Saturday, May 07, 2011

ரத்தம் தண்ணீரைவிட அடர்த்தியனது.....

ரத்தம் தண்ணீரைவிட அடர்த்தியானது.....
" தீக்கதிர்" பத்திரிகையின் ஆசிரியராக தற்பொது பணியாற்று பவர் தோழர் வீ பரமெஸ்வரன் படிக்கும் காலத்திலேயே மாணவர் அமைப்பைக் கட்டமைபதில் ஈடுபாடு கொன்டிருந்தார்.படிப்பில் கெட்டிக்காரர். படு சேட்டைகாரரும் கூட..
திருச்சி நெஷனல் கல்லுரியில் தான் படித்தார். S.F.I ன் முன்னணி செயல் வீரர். திruச்சியில் ஒரு கல்லூரிப் பெராசிரியர் விடைத்தாள்களைத் திruத்துவதற்கு மாணவர்களிடம் பணம் வாங்குவார் . பணம் கொடுக்காத மாணவர்களைப் "பெயில்" ஆக்கிவிடுவார். பிரச்சினை S.F.I யிடம் வந்தது.வி.பி திட்டம் போட்டார். ஒரு மாணவனை செட்டப் செய்தார். லஞ்ச ஒழிப்பு துறைக்கும் தகவல் சொன்னார். இருவருமாக செர்ந்து அந்த பெராசிரியரை trap செய்து கைது செய்ய வைத்தனர்.
திருச்சியில் தோழர் அனந்தன் நம்பியாரின் தலைமையில் . பொன்மலை ரயில்வே ஊழியர் சங்கத்தில் செயல்பட ஆரம்பித்தார். அதன் பத்திரிகையான "தொழில் அரசு" இதழின் ஆசிரியராக பணியாற்றினார். தூத்துக்குடியி நடந்த ரயில்தொழிலாளர் கூட்டதிற்கு சென்றிருந்தார். கூட்டம் முடிந்து தொழிர்சங்க அலுவலகத்தில் படுத்திருந்தபொது."அவசரநிலைகாலம் " அறிவிக்கப்பட "கொழியை" அமுக்குவது போல போலீஸ் கைது செய்தது.M.I.S.A. வில் மிக இளம் வயதில் சென்றவர்களில் வி.பி யும் ஒருவர்.
அதன் பிறகு தான் தீக்கதிரில் சேர்ந்தார். சிறந்த பெச்சாளர். வி.பரமெஸ்வரன், வடலூர் சிதம்பரம், திருமங்கலம் ராமச்சந்திரன் ஆகியொர் அன்று கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள். அவரோடு செயல் படும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.
சென்னை ரயில்வே மருத்துவமனையில் பணியாற்றிய டாக்டர் செரியன் புகழ் பெற்ற இதய சிகிச்சை நிபுணர். ஒருமுறை மதுரயில் நடந்த மருத்துவ முகாமுக்கு வந்திருந்தார். "காஸ்யபன்! வரீங்களா! நாமும் போய் "செக்" பண்ணிக்கலாம்" என்றார் வி.பி. நாங்கள் இருவரும் சென்றோம். எல்லாம்முடிந்து கிளம்பும் போது உதவியாளர் ஒருவர் "வி.பி அவர்களை டாக்டர் ராஜன் பார்க்க விரும்புவதாக"க் கூறினார்.
டாக்டர் ராஜன் மிகச்சிறந்த இதய மருத்துவர். டாக்டர் செரியனுக்கு அடுத்தபடியாக புகழ் பெற்றவர். நங்கள் இருவரும் அவருடைய அறைக்குள்நுழைந்தோம். டாக்டர் எழுந்து இருகைகூப்பி எங்களை வரவேற்றார். "ஐயா! உங்களுக்கு என்னை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் உங்களை அறிவேன் என்பெயர் ராஜன். சுத்ந்திரப் பொராட்டத்தின் போது சிறையில் போலிஸாரல் சுட்டுக்கொல்லப்பட்ட ரயில் தொழிற்சங்க் தலைவர் பரமெஸ்வரனின் பேரன். உங்களைப் பார்த்ததில் எனக்கு எந்ததவைப் பார்த்த மாதிரி உணர்வு ஏற்படுகிறது. என்னுடைய "கார்டு" இது. எப்போது தெவப்பட்டாலும் உதவக் காத்திருக்கிறேன். என் பணி காரணமாக நேரிடையாக செயல் பட முடியவில்லை" என்றார்.
விடை பெற்று வெளியே வந்தோம். இருவருமே பேசிக் கொள்ளவைல்லை
ரத்தம் தண்ணிரைவிட அடர்த்தியானது !
Blood is thicker than water !

3 comments:

சிவகுமாரன் said...

இது போல் பணியின் காரணமாக வெளிப்படையாக செயல்பட முடியாதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.
மணலி கந்தசாமி, இன்னும் ஓரிரு கம்யூனிசப் போராளிகள் , போலிசாரால் தேடப்படும் போது, என் அப்பத்தா புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலம் என்னும் கிராமத்தில் ஒரு மாத காலம் அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள், அப்போது என் சித்தப்பா சுந்தர பாரதிக்கு சிறு வயது. சிங்கப்பூரில் இருந்த என் தாத்தாவும் அப்பாவும் வெளியே தெரியாமல் கம்யூனிஸ்ட்களுக்கு உதவி செய்திருக்கிறார்கள்.

அப்பாதுரை said...

மிகச்சரி.
நிறைவு எங்கிருந்து யாரிடமிருந்து கிடைக்கும் என்பது கிடைக்கும் வரை பலநேரம் தெரியாது.

மோகன்ஜி said...

உண்மை சார்! ரத்தம் தண்ணீரை விட அடர்த்தியானது.

கண்ணீரோ அந்த செந்நீரை விடவும் அடர்த்தியானது அல்லவா?