Monday, March 06, 2017





தாமிரவருணி ,

இந்திரா நூயி ,

உபரி நீர் ...!!!






ஜார்கண்டு மாநிலத்தில் ஒரு ஆற்றின் நீளத்தில் 60 கி.மீ தூரத்திற்கு அந்நிய நாட்டு கம்பெனிக்கு விற்றவர்கள் நமது ஆட்ச்சியாளர்கள். உபரி நீரை கொடுக்க தயங்கவா செய்வார்கள் !

 தாமிரவருணியை தேர்ந்த்டுக்க தனிப்பட்ட காரணங்கள் உண்டு. இந்தியாவில் ஏன் உலகத்திலேயே  அந்த மாவட்டத்திலேயே பிறந்து அந்த மாவட்டத்திலேயே கடலில் சங்கமிக்கும் நதி -அதுவும் ஜீவ நதி உண்டென்றால் அது தாமிரவருணி ஆகும்.

அதன் காரணமாக அந்த நிதி நீர் எந்தவிதமான "தாவா "வுக்கும் உட்படாது எந்த ஒரு மாநிலத்தையும் கலந்து கொள்ள வேண்டிய அவசியமில்லை . உபரி நீரை  எவரோடும்   பங்கு போடும் அவசியம் இல்லை. 

ஒவ்வொரு மாநில அரசையும் "சரிக்கட்ட வேண்டிய " தேவை இல்லை. தமிழக  அரசை மட்டும் கவனித்தால் மட்டும் போதும்.

சென்னையில் பிறந்து தமிழகத்தில்  வளர்ந்த இந்திரா நூயி அம்மையாருக்கு இந்த "பூகோள மகிமை " தெரியாமல் இருக்கமுடியுமா?

கொடுத்தது,   தி.மு.க  வா,    .அ .தி.மு.கா.  வா , காங்கிரஸா, ப.ஜ.க  வா என்று ஆலோசிக்க வேண்டியதில்லை."அவிசாரி"க்குள் "பதிவிரதை"யை தேடி அலைவதை போன்றதுதான் நான்கு பெரும் பெறவேண்டியதை பெற்று கொடுக்க வேண்டியதை கொடுப்பவர்கள் என்பதை எவருக்கும் சந்தேகம் இருப்பதாக  தெரியவில்லை. 


இன்று வந்த நீதிமன்ற தீர்ப்போ , வழக்கோ ஆச்சரியப்பட  ஏதுமில்லை.  

பலர் நீதி மன்றத்தை குறை  சொல்கிறார்கள். தமிழக அரசு  உபரி நீரை  தான் கொடுக்கிறோம் என்று அடித்து சொன்ன பிறகு உயர் நிதி மன்றம் வேறு என்ன தீர்ப்பினை கொடுக்க முடியும்.


 The culprit is the state government ! 


சாட்ச்சிகளையும், சட்டத்தையும் வைத்துக்கொண்டு தீர்ப்பு சொல்லும் மன்றத்தில்  இயற்கை நியாயம் கிடைக்குமா ?

ஒரே வழி ! உச்ச நீதிமன்றம்   செல்வதுதான் . 

அதற்கு முன் தற்போதைய தீர்ப்பிற்கு "தடை" வாங்க வேண்டும்.


முடிகிற காரியம் தான்.!!!


சிந்தாமல் சிதறாமல் செயல்பட்டால் !!!!


0 comments: