Tuesday, November 09, 2010

காற்றழுத்தக் குக்கருக்கு "வடிகால்" போல-----

காற்றழுத்த "குக்கருக்கு " வடிகால் போல.....


புனே திரைப்படக் கல்லூரி அவ்வப்போது பல்வெறு ஊர்களில் திரைப்பட ரசனை பயிற்சி முகாம்களை நடத்தும். அப்படியோருமுகாமுக்கு சென்றிருந்தேன். பெராசிரியர் சதீஷ் பகதூர் தான் நடத்துவார்.மார்க்சீயத்தின் பால் ஆர்வமுள்ளவர்.இதுதவிர,பி.கெ.நாயர்,டாக்டர்.சியாமளாவனரசே ஆகியோரும் வகுப்புகள் நடத்துவார்கள்.பெராசிரியை சியாமளா "வெகுஜன உளவியல்" பாடத்தை நடத்துவார்.பின்னர் மதுரை வந்துவிட்டேன்.

என் நண்பர் ஒருவரின் மகள் சிறந்த படிப்பாளி. உயர் கல்வியில்"உயிரியல்" அப்போதுதான் மெட்டவிழ் கின்ற நேரம். அந்தப்பெண்ணிற்கு பாரிஸ் பல்கழகத்தில் உயர்கல்வி படிக்க இடம் கிடத்தது.வெளிநாட்டில் படிக்க பெண்களை அனுப்புவது பரவலாகாத காலம். பெற்றோர்கள் தயங்கினார்கள்நான் தலையிட்டு அனுப்பச்சொன்னேன் ஆறு ஆண்டுகள் அங்கே படித்தார்.

திரைப்படம் பார்ப்பதில் ஆர்வமுள்ளவர். அப்போது"சிவந்தமண்" என்ற படத்தைப் பார்க்க துடியாய்துடித்தார்

"ஈவில்டவர்" காட்சி" வரும்போது கைதட்டி ரசித்தார்."ஏன்மா! டவர நேர்ல பா த்தவ.நிழல பாத்து குதிக்கிறயே" என்றேன். "போங்கமாமா!புறநகர் பகுதில நலுபேரா தங்கியிருந்தோம்.பொங்கிசாப்பிட்டு மெட்றோவில காலேஜ் போய்வரவே உதவிப்பணம் பத்தாது.இதுல எங்க ஊர்சுத்த"என்றார்.ஈவில்டவரை பார்க்காத அவருடைய ஆதங்கம் திரைப்படத்தால் நிறைவேறியது.

என் உறவுக்காரப்பெண் மாநில அரசு ஊழியர்.ஞாயிறு அன்றும் காலையில் எழுந்து ஆறு ஏழு படவைகளை தோய்த்து,மடித்து வைப்பார்.அப்போதுதான் தினம் ஒரு புடவையை "மணம்"மாக கட்டிக்கொண்டு போகமுடியும். தினம் ஒரு புடவை வாங்கமுடியாதே! திரைப்படத தில் கமலும் ரேவதியும் பாடல் காட்சியில் நிமிடத்திற்கு ஒரு ஆடையில் ரேவதிவருவதை ரசிப்பதின் மூலம் அவருடைய அந்தவார ஆசை,நிராசை எல்லாம் வடிந்துவிடும்.

அநியாயத்தையும்,அக்கிரமத்தையும் எதிர்க்காத இளைஞர்கள் உண்டா?திரைப்படத்தில் விஷாலும்,விஜய்யும் அநியாயக்காரர்களையும்,அக்கிரமக்காரர்களையும், பந்தாடும்போது சமூகத்தின் மீது உள்ள அந்த இளைஞனின் கோபம் வடிந்துவிடுகிறது

."Ángry young man" அமிதாப் வெற்றி பெற்றதின் சூட்சுமம் இதுதான்.

சோறு வடிக்கும் குக்கரில் அழுத்தம் காரணமாக அரிசி வேகிறது.அழுத்தம் அதிகமானால் வெடித்துச்சிதறி விடும்.அதற்கு வடிகாலாக உள்ளே இருக்கும் ஆவி வெளியெற ஏற்படுகள் உள்ளன.

. சமூகத்திற்கும் பக்தி,ஆன்மீகம்,கடவுள் என்று பலவடிகால்கள் உண்டு.

இன்று திரைப்படம் அத்தகைய வடிகாலாக பயன்படுகிறது.

4 comments:

Swaminathan K said...

எழுத்துக்கும், முயற்சிக்கும் வயது தடையில்லை
என்பதை நிரூபிக்கிறீர்கள். மகிழ்ச்சி.
க சுவாமிநாதன்

சிவகுமாரன் said...

எமக்கு வடிகால் கவிதைகளும் , உம்மைப் போன்றோரின் எழுத்துக்களும் தான்.

அப்பாதுரை said...

சிந்திக்க வைக்கும் கண்ணோட்டம்.

hariharan said...

//திரைப்படத்தில் விஷாலும்,விஜய்யும் அநியாயக்காரர்களையும்,அக்கிரமக்காரர்களையும், பந்தாடும்போது சமூகத்தின் மீது உள்ள அந்த இளைஞனின் கோபம் வடிந்துவிடுகிறது
//
யோசிக்கவைத்த வரிகள்.

கோபம் கொள்கிற மனிதர்களுக்கு வடிகால் நிறைய இருக்கிறது.