Friday, November 26, 2010

"மழை"....

மழை


தீராதபக்கங்களில் பதிவர் மாதவராஜ்."மழைக்காலம்"என்றொரு அற்புதமான பதிவினை இட்டிருந்த்தார்.வேப்பமரத்தின் கிளையில் நனைந்த காகம் கரையாமல் அமர்ந்திருந்ததயும், பச்சைநிற பூச்சி ஒன்று ஊர்ந்துசெல்வதையும் வர்ணித்திருந்தது அழகுணர்வின் உன்னதமாக இருந்தது." இன்னைக்கு எங்களுக்கு லீவு" என்று சிறுவர்களும்,சிறுமிகளும் கூவிக்கொண்டு ஒடும்போது நாம் கால தேச வர்த்தமானங்களை மறந்து பரவசப்பட்டோம்.

நான் இப்போது வசிப்பது நாகபுரியில்.இந்த ஊரின் கோடை வெப்பம் உங்களுக்கு நினவில் வரலாம்.இந்த ஊரின் மழையும்,பனியும் கூட அற்புதமான அனுபவத்தைக்கொடுக்கும்.

மழை என்பது வானுக்கும் பூமிக்கும் கடப்பாரைக்கம்பிகளால் சாரம் கட்டியதுபோல் இரண்டுநாள் மூன்றுநாள் அடிபின்னும்.நீரில்லை என்ற நிலமை வந்தது கிடையாது.ஊர் எப்போதுமே பச்சைப்பசேல் என்றிருக்கும் "மாசற்ற சூழலைக் கொண்ட ஒரே நகரம்" என்று அரசால் அறிவிக்கப்பட்ட ஊர் இது.

தேசீய சுற்றுச்சூழல் பொறியியல் ஆரய்ச்சி மையம்(.NEERI).இங்குதான் உள்ளது.தூத்துக்குடி ஸ்டெரலைட் ஆலைக்கு அனுமதிமறுத்த நிருவனம் அது மழை பெய்தால் ரயிலடியில் ரயில் வருவது.தெரியாத அளவிற்கு கொட்டும்.

சமிபத்தில் மதுரை நண்பர்கள் சிலர் டெல்லி சென்றார்கள். அவர்களைச்சந்திக்க ரயிலடி சென்றிருந்தேன். மழை கொட்டியது.நிலயக் கட்டிடத்தை நோக்கி ஓடினேன். வாசலில் வெட்டவெளியில் சிறுவர் சிறுமியர் உள்ளாடை மட்டும் அணிந்துகொன்டூ மழையில் நனைந்து ஆடிப்பாடிக் கொண்டிருந்தனர்.அவர்களைப் பார்த்தால் இந்தியர்களைபோல் தெரியவில்லை. செக்கச்செவேல் என்று ஈரானியர்களைப் போல் இருந்தார்கள்.அவர்களின் உதவியாளர்களைப் போல் இருந்தவரிடம் விசாரித்தேன்.அவர்கள் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள்.ஷேக் குடும்பம். உதவியாளர் மெலும் சொன்னது என்னை ஆச்சரியப்படுத்தியது.

அவர்கள் ஊரில் மழையே பெய்யாதாம். குழந்தைகளுக்கு மழை என்றால் என்ன வென்றே தெரியாது.ஷேக்குகள் குழந்தகளை மே, ஜூன் மாதங்களில் மும்பை அழைத்து வந்து நட்சத்திர விடுதிகளில் தங்கி மழைக்காக காத்திருப்பார்கள். மழை வந்ததும் புல்வெளியில் நனைந்து ஆடிப்பாடி மகிழ்வார்களாம்.

பூமிப்பந்து எப்படிப்பட்ட பூகோள அற்புதங்களை தன்னுள் கொண்டிருக்கிறது!

மழையைப் பார்க்காதவர்கள் உண்டு..... சரி!

ரயிலைப் பார்க்காதவர்கள் உண்டா?......உண்டு.

6 comments:

சிவகுமாரன் said...

