கடவுளை டெலஸ்கோப்பை வைத்து தெடுங்கள் -சர் .சி .வி .ராமன் ....
சென்னையில் மாகாணக் கல்லுரியில் .பேராசிரியர் எலியட் பணியாற்றினார். அவருடைய வகுப்பில் ஒருமானவனை அவன் தவறி வகுப்பிற்குள் நூழைந்துவிட்டானோ என்று கருதி விசாரித்தார்.
"நீ பி.ஏ.மாணவனா?"
"ஆமாம்!ஐயா"
" உன் பெயர் என்ன?"
"சி.வி.ராமன்"
அந்த மாணவன் தான் பின்னாளில் நோபல் பரிசு பெற்ற சர்.சி.வி ராமன்.இது 1903ம் ஆண்டு நடந்தது.ஸனாதனமன குடும்பம். குடும்பத்தினர் இசை,சமஸ்கிருதம்,அறிவியல் ஆகியவற்றைப் பற்றித்தான் பெசிக் கொண்டே இருப்பார்கள்.ராமனின் தந்தை கணிதவியல் பேராசிரியர்.
ஆரம்பத்தில் ராமன் ஒலி பற்றிய ஆராய்ச்சியில் தான் ஈடுபட்டார். அது பற்றிய அவருடைய ஆராய்ச்சிக்குறிப்புகள் உள்ளன பின்னர் ஒளி பற்றி ஆராயத்தொட்ங்கினார்.
1928ம் ஆண்டு அவர் 'ராமன்பாதிப்பு" என்ற அவர் கண்டுபிடிப்பு வெளியானது.அவருடைய மாணவன் கே எஸ்.கிருஷ்ணனும் அவருமாக கண்டு பிடித்தனர்.தனக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று உறுதியாக நினைத்தார்.லண்டன் புறப்படுவதற்கு 1929ம் ஆண்டே டிக்கெட்டும் வாங்கினார். விழா 1930ம் ஆண்டு நடந்தது..
.விழாவின் பொது ஒரு மதுக்கோப்பையில் மதுவை ஊற்றி அதில் ஒளியைப்பாய்ச்சி தன் கண்டுபிடிப்பை நிரூபித்தார்.மாலை விருந்தின் போது அவருக்கு மது பரிமாறப்பட்டபோது,தனக்கு குடிக்கும்பழக்கமில்லை என்று மறுத்துவிட்டார் . கண்டுபிடிப்புக்கு கருவிகள் எதுவும் கிடைக்கவில்லை.கருவிகளை அவரே செய்து கொண்டார். மொத்தம்300 ரூ செலவானது. .
ஒரு முறை அவரிடம் கடவுளைப்பற்றி நீங்கள் என்ன கருது கிறீர்கள் என்று கேட்கப்பட்டது.அவர் அதனைக் கவனிக்காதது போல் தவிர்த்தார். கேட்டவர் விடவில்லை.
"கடவுள் இருக்கிறார் என்றால் ஒரு டெலஸ்கோப்பை வைத்துக்கொண்டு இந்த பிரபஞ்சம் முழுவதும் தேடு.வெறும் யூகங்களை வத்துக் கொண்டு உன் நேரத்தை வீணாக்காதே" என்றார்.
1970 ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தெதி சர்.சி.வி.ராமன் மறைந்தார்.
11 comments:
ஹா ஹா! நல்ல நகைச்சுவையாகவே பதில் சொல்லி இருக்கிறார். என்ன கொடுமை, கடவுளை காண்பதற்கான ஒரு டெலஸ்கோப் இன்னும் கண்டுபிடிக்கப்படவே இல்லை.
சற்றும் எதிர்பாராத பதில்..
அருமை...
சிந்தித்தேன்..
!கடவுளை வேண்டிய கடவுளைக் காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன் அன்பரே...
http://gunathamizh.blogspot.com/2011/11/blog-post_21.html
'Search God with Telescope' has two meaning, 1. God appears to be too remotely related with our daily life; Do search God Scientifically (the instrument stands for scientific inquiry).
A genius' response.
The write up also stands as a witness to the Author's amazing memory and wider observation.
கடவுளை ஏன் பார்க்கமுடியாது என்று கேட்டால் ஆத்திகர்கள் கடவுள் `காற்று` மாதிரி என்பார்கள. ஆனால் விஞ்ஞானம் காற்றைக்கூட பகுத்து ஆக்சிஜனையும் நைட்ரஜனையும் பிரித்துவிட்டார்கள். இனி எதை சொல்வார்கள்.
ஒரு சனாதன குடும்பத்தில் பிறந்துவிட்டு அதுவும் 100 ஆண்டுகளுக்கு முன்பே இப்படிப்பட்ட கருத்துக்களை வெளியிடுவதற்கு மிகவும் தைரியம் வேண்டும், அதை புரட்சிக்கர கருத்துக்கள் என்று தான் சொல்லவெண்டும். 21ம் நூற்றாண்டிலும் விஞ்ஞானம் மூடநம்பிக்கையை பரப்பிக்கொண்டிருக்கிறது. என்ன செய்ய...
ஒன்று தேவைக்காக மற்றொன்று கிடைத்ததை பாதுகாக்க.. நமக்கு கடவுள் தேவையாக இருக்கிறார்.
டாக்டர் ஜாண் அவர்களே! ராமன் கூறியது இது தான். "If God is there find him in the Universe with a telescope and dont waste your time in speculation".நாகபுரி பல்கலையில் வேதியல் விரிவுரையாளராக இருக்கும் டாக்டர் ஆர்.எம்.ஜுடே அவர்கள் ராமன் பற்றி எழுதிய கட்டுரையிலிருந்து எடுத்தது.(Raman a seeker of Truth.)---காஸ்யபன்
ஹரிஹரன் அவர்களே! சி.வி.ராமனுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது.அவருடைய உறவினர் மகளை ராமன் விரும்பினார். இதனை தன்னுடைய சித்தாப்பா மகன் தம்பி வெங்கட ராமனிடம் கூறினார். தம்பி தலையிட்டு ராமன் விரும்பிய பெண்ணையே திருமணம் செய்ய பெரியவர்கள் மூலம் ஏற்பாடு செய்தார். தம்பி வெங்கடராமன் வேறு யாருமல்ல. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த காலம் சென்ற எம்.ஆர்.வெங்கடராமன் அவர்கள் தான்.---காஸ்யபன்
இன்னொரு மாணிக்கம், இன்னொரு புதிர்.
ஆச்சர்யமான பதில்.
உள்ளர்த்தம் இருப்பது போல் தோன்றுகிறது.
ஒரே அர்த்தம் தான் சிவகுமரா! கடவுள் இல்லை.இருக்கிறார் என்ற யூகத்தில் உன் நேரத்தை வீணாக்காதே.இருக்கிறார் என்றால் இந்த உலகத்தில் (மேலுலகத்தில் அல்ல)டெலஸ்கொப்பை வைத்துக்கொண்டு தேடு என்று நான் அர்த்தப்படுத்திக்கொள்கிறேன்.காஸ்யபன்
Post a Comment