Thursday, May 12, 2011

அவர் புத்திசாலி......வாயைத்திறக்க மாட்டார்.....

அவர் புத்திசாலி...வாயைத்திறக்கமாட்டார்.....
வெள்ளிக்கிழமை காலை தெரிந்துவிடும்.என்று நினத்தோம். ஆனால் எண்ணும் முறைமையில் சில மாற்றங்கள் செய்திருப்பதால் மதியத்திற்கு மேல்தான் தேர்தல் முடிவுகள் தெரியவரும் என்று அறிவித்துள்ளார்கள்.
மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் மாநில தெர்தல் அதிகாரியைச்சந்தித்து எண்ணும்
பொது நடைபெறலாம் என்று கருதப்படும் சில தில்லிமுல்லுகள் பற்றி கூறிியிருக்கிறார்.2009ல் சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரம் நின்றார்.அவரை எதிர்த்து ராஜ கண்ணப்பன்(அ.தி.மு.க) நின்றார். என்னிக்கை முடிந்து ராஜ கண்ணப்பன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட தொண்டர்கள் வெற்றி கொண்டாட்டத்தில் இருந்தனர். திடிரென்று சிதம்பரம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.120 வது வாக்குச்சாவடியில் ராஜ கண்ணப்பனுக்கு 196 வாக்குகள் என்று பதிவு இயந்திரம் காட்டியுள்ளது. ப.சிதம்பரத்திற்கு 84. அதன் இறுதியாக கம்ப்யூட்டரில் பதிவு செய் யும்போது ராஜ கண்ணப்பனுக்கு 84 என்றும் ப.சிதம்பரத்திற்கு 196 என்றும் பதிவாகியுள்ளது.
இப்படி ஆலங்குடி தொகுதியில் மாற்றி பதிவு செய்துள்ளார்கள் என்று வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த சிவகங்கை ஃபார்முலாவை இப்பொது கையாள முடிவு செய்துள்ளதாக நம்பகமாக தெரியவ்ந்துள்ளது என்று ரங்கராஜன் மாநில தேர்தல் அதிிகாரி பிரவீன் குமாரிடம் கூறியுள்ளார்.இது பற்றி அ.தி.மு.க பொதுச்செயலாளர் செல்வி. ஜெயலலிதா அவர்களும் தேர்தல் கமிஷன் தலைவர் குரேஷிக்கு விரிவான கடிதம் எழுதியுள்ளார். நேற்று ஜெயா தொலைக்காட்சியில் ரவி பெர்னாடும் , பழ.கருப்பையா அவர்களும் இதுப்ற்றிி விவாதித்ததையும் பார்த்தேன்.. பாவம்! பழ.கருப்பையா "இப்படி ஒரு வெற்றியா! நாட்டின் உள் துறை அமைச்சர் செய்யலாமா? உலக நாடுகள் நம்மைப்ற்றி என்னநினைக்கும்" என்று ஆதங்கப்பட்டார்.
இதனைப் போய் இடுகை யிடவேண்டுமா? என்று சிலர் நினைக்கலாம். சிகாகோ தமிழனும், சிங்கப்புர் தமிழனும் தெரிந்து கொள்ள இது ஒன்று தானே வழி!
அமைச்சர் கோபப்படமாட்டாரா! வழக்குப் போடமாட்டாரா? என்று கெட்கலாம்.
அவர் புத்திசாலி...வாயைத்திறக்க மாட்டார்....

10 comments:

venu's pathivukal said...

அன்புத் தோழருக்கு

அருமையான இடுகைகளை ஒரு சேர இன்று வாசித்து முடித்தேன்....உங்களது நினைவுப் பாலம் உறுதியான தொங்கு பாலம்...ஆடி நீங்கள் நடக்கையில் இன்ப அனுபவம் கொடுத்தபடியே அதுவும் சேர்ந்து ஆடுகிறது....ரசனை மிக்க பதிவுகள். உணர்ச்சி மிக்க பதிவுகள். அடுத்தவரைப் பாராட்டும் ஒரு மூத்த உள்ளத்தின் வற்றாத தோழமையின் பதிவுகள்...வாழ்த்துக்கள் தோழர்.


எஸ் வி venugopalan

raj said...

Nice piece of info.

venu's pathivukal said...

நீங்கள் குறிப்பிடும் நபர் இப்போது மட்டுமல்ல,
எப்போதுமே மிகவும் எச்சரிக்கையாகவே வாய் திறப்பவர்.

மக்களுக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருப்போரில் சில
சாதுரியமிக்க ஜீவிகள், பேசும் நேரம் குறைவு, அவர்களுக்கு
வேலை மீது கவனம் அதிகம்...

அந்த வேலை சாமான்யர்களுக்கு
எதிரானது என்பதை விளக்கத் தேவையில்லை

எஸ் வி வேணுகோபாலன்

சிவகுமாரன் said...
This comment has been removed by the author.
சிவகுமாரன் said...

அய்யா. நான் ஆலங்குடி தொகுதியை சேர்ந்தவன். நீங்கள் குறிப்படும் படி நடக்கவில்லை. எல்லாம் வதந்தி. தோற்கும் நிலையிலிருந்த சிதம்பரம் கடைசியில் ஆலங்குடி வாக்குகள் எண்ணும் போது தான் சொற்ப வித்தியாசத்தில் ஜெயித்தார். தேர்தல் கமிசன் இன்று வரை வளைந்து கொடுக்காமல் தான் வேலை செய்கிறது. ஜெயித்தவுடன் இன்று தேர்தல் கமிசனை பாராட்டும் ஜெயலலிதா போன முறை தோற்றவுடன் என்ன பேசினார் என்று யோசித்துப் பாருங்கள். எல்லோரும் சந்தப்பவாதிகள் கம்யூனிஸ்ட்கள் உட்பட.

bandhu said...

அவர் செய்தாரோ இல்லையோ, இப்படி ஒரு வழி இருப்பதை அடித்தே ஆக வேண்டும். எப்படியெல்லாம் யோசிக்கறாங்க!

அப்பாதுரை said...

நடந்திருக்கச் சாத்தியம் தான் எனினும் நம்ப முடியவில்லை. தேர்தல் கமிசனையும் சிதம்பரத்தையும் எதிர்த்து வழக்கு தொடுக்கவில்லையா? இந்திரா காந்தி வென்றதே செல்லாது என்று துணிந்து தீர்ப்பு சொன்ன நீதிமன்றங்கள் இந்தியாவில் உண்டே?

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! வழக்கு நட்ந்து கொண்டிருக்கிறது.சென்ற தேர்தலில் ராதபுரம் தொகுதியில் மனொஜ் பாண்டியன் நின்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் நின்றது. தெர்த்லில் தில்லுமுல்லு செய்ததாக வழக்கு மனோஜ் பாண்டியன் போட்டார். பத்து நாட்களுக்கு முன்பு தீர்ப்பு மனொஜுக்கு சாதகமாய்வந்தது.இதுவும் ஐந்து வருடம் முடிந்தபின் வரலாம்---காஸ்யபன்

www.eraaedwin.com said...

சிதம்பரத்திற்குத் தெரியாதா வாயைத் திறந்தால் என்ன ஆகும் என்று

S.Raman, Vellore said...

Dear Comrade,

Why there is no new post from you. I worked as a Micro Observer in the Last Parliament Election and while counting there was all possibility of committing fraud and also wrote a post in my blog. In this election, counting in all tables were videographed and the chance was very much reduced