நானும் காத்திருந்தேன் அய்யா உங்கள் அனுபவ மழைக்காக, அந்த அரபுக் குழைந்தைகளைப் போல.
ஒருமுறை தில்லி சென்ற பொது உங்கள் ஊர் நாக்பூர் ஆரஞ்சு பழங்களை வைத்தே ஒருநாள் சாப்பாட்டை சமாளித்தேன்.

kashyapan said...

தகவல் தெரிவித்திருந்தால் ரயிலடிக்கு வந்திருப்பேனே!---காஸ்யபன்.

hariharan said...

நான் வசிக்கின்ற கத்தார் நாட்டில் மழை பெய்வது அபூர்வம் தான், எனது அப்பா ஊரிலிருந்து போனில் பேசும்போது ஒவ்வொரு முறையும் கேட்பார் ‘இங்க நேத்து நல்ல மழ. அங்க மழ பேய்சந்தா’ன்னு கேட்பார்.

ஆனால் வெயில் இருக்கிறதே கொல்லுது னு சொல்லலாம்.சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு 2டிகிரி அதிகமாக பதிவாகியிருக்கிறது. எல்லாம் global warming தான்.

சிவகுமாரன் said...

நன்றி அய்யா. உங்கள் அன்பு என்னை திகைக்கச் செய்கிறது. நான் தில்லிக்கு சென்றது 95 இல். காரத்தையும் அமிலத்தையும் மூளையிலும், கவிதைகளையும் கனவுகளையும் இதயத்திலும் சுமந்து கொண்டு வேலை தேடிய காலம் அது.

காமராஜ் said...

அன்பின் தோழர்,
தோழர் என்றழைப்பதிலும் நெருக்கமான வார்த்தை இருக்கா இல்லையா தெர்ல.
அண்ணாச்சி,சித்தப்பா இப்படி ஏதாவது இருந்தால் கூட தேவலாம்.

எனக்கு ரஜினியைத்தெரியும்,கருணாநிதியோடு புகைப்படம் எடுத்துக்கொண்டேன்,எங்களுக்கு இருபது ஏக்கர் நஞ்செய் இருந்தது என்கிற பெருமிதங்களை விட நான் ஒரு தமு எச க்காரன்.எல்லோரும் கேலி செய்த மேலாண்மை காஷ்யபன் எங்கள் முன்னத்தி ஏர்.,நான் பல மாநாடுகளில் பங்கேற்றிருக்கிறேன் என்கிற பெருமிதங்கள் என் பொக்கிஷம்.தமு எச வுக்கு நான் எப்படி என்று தெரியவில்லை.

கஞ்சிக்கில்லாத பசி நாட்களில் தோளில் போடுகிற தோழமை.ஏதிலிகளுக்காக சேர்ந்து சிந்தும் கண்ணீர்.

நாக்பூரில் எங்களுக்காக காத்திருந்த உங்கள் கைகளில் இருந்த பழங்கள்,கைத்தடி,முதுமை எல்லாவற்றுள்ளும் என் மூதாதையார் யாரொ எனக்கு வாங்கி வைத்திருந்த பலகாரங்களின் மிச்சமாக இருந்தது.

நிறுவணப்படுத்தப்பட்ட தொடர்புகளில் இருந்து மீறிப் பூத்த அன்பு அது.அதை ஒரு பத்தியாக அல்லது கதையாக அல்லது நவலாக வடிக்கிற உத்வேகம் கனன்றுகொண்டே இருக்கிறது. முடியாமல் கூடப் போகலாம்.

ஆனால் இந்த நேரத்தில் நாக்பூர் நோக்கி கைகூப்புகிறேன் ரெண்டு சொட்டு ஆனந்தக்கண்ணீரோடு.

¬É¡ø þó¾ §¿Ãò¾¢ø ¿¡ìâ÷ §¿¡ì¸¢ ¨¸ÜôÒ¸¢§Èý ¦ÃñÎ ¦º¡ðÎ ¬Éó¾ì¸ñ½£§Ã¡Î.

KANA VARO said...

நல்ல அனுபவ தகவல்கள்