Thursday, November 17, 2011

விஞ்ஞானம் மதத்தை வென்றது.......

விஞ்ஞானம் மதத்தை வென்றது.....

விஞ்ஞானம் மதத்தை வென்றது. உலகெங்கிலுமுள்ள கிறிஸ்தவர்களில் பெரும் பகுதியினர் கத்தோலிக்கர்கள் ஆவர் .அவர்களின் தலமை பீடம் ரோம் நகரத்தில் உள்ளது. அவர்களின் தலைவர் போப் ஆண்டவர் அங் குள்ளவாடிகன் நகரத்தில் வசிக்கிறார்.

அந்தமக்களுக்கு அவர் கூறுவதுதான் தெய்வவாக்கு. ரோம் நகரத்தில் "லா சாட்னியா" என்று ஒரு பல்கலைக்கழகம் உள்ளது. முழுக்க முழுக்கபோப் ஆண்டவரின் நிர்வாகத்தில் உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் கோடை விடுமுறைக்குப் பின் ஜானவரி மாதம் ஆரம்பிக்கும்.போப் ஆண்டவர் வந்து ஆரம்பித்து வைப்பார்.2008ம் ஆண்டு ஜனவரி மாதம் 17ம் தேதி வழக்கம் போல் ஆரம்பவிழா அறிவிக்கப்பட்டது.அப்பொது போப்பாக இருந்தவர் போப் பெனடிக் ரட்ச சிங்கர்.பல்கலைகழகத்தச் சேர்ந்த 67 விஞ்ஞானிகள் போப் பெனடிக் வரக்கூடாது என்று கூறினர்.திருச்சபை கூடி விவாதித்து,மத நல்லிணக்கத்தி நிலைநாட்ட போப் ஆண்டவர் இந்த நிகழ்ச்சியை ரத்து செய்வதாக அறிவித்தது.

இந்த நிகழ்ச்சி எவ்வளவு வாரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் புரிந்து கொள்ள நாம் 360 ஆண்டுகள் பின்னோக்கிச்செல்ல வெண்டும்.

1633ம் ஆண்டு கலீலியோ பூமி சூரியனைச்சுற்றி வருகிறது என்று அறிவித்தார்.திருச்சபையோ பூமி நிரந்தரமானது.சுரியன் தான் பூமியைச்சுற்றி வருகிறது என்ற கருத்தை கொண்டிருந்தது. கலீலியொவுக்கு முன்னரே கொபன்ஹெகர் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.இதனை வெளியே சொன்னால் திருச்சபை தன்னை தண்டிக்கும் என்று பயந்து தான் சாகும் வரை அதனை வெளியே சொல்லவில்லை

கலீலியோ தான் கண்டுபிடித்ததை அறிவித்து விட்டார். இது சபையின் மீதுள்ள விசுவாசத்தை அடிப்படையாகக் கொண்டது.ஆகவே கலீலியோ தண்டிக்கப்பட வேண்டும்.ஏசுவின்மீதுள்ள விசுவாசத்தைவிட திருச்சபையின்மீதுள்ள விசுவாசம் முக்கியமானது. இல்லையென்றால் சபை பலவீனப்பட்டுவிடும் அதனால் கலியொவை விசாரித்து போப்
ஆண்டவர் அவரைதண்டிக்க வெண்டும் என்று முடிவுசெய்தது.கலீலியோ சிறையில் அடைக்கப்பட்டார்.. வயதான காலத்தில் அவர் போப் ஆண்டவரிடம் மன்னிப்பு கேட்டு சூரியந்தான் பூமியைச்சுற்றுகிறதுஎன்பதை எற்றுக்கொள்ள வற்புறுத்தப்பட்டார்..

கலீலியோவை இப்படி சித்திரவதை செய்தது தவறு என்ற கருத்து சபைக்குள் மெலிதாகவந்து வளர்ச்சி பெற்று இது பற்றி திருச்சபை மறுவிசாரணை செய்ய வேண்டும் என்றகுரல் பலப்பட்டது.. 360 ஆண்டுகளுக்குப்பிறகு அப்படி ஒருவிசாரணையும் 1990ம் ஆண்டு நடந்தது.அதில் திருச்சபை சொல்வது தவறு.கலீலியோ சொன்னது தான் சரி என்று முடிவாகியது.கார்டினல்கள் இதற்கு வாக்களித்தனர்.கார்டினல் பெனடிக் ரட்சசிங்கர் என்பவர் மட்டும் கலீலியோ சொன்னது தவறு. திருச்சபை சொன்னது தான் சரி என்று வாக்களித்தார் . கால மாறுதலில் கார்டினல் பெனடிக் ரட்ச சிங்கர் போப் ஆண்டவராக தெர்ந்தெடுக்கப்பட்டார். 17-1-2008ம் ஆண்டு பல்கலை திறப்பு விழாவிற்கு அவர் வரவேண்டியதிருந்தது.

விஞ்ஞானத்தை அனுபவித்துக்கொண்டே விஞ்ஞானி கலீலியொவுக்கு எதிராக வாக்களித்த பெனடிக் திறப்பு விழாவுக்கு வரக்கூடாது என்று பல்கலைகழகத்தைச்சேர்ந்த 67 விஞ்ஞானிகள் போர்க்குரல் எழுப்பினர். திருச்சபை விழாவை போப் ஆண்டவர் கலந்து கொள்ளவிருந்த விழாவை மத ஒற்றுமையை மனதில் கொண்டு ரத்து செய்வதாக அறித்தது.

அந்த 67 விஞ்ஞானிகளுக்கும் நம் வாழ்த்துக்கள்.

(தோழர் இரா எட்வின் அவர்கள்"குற்றம் குற்றமே" என்று எழுதிய இடுகையத் தழுவி எழுதப்பட்டது.)

5 comments:

அப்பாதுரை said...

விஞ்ஞானத்தால் வருகிறதோ இல்லையோ, மெய்ஞானம் மதத்தால் நிச்சயமாக வராது. இதற்கான உதாரணங்கள் வரலாற்றில் எத்தனையோ இருந்தும் மதவால் பிடித்துத் தொங்கும் குரங்கினம் நாம் என்பது சற்று வேதனைப் பட வைக்கிறது இல்லையா?

hariharan said...

அருமையான தகவல், காலங்கடந்த மன்னிப்பு. இன்னும் சில நூறு வருடங்கள் கழித்து கிறிஸ்தவம் மதபீடம் மன்னிப்பு கேட்கலாம், சோஷலிசத்திற்கெதிராக நின்றோமே என்று.

சிவகுமாரன் said...

வெளிச்சத்திற்கு வராத தகவல்கள்.
.பகிர்வுக்கு நன்றி அய்யா .

இராஜராஜேஸ்வரி said...

அந்த 67 விஞ்ஞானிகளுக்கும் நம் வாழ்த்துக்கள்.


அருமையான ஆக்கபூர்வமான பகிர்வுக்க்கு வாழ்த்துகள்..

காலம் மாற காட்சியும்
ஒரு நாள் மாறும்..

Radhakrishnan said...

நம்பிக்கைகள் அத்தனை எளிதாக தொலைந்துவிடுவதில்லை என்பதைத்தான் கலிலியோ நிகழ்வு காட்டுகிறது.

ஒன்று சரியா, தவறா என்பது நடக்கும் நிகழ்வை பொருத்து அமைந்தாலும், நம்பிக்கை என வரும்போது பொய் கூட உண்மையாக தெரிவது இயல்புதான். இது நமது வாழ்வியலில் ஒரு பகுதி.