Sunday, March 26, 2017




NEET  தேர்வு வந்தால் ,

+2 பள்ளிகளை மூடிவிடலாம்.....!!!







மும்பையில் எனக்கு தெரிந்த குடும்ப பையன். நன்றாக படிப்பான்.. தற்போது அமெரிக்காவில் கை  நிறைய சமபளம் வாங்கிக்கொண்டு வசிக்கிறான்.அவனைப்பார்த்து ஏழு வருடம் ஆகிவிட்டது .சமீபத்தில் திருமண பத்திரிக்கை கொடுக்க வந்திருந்தான்.பேசிக்கொண்டிருந்தோம்.

"சவுகரியமா   இருக்கிறாயா ? "


"அதெல்லாம் ஒன்னும் குறை சல் இல்லை தாத்தா ! " 


"என்னடா ! ஒருமாதிரி இழுக்கறே ! IIT கிடைக்காம NIT கிடைச்சதாலயா?

அவன் IIT  ல படிக்க ஆசைப்பட்டான்.  பத்தாம் வகுப்பு படிக்கும் போதே முனைப்பாக இருந்தான். ஏகப்பட்ட டியூஷன் சென்டர்களை விசாரித்தான். மகாராஷ்டிராவில் தனியார் பயிற்சி பள்ளிகள் ஏராளம். பத்தாம் வகுப்பிலிருந்தால் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி கொடுப்பார்கள். சில சிறப்பு மையங்கள் உண்டு  .அவர்களிடம் இரண்டு வருடமும் முழு நேரமும் படிக்கவேண்டும் அங்கு  "சீட்" நிசசயம். குரைந்தது 1.5 லடசத்திலிருந்து 2 லட்சமாகும்.டியூஷனுக்கு மட்டும்.

+2 பள்ளி க்கு போக முடியாது  அது பற்றி கவலைப்பட வேண்டாம்.   டியூஷன் மையம் கவனித்துக்கொள்ளும். இங்கு ஏராளமான "உப்புமா " பள்ளிகள் உண்டு.அவர்களுக்கும் இந்த டியூஷன் மையத்திற்கு TIE  UP .உண்டு . இரண்டு ஆண்டுகளும் தங்கள்பள்ளியிப்படித்ததாக சாண்றிதழ்  கொடுப்பார்கள்.இது தவிர அந்தப்பள்ளியிலேயே +2 பரிட் சை சென்டரை போட்டு எழுதவும்   விடுவார்கள். 


இந்த பையனும் அப்படி படித்தவன். அவனுக்கு IIT இல்லாமல் Nit  இடம் கிடைத்தது. 


"இல்லை தாத்தா ! நல்ல Impressionable age . அந்த school life miss ஆனது தான் சங்கடமா இருக்கு." என்றான்.

ஏழு வருடம் ஆகிவிட்டது.மகாராஷ்டிராவில் இப்படி  குறு க்கு சா லோட்டியவர்களில் முக்கிய மாணவர்களிலொருவர் மறந்த அமைச்சர்  மகாஜன் .

பா.ஜ .க ,சிவசேனை தலைவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாவட்டத்தை குத்தகைக்கு எடுத்து உயர்கல்வி சேவை செய்து வருகிறார்கள்.

இப்போது NEET தேர்வு வரப்போகிறது .


முதலைக்கு நாக்கு கிடையாது.முழுங்கத்தான் செய்யும்.

இந்தமுதலைகள் தயாராகி நிற்கின்றன .



தமிழகத்தில் என்ன குறைந்து விடுமா என்ன ?




0 comments: