Monday, November 07, 2011

காந்தியடிகளும் ஏசுநாதரும்.......

காந்தியடிகளும் ஏசுநாதரும் ..........

காந்தியடிகளின் குணசித்திரம் அவருடைய எளிமைதான் என்று கூறுபவர்கள் அவரைப்பற்றி எதுவும் அறியாதவர்கள் என்று பதிவர் அப்பாதுரை அவர்கள் பின்னூட்டம் முற்றிலும் சரிதான்.

இந்திய அமைதி மையத்தின் இயக்குனர் டாக்டர் ஜாண் செல்லத்துரை அவர்களின் இடுகையைப்படித்த பிறகு காந்தி பற்றிய புதிய தரிசனம் கிடைத்தது. ஐம்பது வயதைக்கூட தாண்டாத ஜாண் அவர்களுடைய அறிவார்ந்த கருத்துக்கள் என்னை பல முறை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் மத்திய தரைக்கடல் பகுதியில் வாழ்ந்தமக்கள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து குழுக்களுக்கிடையே கொலை வெறியோடு தாக்கிக் கொண்டு வாழ்ந்துவந்தனர்.அவர்களை சீரமைத்து வாழவைக்க வந்தவர் தான் "மோஸஸ்" .அந்தமக்களுக்கு அன்பு என்பதை கற்றுக்கொடுத்தார்." அண்டைவீட்டானை நேசி" என்றார்.

அதன் பிறகு வந்தவ்ர் தான் ஏசுபிரான். அன்பு மதத்தை உருவாக்க தன்னையே சிலுவையில் அறைந்து கொண்டார்.அவரோ " உன் எதிரியை நேசி" என்றார்.

அண்ணல் காந்தியடிகள் சேவாகிராமத்தில் வசிக்கும்போது அவரைப்பார்க்க அமெரிக்காவில் இருந்து ஒரு குழு வந்தது. அதில் ஒரு பாதிரியாரும் இருந்தார். மோஸஸையும் ஏசுபிரானையும் விட அன்பினைப் பற்றி காந்தியடிகளால் என்ன சொல்லிவிட முடியும் என்று அவர் கருதினார்.

" காந்தி அவர்களே! ஏசு பிரான் கூறியதைவிட அன்பினைப் பற்றி நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் ?"

"அவர் என்ன சொன்னார்?"

"உன் எதிரியையும் நேசி என்றார் " என்று பாதிரியார் கூறினார்.

காந்தியடிகள பரிதாபமாகக் கூறினார்" எனக்கு எதிரிகள் எவருமே இல்லையே

அடிகள் மவுன விரதமிருப்பார் தன்னை புடம் போட்டுக்கொள்ள. தன் உடலை வருத்தி உண்ணாமல் இருப்பார் தன் மக்களைப் புடம் போட.

சமீபத்தில் அன்னா ஹசாரே மவுன விரதமிருந்தார். அதனை முடிக்க காந்தியின் சாமாதிக்குச்சென்றார்.அவ
ர் பின்னால் பத்திரிகையாளர்களும் தொலைகாட்சி நிருபர்களும் காமிரவோடு சென்றனர் சமாதியில் வணங்கி விரதத்தை ஹசாரே முடித்தார்.

நிருபர்களிடம் " கங்கிரசை எதிர்த்து பிரசாரம் செய்யப்போகிறேன் " என்று அறிவித்தார்.

" அண்ணல் காந்தியடிகளே இவர்களை மன்னியும் "

8 comments:

John Chelladurai said...
This comment has been removed by the author.
John Chelladurai said...

Ayya, as a writer your speciality is articulating even a complex happening in a simple language with out lowering its intensity. You are a 'People's Communicator'
The article 'Gandhi and Christ' was a touching narration of the happening of Truth.
Thank you for putting it in the Blog

hariharan said...

காந்திக்கு எதிரிகள் மனிதவடிவில் இல்லை தான்..

வகுப்புவாதம்,மதவெறி போன்றவற்றை எதிர்த்தார். சமர் புரிந்தார், ஆயுதம் தான் வலிமையாக இருந்தது. இன்று காந்தியைப் பிடிக்காதவர்களும் உண்ணா நோன்பு இருக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

John Chelladurai said...

அய்யா உங்கள் கட்டுரை காந்தியும் இயேசுவும் படிப்பதற்கு சுவையாக இருந்தது.

