Thursday, March 30, 2017

ராகுல் காந்தியின் 

தாத்தா...!!!உலகப்பொருளாதாரம் பல சந்தர்ப்பங்களில் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது.முதலாளித்துவ நாடுகள்தங்கள் நெருக்கடிகளை தங்கள்  அடிமை நாடுகள் மீது சாமர்த்தியமாக சுமத்தி விடுவார்கள். தென்கொரியா,மலேசியா, கிரீஸ் , பிரேசில்,அர்ஜன்டைனா,தெற்கு  எமன், ஏன் ஐரோப்பிய ஒன்றியம் என்று உதாரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

பலநாடுகள் சிக்கி தவித்துள்ளன. இந்தியா மட்டுமிதில் தப்பித்து வந்துள்ளது. நமது முன்னோர்கள் நமது பொருளாதார வளர்ச்சிக்கு போட்ட அடித்தளம்.அப்படியானது.

அதில் மிகவும் முக்கியமானது பொதுத்துறையை கேந்திர மான துறைகளில் உருவாக்கியதும்வளர்த்ததுமாகும்.

குறிப்பாக ஆயுள் காப்பீட்டு துறையில் 50 ம் ஆண்டுகளில் தனியார் துறை கொடிகட்டி பறந்து கொண்டிருந்தது.மாதா மாதமொரு சிறு தொகையை கொடுத்து விட்டு 30 ஆண்டுகள்கழித்து பாலிசி தாரர் தனக்குள்ள உரிமைத்தொகையை பெற்று கொள்வார் முதலாளிமார்கள்  முப்பது ஆண்டுகளில் இந்த தொகையை வைத்து முதலடாக்கி லாபம்பெறுவார்.

பலமுதலாளிகளிந்த பணத்தை தனதாக்கிக்கொண்டு உரிமைத்தொகை கொடுக்கும் பொது கம்பெனியையை திவலா கிவிட்டதாக சொல்லி மோசடி  செய்வார்கள்.


இப்படி மோசடி செய்த ராமகிருஷ்ண டால்மியாவை கை து செய்து தண்டனை கொடுத்து சிறையில் அடைத்து களி திங்க  வைத்தவர் அந்த இளம் நாடாளுமனற உறுப்பினர்.அது மட்டுமல்லாமல் தனியார் காப்பீட்டுத்துறையில் செய்யும் இந்த  மோசடியை தடுக்க ஆயுள் காப்பைட்டு கழகம் (LIC )  என்ற அமைப்பை உருவாக்க மு ன் நின்றவரும்  அவரே.

இன்று லடக்கணக்கான் கோடி சேமிப்பை மக்கள் நலனுக்கு பயன்படுத்த அரசுக்கு துணையாக இருப்பது  இ ந்த ஆயுள்காப்பீட்டு கழகம்தான்.

50 ஆண்டுகளில் பெட்ரோல் போன்ற எரிபொருளை அந்நிய நாட்டு கம்பெனிகள் விற்று வந்தன இந்தியா தொழிற்துறையில் வளர்சசியடைய  திட்டங்களை தீட்டிக்கொண்டிருந்த காலம் அது.

தவளையை பிடிக்க வரும் தண்ணீர்ப்பாம்பு போல இந்த அந்நிய காம்ப்பெனிகள் நாக்கை நீட்டிக்கொண்டு வந்தன.


ஷெல்,பார்மாஷெ ல், மொபைல் ஆயில், ஸ்டான் வாக்,டெக்சாஸ் ,என்று பகாசுரக்கம்பெனிகள் இருந்தன. இவற்றின் கரங்களிலிருந்து இந்திய என்னை துறையை மிட்க வேண்டும். தேசிய மாயா மாக்கலாம்> ஆனால் அப்டி செய்த இரான் ,யெமன்  நாடுகளின் கதியை எண்ணிப்பார்த்தவர்கள் தங்கள் எண்ணத்தை மாற்றிக்கொண்டார்கள் 

Nationalisation என்பதற்கு பதிலாக Indianisation என்கிறார்கள். இந்திய பொதுத்துறையில் இந்திய எண்ணை  கழகம் (ioc )என்று உருவாக்கினார்கள்.


இன்று பகாசுரக் கம்பெனிகளை சவாலுக்கு விடும் இந்திய என்னை கழகம் அதே இளம் நாடாளுமனற உறுப்பினரின் முன்கை நடவடிக்கையால் உருவாயிற்று .

அன்றைய பிரதமர் பணிடித  ஜவர்ஹர்லால் நேருவின் மறுமகனும் ,இந்திரா அம்மையாருங்கணவரும், ராஜிவ் காந்தியின் தந்தையும். ராகுல் காந்தியின் தாத்தா விமான பெரோஸ் காந்தி தான் அவர்.

இன்றைய காங்கிரஸ் தலைவர்கள் பலருக்கே இது  தெரியாததுதான்  இந்தநாட்டின் பெரும் சோகம்.!!!


0 comments: