ரயில்.....
நான் பிறந்துவளர்ந்தது திருநெல்வெலி பாட்டப்பத்து கிராமம்.அங்குள்ள நகராட்சிப் பள்ளியில் தான் படிப்பு. பள்ளியின் பின் புறம் வாய்க்கால்.அதன் மீது ரயில் பாலம். ரயில் வரும் நேரம் பார்த்து"சார்"என்று ஒற்றை விரலைக்காட்டிவிட்டு ரயில் கடகட சத்தத்தோடு பொவதைப் பார்க்க ஓடுவோம்.
உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் பொது திலி டவுண் ரயிலடி வழியாகச்செல்வோம்.நின்று கிளம்பும் ரயிலில் "மோஷனில்" ஏறி இறங்குவோம்.ம.தி.த இந்து கல்லூரி திலி ஜங்ஷனில் உள்ளது.அங்கு இண்டர் படித்தேன்.கல்லிடைக்குரிச்சியிலிருந்து தினம் 22மைல் ரயிலில் வந்து படித்தேன்.இதுவல்லாம் முக்கியமல்ல. அப்பொது நாகர்கோவிலுக்கு ரயில் கிடையாது.சென்னயிலிருந்து நாகர் கோவிலுக்கு டிக்கெட் கொடுப்பார்கள். திலி.ஜங்ஷனில் இறங்கி out agency எனப்படும் பயோனியர் பஸ்மூலம் நாகர்கொவில் செல்லவேண்டும்.
களக்காடு தொடங்கி கன்யாகுமரி வரை ரயில் கிடையாது. கல்விச்சுற்றுலா என்று கூறி பள்ளீ மாணவர்களை ரயில் பார்க்க ஜ்ங்ஷன் அழைத்து வந்து பர்த்தால் உண்டு.அந்தக் காலத்தில் ரயில் பார்க்காத கல்லூரி மாணவர்கள் குமாரி மாவட்டத்தில் உண்டு.
பல மாநிலங்களில் பணியாற்றிவிட்டு மாற்றலில் மதுரை வந்துசெர்ந்தேன்.மேற்கு வெளிவீதியில் உள்ள பாரத் கட்டிடத்தில் தான் அலுவலகம்.புதிதாக .நியமனம் பெற்றவர்களில் நாகர்கோவிலைச்சார்ந்த மூன்று பெர் அதில் உண்டு.ரயிலையே பார்க்காதவர்கள்.வெளிவீதிக்கு அடுத்து மதுரை குட்ஷெட்.,ரயில்நிலயம் உள்ளது.
நாகர்கொவில் பையங்கள் முன்று பெரும் காலையிலேயே வந்துடுவிடுவார்கள்.மூன்றாம் மாடிக்குச்சென்று ஜன்னல் அருகில் நிற்பார்கள்."எல!ராமந்த்ரா! எல!இஞ்சினுல! எம்புட்டு பெரிசு பாத்தியால! இங்கவால!" துரைசாமி ராமச்சந்திரனைக் கூப்பிடுவான்."சும்மாகெடக்கணம் தொரை! மெள்ள பேசேம்ல! இந்த ஊர் புத்திமான் நம்மள பட்டிக்காட்டான்னு நினைக்கப்போறான்" என்று ராமந்ரன் பதில் சொல்லுவான்.மூண்றாவதாக உள்ள விட்டல் தாஸ் அழுத்தமானவன். அமைதியா பார்த்துக்கோண்டிருப்பான்.
மாலை 5மணியானால் அருகில் இருக்கும் ரயில் நிலையம் சென்று விடுவார்கள்.இஞ்சின் அருகில் இருந்து சாவி மாற்றுவதைப் பார்ப்பார்கள். டிரைவர்,கார்டு,டி.டி.இ, பாயிண்ட்ஸ்மான்,ஏன் பொர்டரிடம் கூட ரயிலைப் பற்றி அதிசயிப்பார்கள்.
இப்போது ராமசந்திரன் மகன் ஒருவன் டெல்லியிலும்,மற்றோருவன் சிங்கப்பூரிலும் இருக்கிறான்."டெல்லிபோகும் போது சொல்லேன்ரயிலடியில் பார்க்கிறேன்"என்றால்" எங்கப்பா!இந்தப் பயிலுக ரயில ஏறப்படாதுங்கா.பிளைட் தான் இப்போ"என்று பதில் வருகிறது.குமரி மாவட்ட c.i.t.u தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.
துரைச்சாமி பேரன் பேத்தியோடு சவுகரியமாக இருக்கிறான். விட்டல் தாசின் ஒரே மகள் அமெரிக்காவில் வசிக்கிறார்.
3 comments:
என் பள்ளி நாட்களும் ம.தி.தா. இந்து மேல்நிலைப்பள்ளியிதான். ரயிலுக்கும் என் மாணவப்பருவத்துக்கும் தொடர்பு நிறைய உண்டு.
இந்தப் பதிவு ரயிலைப் பார்க்காத ஆச்சர்யமான மனிதர்களை உள்ளடக்கியது.அவர்கள் வாழ்வில் இழக்கக்கூடாததை இழந்திருப்பார்கள் ரயிலை மட்டும் பார்க்காதிருந்தால்-யானையைப் பார்க்காதது போல.
கிரேமபோன் இசைத்தட்டை, டேப் ரிகார்டரை, விடியோ கேசட்டை, தொலைபேசியைப் பார்க்காத தலைமுறை வந்தாச்சு! ரயில் இப்போ ம்யூசியத்தில் தானா?
ரயிலைப் பற்றி கி.ரா நிறைய கதைகளில் சொல்லியிருக்கிறார். சமீபத்தில் செம்மலரில் ‘ரயில்சாமி’ என்ற கட்டுரை கூட வந்தது. மக்கள் எவ்வளவு ஆச்சரியப்பட்டிருக்கிறார்கள்.
ரயிலும், மழையும் சமுத்திரமும் எல்லா மனிதர்காளுக்கும் கிடைக்காத ஒன்று.சரி.
அடுத்த இடுகை என்னவாக இருக்கும்...
பனி..குளிர்..
Post a Comment