Sunday, July 23, 2017

மாநிலங்கள் அவை மாடமும் ,

சீத்தாராம் எச்சூரி அவர்களும் .....!!!


இந்திய நாடாளுமன்றம் மக்களவை,மாநிலங்கள் அவை என்று இரண்டு அவைகளாக செயல்படுகிறது. மக்களவை உறுப்பினர்கள் இந்திய வாக்காளர்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அவர்களுக்கும் மக்களுக்கும் உள்ளபிணைப்பு அதிகம் . மாநிலங்கள் அவை உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படுவது  இல்லை. அந்ததந்த மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். 


நாட்டின் நனமை கருதி சட்டம்  இயற்றும் பொது அறிவார்ந்த பெருமக்கள்  ஆலோசனையைப்பெறுவதும் முக்கியம் . அறிவாளிகள்,பேராசிரியர்கள், கலைஞர்கள் , எழுத்தாளர்கள், பெரியோர்கள் தேர்தலில் நின்று வாக்குகளை பெற்று உறுப்பினர்களாக வருவது கடினம். அதனால் மாநிலங்கள் அவைக்கு அவர்களை சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்க வைத்து அனுப்பும் முறையை கொண்டுவந்தார்கள் . 

மக்களவை உறுப்பினர்கள் எப்போது மீ தங்கள் தொகுதி வாக்காளர்களின் உடனடி நன்மையை கருதி செயல்படுவார்கள். அந்த வாக்காளர்களின் வாக்கு அவர்களுக்கு முக்கியம். நாட்டின் பொதுவான நன்மையை வீட தொகுதிமக்களின் நன்மதிப்பை பெறுவது முக்கியம். உதாரணமாக மைசூர்,மண்டியா மக்கள் காவிரி நீரை  தமிழகத்திற்கு  தரக்கூடாது என்ற கோரிக்கையை ஆதரித்து சட்டம் கொண்டுவர அந்த தொகுதி உறுப்பினர் விரும்புவார் . மக்களவை உறுப்பினர்கள் இப்படி சார்ப்பு நிலை எடுப்பார்கள்.

மாநிலங்கள் அவை உறுப்பினர்களுக்கு இப்படிப்பட்ட சார்பு நிலை \இருக்காது அறிவார்ந்த அவர்கள் நாட்டின் ஒட்டுமொத்தநன்மை  கருதி செயல்படுவார்கள். சட்ட மசோதா வந்தால் அவற்றை நிராகரித்து விடுவார்கள். நாட்டின் ஒட்டுமொத்த நலன் மட்டுமே அவர்களின் நோக்கம். மக்களை "குஷி"  படுத்தும் நிலையை எடுக்க மாட்டார்கள். 

தொலைக்காட்ச்சியில் நாம் மக்களவை.மாநிலங்களவை நிகச்சிகளை பார்த்திருப்போம். கவனித்து பார்த்தல்மக்களவை தரை விரிப்பு "பச்சை" நிறத்தில் இருக்கும்.


மாநிலங்கள் அவை விரிப்பு "சிவப்பு " நிறத்தில் இருக்கும். 


நாடு நலனை மட்டுமே முன்னிறுத்தி மற்ற மசோதாக்களை இயற்றவிடாமல் தடை செய்யும் குறியீடு தான் அந்த சிவப்பு.


இதன் காரணமாகவே சட்டமசோதாக்கள்  மாநிலங்கள் அவையில் விவாதிக்கப்படும் பொது அறிவார்ந்த விவாதங்களை கேட்க பார்வையாளர்கள் மாட த்தில் அரசியல்,மற்றும் அறிஞர்கள் கூட்டம் அதிகம் வரும். 


2010 ம் ஆண்டு ஒரு மசோதா விவாதத்திற்கு வந்தது .


இந்தியாவின் வட மேற்கே தக்க சீலம்  என்று ஒரு பலகலை கிமு 4ம் நூற்றண்டில்   இருந்தது .(தற்போது பாகிஸ்தானில் உள்ளது)  அதேபோன்று வடகிழக்கில் நாளந்தா என்ற பல்கலை இருந்தது . ன்யாத்திரிகர் யுவன் சுவாங் தங்கி படித்த பல்கலையாகும் அது . உலகின் பல பகுதியிலிருந்தும் அறிஞ்ர்கள் வருவார்கள். கிபி  7ம் நூற் றா ண்டில் அந்நிய படையெடுப்பின் காரணமாக அது அழிந்து விட்டது.


1980ம் ஆண்டுகளில் 17 நாடுகள் இணைந்து அந்த பல்கலையை உருவாக்க முடிவெடுத்தன.அதற்கான குழு  ஒன்று   மீண்டும் அமர்த்தய சென் தலைமையில் உருவாக்கியது. இந்தியாவும்  பல்கலையை உருவாக்க சம்மதித்து அதற்கான மசோதா மாநிலங்களவையில் விவாதத்திற்கு வந்தது.


அந்தவிவாதத்தில் பேச மாநிலங்கள் அவை உறுப்பினர் தோழர் சீத்தாராம்  எச் சூரி எழுந்தார் .               


பார்வையாளர்கள் மாட ம்  நிரம்பிவழிந்தது .உட்கார இடமில்லாமல் பலர்  நின்று கொண்டிருந்தனர். மக்களவை உறுப்பினர்கள்,தலைவர்கள் பலரும் அமர்ந்திருந்தனர்அவர்களில் ஒருவராக அத்வானியும் இருந்தார்.


அவைத்தலைவர் "எச்சூரி அவர்களே மிகக்குறைந்த நேரம் தான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் பேச்சை அதற்கு தகுந்த படி அமைத்துக் கொள்ளுங்கள் "என்றார் .


எச்சூரி பேச ஆரம்பித்தார், ஆற்றோட்டம் போன்ற நடை.வரலாறு,தத்துவம், அரசியல் என்று அற்புதமான   பேச் சு .இரண்டு மணிநேரம் பேசினார்.

அவைத்தலைவர் "விவாதத்தின் சிறப்பில் மயங்கி நான் கடியாரத்த்தை பார்க்க மறந்து விட்டேன்." என்றார் .


அந்த பேச் சை படிக்க பழைய தீக்கதிர் மற்றும்பத்திரிகைகளை புரட்டினேன். கிடைக்கவில்லை .நொந்து நூலாகிப் போன நான் டெல்லியில் உள்ள தோழர் வீரமணியை நேற்று தொடர்பு கொண்டேன் .

"கவலைப்படாதே ! தோழா ! மாநிலங்கள் அவை வெப் சாட்டில் இருக்கும் "என்றார். அடுத்த 30  நிமிடங்களில் எனக்கு மின் அஞ்சலில் அனுப்பினார் .

பூஜ்ஜியம் என்ற கருத்து,  infinite  ஆக இணைந்துள்ளது , சிவதாண்டவம் என்றால் என்ன ? ஐரோப்பிய வான் ஆராய்சசி மையத்தில்   நடராஜர் சிலை முகப்பில் ஏன் இருக்கிறது,அந்த சிலையை சுற்றி பூஜ்ஜியம் எப்படி வந்தது என்று பேசியுள்ளார் .


பேச் சை படித்து மெய்ம்மறந்து நிற்கிறேன் !  


0 comments: