"வழிப்பாடல்" நாவலும் நெடுஞ்சாலைத்துறையும்
விபூதி பூஷன் பந்தோபாத்யாயா "வழிப்பாடல்" என்ற நாவலை எழுதினார். வங்காள பிராமணக்குடும்பம் எப்படி தன் அடையாளமிழந்து தன்னை நவீனப் படுத்திக்கொண்டு வாழ்க்கயை மீட்டெடுக்கிறது என்பதுதான் நாவலின் சாரம்.20ம் ஆண்டுகளின் துவங்கி அன்றய வாழ்க்கையைலிருந்து இன்றுவரைசித்தரிக்கும் இந்த நாவலை திரைப்படமாக எடுக்க சத்தியஜித் ரே விரும்பினார்.ஒரே படமாக எடுக்காமல் மூன்று படங்களாக எடுக்க திட்டமிட்டார.Apu Trialogy என்று உலகம் போற்றும் "பதேர் பஞ்சாலி"(வழிப்பாடல்) அபு சன்சார்(அபுவின் உலகம்) அபராஜிதோ(அபராஜிதன்) ஆகிய மூன்றும் தான் அவை.
பதேர் பஞ்சாலி படம் எடுக்க ஆரம்பித்தார். அதுவரை தான் சேமித்து வத்திருந்த பணத்தில் படப்பிடிப்பு தவங்கியது.பனப்பற்றாக்குறை. மனைவியின் நகை,விற்கப்பட்டது. நண்பர்கள் மூலமாக பணம் வந்தது.ஆனாலும படம் முடியவில்லை. படப்பிடிப்பு நின்றுவிட்டது. ஓராண்டாக ரே செய்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை.இதற்கிடையில் நடிகர் ஒருவர் மரணமடைந்தார்.வேரு வழியின்றி மாநில அரசின் உதவியை நாடினார்.
அப்போதெல்லாம் திரைப்படத்துறை அங்கீகரிகப்படாத ஒன்று.முதலமைச்சராக பி.சி.ராய் இருந்தார். அவர் உதவ விரும்பினாலும் செயல்பட முடியவில்லை.முக்கிய அதிகாரிகளைக் கூட்டி ஆலோசனை செய்வதாகக் கூறி ரே ஐ அனுப்பினார்.
அதிகாரிகள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.ஒவ்வொரு துறை அதிகாரியும்" நான் ஆட்டைக்கு வரவில்லை" என்று ஒதுங்க ஆரம்பித்தார்கள்.நெடுஞ்சாலை துறையின் மூத்த அதிகாரி வரவில்லை. அவர் தனக்குப் பதிலாக இளம் அதிகாரி ஒருவரை அனுப்பியிருந்தார்.இளம் கன்று."ஐயா! நான் குறிப்பு ஒன்றை தங்கள் பார்வைக்கு அனுப்புகிறென். நீங்கள் எற்றுக்கொண்டால் உதவமுடியும்" என்றார். முதல்வரும் "குறிப்பை அனுப்பிவையுங்கள்" என்றார்.
முதல்வர் பார்வைக்கு: நெடுஞ்சாலை துறையின் விளம்பரத்திற்காக இந்த் ஆண்டு 3 லட்சம் ஒதுக்கப்பட்டது செலவழிக்கப் படவில்லை.மூன்ருமாதங்களுக்குள் செலவழிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் அதனை திருப்பி அனுப்பிவிட வேண்டும தயாரிக்கப்படும் படத்தின் பெயர் "வழிப் பாடல்".நெடுஞ்சாலையின் விளம்பரத்திற்காக இந்தப்படத்திற்கு 3 லட்சம் அளிக்க அனுமதி அளிக்கவும்.என்று அந்த இளம் அதிகாரி எழுதிவத்தார். முதல்வர் அனுமதிதார்.
உலகத்தில் இதுவரை எடுத்த படங்களில் பத்தை தேர்ந்தெடுத்தால் அதில் "பதேர் பாஞ்சாலி"யும் ஒன்று. பத்து இயக்குனர்களை எடுத்தால் அதில் சத்யஜித் ரே ஒருவர்.
அவரை உலகுக்கு தெரியவைக்க குறிப்பு எழுதிய அந்த இளம் அதிகாரியின் பெயர் சுப்பிரமணியன்.
தமிழ் நாட்டச்செர்ந்தவர்.
8 comments:
நல்ல அறிமுகம்!
இதுவரை காணாததைப் பற்றிக் கதைத்த நீங்கள் இப்போது யாருமறிந்திராத செய்தியுடன்.
யாரும் தேர்வு செய்யாத கோணங்கள் உங்களின் எழுத்துக்குச் சமமாக சவால் விடுகின்றன.
சல்யூட் காஷ்யபன் சார்.
thanks for detail. good sharing. good post. vaalththukkal.
இறுதி வரியை படிக்கும்போது பெருமையா இருந்துச்சு. நல்ல பகிர்தலுக்கு நன்றி அய்யா.
Two days back only i saw 'Aprajito'. i can understand bangla little but subtitle helped. i could not understand the climax.
One more movie 'Ek din Pratidin' directed by mrinal sen. story of few hour life in lower middle class family. the girl is working suppose to come everyday after work to home by 6 or 6:30 pm does not arrive until 10:00pm. what impact within family and around the socity.
comrade i hope you have seen movie,could you please wrtie about that.
thanks
ஆஹா...அற்புதம்..நெடுஞ்சாலைத் துறைக்கும் பதேர் பாஞ்சாலிக்கும் ஒரு தொடர்பை உருவாக்கிய சுப்பிரமணியன் வாழ்க....
தமிழன் என்ற முறையில் மிகவும் பெருமையடைகிறேன். நல்ல செய்திக்கு நன்றி ஐயா !
இடது கைக்குத் தெரியாத கருணை?
விவரம் அருமை. சுப்ரமணியனின் ரசனையும் அருமை. இதை வெளியிட்ட உங்களுக்கு நன்றி.
கலையை ரசித்து வளர்க்க எண்ணிய வங்க முதல்வருக்கும் நன்றி.
Post a Comment