Sunday, November 14, 2010

திரைப்படத்தில் நான் நடித்த காதை.......2

திரைப்படத்தில் நான் நடித்த காதை


மனிதர்களுக்கு வாய்ப்புவரும் அதுவும் ஒருமுறைதான் வருமாம்.நான் நாடகங்களில் நடித்திருக்கிறேன். நாடகங்களை எழுதியிருக்கிறேன். இயக்கியும் இருக்கிறேன்.த..மு.ஏ.ச.தலைவர்களில் ஒருவரான செந்தில் நாதன் எனக்கு கடிதம் எழுதியிருந்தார்.நாம் எடுக்கப் போகும் திரைப்படத் தில் நீங்கள் நடிகிறீர்கள்.உடனடியாக கு.சி.பா வை தொடர்பு கொள்ளுங்கள் என்று எழுதியிருந்த்தார்.நாமக்கல் சென்று அவரைத்தொடர்பு கொண்டு படக்குழுவோடு சேர்ந்து கொண்டேன்

முதன் முதலாக காமிரா முன் நிற்கிறேன். கற்பழிக்கும் காட்சி பங்களுருவில் உள்ள நாடகக்குழுவான "சமுதாயா"வின் தோழர் சுதாவை கற்பழிக்கும் காட்சி. இதற்கு சாட்சியாகத்தான் அந்த ஜன்னலில் தெரிந்தமுகம் எப்படிப்பட்ட வாய்ப்பு!

எனக்கு தத்துவ போதம் அளித்தவர்களில் ஒருவர்,சுத்ந்திரப்போராட்ட தியாகி, மார்க்சிஸ்ட் கட்சியீன் மத்தியகுழு உறுப்பினர், மாநிலத்தலைவர்களில் ஒருவர்- தோழர் என்,சங்கரய்யா தான் ஜன்னலில் நின்று பார்த்துக் கோண்டிருந்தார். நான் தயங்குவதைப் பார்த்து இயக்குனர் செல்வராஜ்" என்ன சார்! என்ன சிக்கல்" என்றார்."ஒங்க சித்தப்பா அங்க நிக்காரு. நான் எப்படி சார் நடிக்க" என்று பதில் கூறினேன். ஜன்னலருகில் சென்ற அவர்" சின்ன நாயினா! உள்ளவாங்க" என்று சொல்லி காமிராவுக்குப்பின்னால் இருட்டான பகுதியில் நாற்காலியில் அமர்த்தினார். அவர் இருட்டில் இருந்தாலும் நான் வெளிச்சத்தில் செய்வதை பார்க்கத்தானே செய்வார்.

படப்பிடிப்பு சென்னயில் தொடர்ந்தது. டப்பிங்கும் அங்குதான்.இரண்டுக்கும் செல்லவேண்டியதாயிற்று சவுண்டு இஞ்சினியர் வைத்ததுதான் சட்டம். தொழில் முறை டப்பிங்கலஞர்களைத்தான் அவர் விரும்புவார்.என் காட்சிகளுக்கு நான் குரல் கொடுத்தேன். நான் மதுரை திரும்பியதும் அதை வெட்டிவிட்டார்.

டெக்னீஷியங்களிடமும், உதவியாள்ர்களிடமும் துணைநடிகைகள் படும் பாடு சொல்லும்படி இல்லை. பாவம்! சுயமரியாதை என்பதை நினைகக்கூட முடியாது. சீனியர் துணை நடிகைகள் புதியவர்களை வசக்குவார்கள். பதினந்து வயதுப் பெண் கச்சையை இறுகக் கட்டி பத்துவயது சிறுமியாக நடிக்க வாய்ப்பு கெட்டு உதவியாளர்களை நாடுவார் ""வா!பாப்பா! வா! "என்று மடியில் அமர்த்திக் கொண்டு அந்தத்தடியன் தடவுவான்.அவன் எண்ணம் சிறுமிக்கு இல்லை அந்தப்பெண்ணுக்கு புரிந்தாலும் ஒன்றும் செய்யமுடியாது. அதைவிட கொடுமையானது தூரத்தில் நிற்கும் அவளூடைய தாயின் நிலை.

துணை நடிகர்களின் நிலை இன்னும் பரிதாபமானது.காலை சிற்றுண்டிக்கும், மதிய உணவிற்கும் அவர்கள் தவியாளர்களிடம் படும்பாடு--புழுவைவிட கெவலமாக மதிக்கப்படுவது--உண்ண அனுமதிகிடைத்ததும் சாப்பாட்டுக் கூடத்தை நோக்கி தலைதெரிக்க ஓடுவது--சகிக்கமுடியாதவைகள்.

"ஹாலிவுட்" உறுவானது பற்றி ஹெரால்டு ராபின்ஸ் Dream Merchants என்ற நாவலில் விவரிப்பார். கோடம்பாக்கத்தில் நூறு நாவல்கள் எழுத வாய்ப்பு உள்ளது.

படம் முடிந்து, படத்தொகுப்பும் முடிந்து, தணிக்கை முடிந்து,முதல் பிரதியும் வந்தது.நிர்வகத்தால் வேலியிட முடியாமல் போயிற்று. மார்க்சிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர்களுக்காக ஒரு முறை போட்டுக்காட்டப்பட்டது.பாடல்களும்,படமும் நன்றாக உள்ளது.ஐம்பதுநாட்கள் ஓடும் என்று சிலர் சொன்னர்கள்

படத்தொகுப்பாளர் நண்பர் மூலம் நான் வரும் ஒரே ஒரு 35எம் எம் பிலிமை வாங்கி போட்டோவாக்கி சுவரில் மாட்டியிருந்தேன்.சாட்சியாக. .

4 comments:

hariharan said...

அந்தப் படம் திரையிடப்பட்டதா என்று சொல்லவேயில்லையே..

திரைப்படத்தை காணும் மக்கள் துணை நடிகைகள், டெக்னீசியன்கள் பற்றி யோசிக்கவேயில்லை, ஹீரோ ஹீரோயின் மட்டும் தான் நமக்குத் தெரிகிறது.

காமராஜ் said...

தோழர் யாராவது இந்த துணைநடிகைகள் பற்றி எழுதுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
பாலச்சந்தர் படம்பார்த்த பிறகு, உங்களின் இந்த இடுகையைப் படித்ததும்
மேலும் ஆவல் ஆகிறது.
அதுபோன்ற தரவுகள் எங்கிருந்தாலும் எனக்கு அறியத்தாருங்கள்.

அப்பாதுரை said...

சுவையான நினைவு.

சிவகுமாரன் said...

நெஞ்சைத் தொடும் பதிவு.

அய்யா அவர்களே துணை நடிகர்களின் நிலையை நாவலாக எழுதலாம்.