Thursday, November 18, 2010

டாக்டர் அம்பேத்கரும் நாமும்....

அம்பபேத் கரும் நாமும்


" டக்டர் பாப சாகெப் அம்பெத்கர்" என்ற தமிழ் திரப்படம் டெசம்பர் மாதம் 3ம் தேதி தமிழில் வெளியிடப்படுகிறது.கம்ய்னிஸ்ட்கள் எடுத்த "பாதைதெரியுது பார்"என்ற படத்தை விநியோகிப்பதற்காக ஏ.வி.மெய்யப்ப செட்டியார் வாங்கினார்.பெரிய கம்பெனி-அனுபவஸ்தர்-படம் சக்கைபோடு போடும் என்று தோழர்கள் மகிழ்ந்தனர்..சென்னைக்கு அருகிலுள்ள கிராமத்து கீத்துகொட்டகையில் ஒருவாரம் ஒட்டிவிட்டு பட டப்பாவை கிட்டங்கியில் பொட்டுவிட்டார்.அந்தப்படத்திற்கு இசை அமைத்தவர் எம்.பி.சீனிவாசன்.ஜயகாந்தன்.கெ.சி.அருனாசலம் ஆகியோர் பாடல்கள் எழுதியிருந்தனர்.இசைத்தட்டு விற்பனைமட்டுமே நட்டமில்லாமல் ஆக்கியது.

டாக்டர் அம்பேத்கர் படத்தையும் அப்படிப்பண்ணக்கூடிய ஆபத்து தெரிவதால் இதுபற்றி படத்தை பார்க்க மக்களைடம் போகவேண்டும் என்ற யோசனையும் வந்தது.அந்தப்படம் பற்றி ஒருஇடுகை எழுதியிருந்தேன்.

வெளிநாட்டு நண்பர் ஒருவர் " நான் பள்ளியில் படிக்கும் போது காந்தி,நேரு பற்றி படித்திருக்கிறேன். அந்த அளவுக்கு அம்பேத்கர் பற்றி தெரியவில்லை.நான் படித்த பள்ளியில் மட்டும் அப்படியா?" என்று எழுதியிருதார்.

மற்றொரு நண்பர்" நானும் படித்ததில்லை. திருமாவளவன்,கிருஷ்ணசாமி போன்று மராட்டியத்தில் அம்பேத்கரும் ஒரு தலைவர் என்று தான் கருதியிருந்தேன்" என்கிறார்.

" நாங்கள் படிக்கும் போது எங்களுக்கு இவையெல்லாம் பாடமாக இருக்கவில்லை' என்று கூறினார் இவர்களில் பலர் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களாகக் கூட இருக்கலாம்.

இன்றய தமிழக தலித் தலைவர்கள் "அம்பேத்கர்" பெயரைச்சொல்லி தங்களை வளர்த்துக் கொண்டார்களோ என்று தோண்றுகிறது.மராட்டிய நண்பர்கள் சிலரிடம் பேசினேன்." அவர்கள் தங்களை " தலித்" என்றோ அல்லது வேறு பெயர்களிலோ அழைத்துக் கொள்வதில்லை. "நான் ஒரு அம்பெத்கரைட்" என்று நெஞ்சுயர்த்தி கூறி கொள்கிறார்கள்." அம்பேத்கரைட்" என்பது ஒரு இயக்கமக மாறியதால் தான் அவர் பெயர் நிலைத்துவிட்டது.

அம்பேத்கர் ஒரு "பௌத்தர்" என்று கூறிக்கொண்டு பௌத்த மதத்தை வளர்க்கும்சாக்கில்,தலித்துகளை புறந்தள்ளும் பணிக்கு ஜப்பான், தாய்லாந்து நாடுகள் மூலம் கோடிகணக்கில் நிதியாதாரங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

அம்பேத்கர் வாழ்ந்த காலதில் கடுமையாக போராடவேண்டியதிருந்தது.

அவருடைய மரணத்திற்குபிறகும் இதே நிலை தொடரலாமா?

5 comments:

Pradeep said...

http://pmm-ppradeep.blogspot.com/2010/11/blog-post.html

அப்பாதுரை said...

உண்மை
///நாங்கள் படிக்கும் போது எங்களுக்கு இவையெல்லாம் பாடமாக இருக்கவில்லை' என்று கூறினார் இவர்களில் பலர் ஐம்பது வயதிற்கு மேற்பட்டவர்களாகக் கூட இருக்கலாம்.

அப்பாதுரை said...

ஏவிஎம் வேண்டுமென்றே செய்ததாக நினைக்கிறீர்களா?

kashyapan said...

நண்பரே! நீர் அப்பாதுரை அல்ல! அப்"பாவி" துரை!---காஸ்யபன்

அப்பாதுரை said...

அக்கிரமம்! திரைப்படத்துறையில் இதுபோல் கேள்விப்பட்டிருக்கிறேன். யாருக்கு என்ன லாபம் இதனால் புரியவில்லை!