அன்றும் கைது நடந்தது.....
1996ம் ஆண்டு.டிசம்பர் மாதம்.7ம் தேதி இரவு-8ம் தேதி அதிகாலை.போயஸ் தோட்டத்திற்குசெல்லும் பாதைகளில் காலை நான்கு மணியிலிருந்தே பொலீசார் நிற்கிறார்கள். ஏற்கனவே அவருடைய ஆதரவு அரசியல் பிரமுகர்களை தடுப்பு காவல் சட்டத்தில் உள்ளே தள்ளியாகிவிட்டது.7மணிக்கு பொலீசார் வீட்டினுள் சென்று செல்வி.ஜெயலலிதாவிடம் கூறுகிறார்கள். பூஜையில் இருக்கிறேன்.பத்து நிமிடத்தில் வருகிறேன் என்கிறார்.
பொலிசார் கொண்டுவந்த வானில் ஏறுகிறார் அருகில் நின்ற பத்திரிகையாளரிடம்"இது பழிவாங்கும் செயல்" என்றுமட்டும் கூறுகிறார்"(ஐயோ! அடிக்கிறாங்க! கொல்றாங்களே! என்று கதறவில்லை).நிதிபதியின் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.அவர் 15நாள் காவலில் வைக்க உத்திரவிடுகிறார்.
அவரைப்பார்க்க அவருடைய தாய் விமானத்தில் வரவில்லை. இரண்டு நாள் கழித்து அவருடைய தந்தை வரவில்லை.ஏனன்றால் அவர்கள் உயிரோடு இல்லை.அவர் திருமணமாகாதவர் அதனால் அவருடையகணவர் வர வில்லை.நிர்க்கதியான அவருக்கு நெஞ்சிலே எம்.ஜி.ஆர் பனியனோடு வாழும் அப்பாவிமக்கள்தான் ஆதரவு அளித்தனர்.
அவர் மிது 8கோடி ஊழல் வழக்கு. கிட்டத்தட்ட 48000 பஞ்சாயத்துகளுக்கு தொலைகாட்சி பெட்டி வாங்க கொள்கைரீதியாக ஒப்புதல் அளித்தார். அதனை செல்வகணபதி என்ற அமைச்சர்.நிறைவெற்றினார்.(இப்பொது செல்வகணபதி எங்கிருக்கிறார்)
(ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி ராகவன் அவர்கள் கூறினார்."தார்மீக அடிப்படையில் சரியான் நேரத்தில் சரியான ஆலோசனை கூற ஜெயலலிதாவுக்கு யாருமே இல்லதது துரதிர்ஷ்டம்தான்" என்றார்)
6 comments:
இன்றைக்கு ஆலோசனை கூறுவதற்கு நிறையபேர் இருக்கிறார்கள், சோ ராமசாமி தான் ஜெவோட குரு. அவருகிட்ட மட்டும்தான் பணிவாக நடந்துக்கிறார்.
நல்ல பதிவு.
காலச்சக்கரம் சுற்றுகிறது.
நீங்கள் ஒரு கன்னட பிராமணப்பெண்ணணைக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரிகிறது. நானும் கூட ஒரு கன்னடம் பேசுகிற அருந்ததிய்ர்தான்(சக்கிலியர் என்பது சரியாக இருக்கும்)இவருக்கும் எம் ஜி யார் என்ற மலையாளிக்கும் அந்த பனியன் போட்ட தொழிலாளிக்கும் என்ன சம்பந்தம் என்று சொல்ல தங்களால் முடியுமா?
திலீப்: கண்ணாடியில் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களா?
கூட்டணி வைத்து இருப்பதால் இப்படி எல்லாம் எழுத வேண்டும் என்ற கட்டாயமா அய்யா. அம்மா ஆட்சியை அகற்றுவதற்காக நானும் உங்கள் த,மு.எ,ச,வோடு மேடையேறி பாடி இருக்கிறேன். புதுகை பிரகதீஸ்வரன் என்னும் கலைஞர் "ஆடம்மா ஆடு - உன் ஆட்டம் எவ்வளவு நாள் ? " என்று பாடுவார். அன்று அம்மாவை பர்கூரில் அடித்துத் துரத்திய கூட்டத்தில் நீங்களும் இருந்திருக்கிறீர்கள். ஜெயிலுக்கு அனுப்பியதில் கம்யூனிஸ்ட்களுக்கு பங்கு இருக்கிறது. இன்னும் ஐந்தாண்டுக் காலம் இருக்கிறது, உங்கள் காம்ரேடுகள் என்ன பாடு படப் போகிறார்கள், பார்க்கத் தானே போகிறோம்?
சிவகுமரன் அவர்களே ! 'காம்ரெடுகள் என்ன பாடு படப் போகிறார்கள் .பார்க்கத்தானே போகிறொம்" ஆஹா -ஆஹா ----என்ன்ன ஆசை ---காஸ்யபன்
Post a Comment