

(ஸ்வாத் பாரத் )


அதனை டவுன் என்று கூற முடியாது. பெரிய நகரமும் அல்ல . சுற்றுவட்டர கிராமனகளிலிருந்து படிக்க வரும்கல்லூரி அது.

மீனாட்சி முதலாம் ஆண்டு படிக்கிறாள் .தினம் பஸ்ஸில் வரவேண்டாம் என்பதால் விடுதியில் தங்கி படிக்கிறாள். அவளுடைய அறையில் தங்கி படிப்பவள் தான் மணிமேகலை .

மீனாட்சி மத்தியதர குடும்பத்தை சேர்ந்தவள் . தந்தை அருப்புக்கோட்டை அருகில் வங்கியில்பணியாற்றுகிறார். 

மணிமேகலையை மத்தியதரம் என்று கூறிக்கொள்ளலாம் . அப்பா "சாக்னா" கடாயில் சரக்கு மாஸ்டர்  .  நகரத்தில் வாடகை கொடுக்க முடியாது என்பதால் அருப்புக்கோட்டை அருகில் ஒரு கிராமத்தில் விடு எடுத்து தங்குகிறார். மனைவியும் பத்து வயது மகனும் கிராமத்தில் உள்ளார்கள். 

சனிக்கிழமை யை ஒட்டி  விழா வந்ததால் விடுமுறை. விடுதியில் யாரும் இருக்க மாட்டார்கள். வெள்ளிக்கிழமை மாலை மீனாட்சியும்மணிமேகலையும் தங்கள் வீட்டிற்கு போகவேண்டும்.

மணி மேகலைக்கு  விருப்பமே இல்லை.ஒன்று இர்ண்டு பேர் கூட விடுதியில் இருக்கமாட்டார்கள். விடுதி ஊழியர்கள்கூட கிளம்பிவிடுவார்கள். வேண்டா வெறுப்பாக அவளும் மீனாட்சியோடு கிளம்பினாள் .

"ஏட்டி மணி! வீட்டுக்கு தெரியுமா டி ?"

"தம்பி ரோட்டு விலக்குல   நிப்பான் !"

அருப்புக் கோட்டைக்கு மூன்று கிமீ முன்னால ரோடு திரும்பும். அந்த விலக்குல இறங்கி மணிமேகலை தம்பியோட கிராமத்துக்கு போக வேண்டும் 

டிராவல் பாக் சகிதம்  இரண்டுபேரும் கீழெ இறங்கினார்கள். 

"கொஞ்சம் ஒக்காருவோம்டி " என்றாள்   மணிமேகலை. 

"சனியனே ! என்ன ஆச்சு ?"

"இருடி?"

"இங்கேருந்து பஸ் ஸ்டாண்டு போகணும் "

"போவோம்! போவோம் ! ஏட்டி ! "ரெஸ்ட் ரூம் " போய்டு வந்திடுதேன்! ஊருக்கு போனா திறந்த வெளில தான் ஒக்காரணும்"

மீனாட்சி மணிமேகலையை பார்த்தாள். கண்களில் ஈரம் கசிந்து கொண்டிருந்தது . பாவம் சனியும் ஞாயிறும் தாண்டி திங்கள் கிழமை வரை அடங்கி ,அடக்கி  இங்குவந்து "ரெஸ்ட் ரூம் " .....

மணிமேகலை "ரெஸ்ட்  ரூம். " கதவை தாழிடும் சத்தம் கேட்டது.

மீனாட்சி தன "அன்றாய்டு" பேசியை விரித்தாள். யூ ட்யூபில்  காட்சி விரிந்தது.

"சிலிகான் பள்ளாத்தாக்கில் பாரதப்பிரதமர் நரேந்திர மோடியின் கையை "நாதெள்ள ரெட்டி " குலுக்கி விட்டு தன கையை மீண்டும்மீண்டும் துடைத்துக் கொண்ட காட்சி பலமுறை விரிந்தது.......










1 comments:

நிலாமகள் said...

கதையல்ல... நிஜம்! இன்னும் எத்தனை காலம்?
முடிப்பில் இருக்கு பெருங்கதை.