கட்டுரையை தாண்டிய என்னைத் தொட்ட ஒரு விஷயம்: அஹிம்சை பற்றிய காந்தியின் புரிந்துகொள்ளலை சமூக பரிமாணத்தில், அதன் புனிதம் கெடாமல் ஒரு கம்யூனிச சிந்தனையாளர் அழகாக சொல்லியிள்ளது. மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது.

பணத்தையும் சந்தையையும் அடித்தளமாகக் கொண்ட உலக மயமான பொருளாதாரத்தின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டுவரும் இத் தருணமே, மக்கள் நலனை மையமாகக் கொண்ட மாற்று பொருளாதாரம் மேலோங்க சிறந்த சமயம். இதற்கு, கிராம குடியரசை இலட்சியமாகக் கொண்ட கம்யூனிசமும், கிராம இராஜியத்தை இலட்சியமாகக் கொண்ட காந்திய சிந்தனையும் சங்கமிக்க வேண்டியது அவசியம் என்பது என் கருத்து. இதற்கு முதன்மைக் கருவியாக இருக்க, விருப்பு வெருப்பு இன்றி நடு நிலையோடு சமத்துவத்தையும் நியாயத்தையும் பற்றி எழுதும் தாங்கள்தான் சரியானவர் என நான் கருதுகிறேன்.

சிவகுமாரன் said...

அண்ணல் காந்தியடிகளே எங்களையும் மன்னியும்

சே.வேங்கடசுப்ரமணியன் said...

" புடம் போட" என்று வரும் இடங்களில் எல்லாம் ”புகைப்படம் போட” என்று மாற்றிவிட்டால் அன்னா ஹசாரேக்கு பொருந்தும்.

சுழியம் said...

//கிராம குடியரசை இலட்சியமாகக் கொண்ட கம்யூனிசமும், //

கம்யூனிசம் “கிராம” “குடியரசை” லட்சியமாகக் கொண்டதா ?

புதிய தகவலாக இருக்கிறதே. இதை நிறுவும் தகவல்கள் கிடைக்குமா ?

ADMIN said...

காந்தியின் அகிம்சையை எளிமையாக புரியவைத்தது தங்களின் கட்டுரை..
ஆனால் ஐயா.. காந்தி ஒரு பிடிவாதக்காரர் என்பதையும் மறுப்பதிற்கில்லை என்றே நினைக்கிறேன்.

காந்தியின் வாழ்க்கை வரலாற்றை படிக்கும்போது ஒரு சம்பவம் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
காந்தி நாட்காட்டி தாள்களைக் கூட வீணாக்காமல் குறிப்புகள் எழுதவும், கடிதங்களுக்கான குறிப்புகள் எழுதவும் பயன்படுத்துவார் என்றும், அவருடைய உதவியாளர் அல்லது (அவரது உறவினப் பெண்ணா? எனக்கு சரியாக நினைவுவரவில்லை.), ஒரு நாள் அந்த நாட்களாட்டி தாளை வெளியில் எங்கோ எறிந்துவிட்டிருந்தார் என்றும், அதை தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வா' என்று அவர் கட்டளையிட்டதாகவும், அதை தட்ட முடியாமல் உதவியாளர் நாள் முழுவதும் தேடி, பிறகு இரவில் ஓரிடத்தில் அந்த காகிதம் கிடைத்து, அதை காந்தயிடம் கொண்டு சென்று கொடுத்தபிறகுதான் காந்தி சமாதானம் அடைந்தார் என்று குறிக்கப்பட்டிருந்தது.

இத்தனை பிடிவாதம் மிக்கவரா காந்தி என்று என் சிந்தையில் ஓடியது.. ஆனால் அதற்கான காரணத்தை படித்த போது, இவ்வளவு எளிமையாய் கூட ஒருவரால் வாழ்க்கை நடத்தியிருக்க முடியுமா? என்ற ஆச்சர்யத்தை எனக்கு அளித்தது. இத்தகைய பிடிவாதமும், உறுதியும்தான் நமக்கு ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரப் பெற்றுத் தந்தது என்று நினைக்கும்போது அவரின் உன்னத நிலையை போற்றாமல் இருக்க முடியவில்லை.

நான் குறிப்பிட்ட குறிப்பில் ஏதேனும் தவறிருந்தால் சுட்டிக்காட்டவும். பகிர்ந்தமைக்கு நன்றி ஐயா!!!