Friday, June 15, 2012

கார்டுனிஸ்ட்கள் பாடு........ .......

கார்டுனிஸ்ட்கள்  பாடு  .........

                         

                      உலகத்தின் மிகச்சிறந்த பத்து கார்ட்டுநிஸ்டுகளைத் வரிசைப் படுத்தினால் அதில் இந்தியர்கள்    இரண்டு பேர் இருப்பார்கள்  .ஒருவர் "சங்கர்". மற்றோருவர் "ஆர்.கே.லஷுமணன் . இவர்கள்  ஐம்பது  அறுவது  வருடங்களுக்கு முன்னால் போட்ட கார்டுன் இன்று மிகப்பெரிய சிக்கலை
உருவாக்கியுள்ளது. .

                        இந்தியா சுதந்திரமடந்ததும்  அதற்கான அடி ப்படை  அரசியல்  சட்டத்தை உருவாக்க 
அரசியல்     நிர்ணய  சபை முடிவு  செய்தது  .அரசியல்சட்டத்தை  வடிவமைக்க  ஒரு குழுவையும்  தேர்ந்தெடுத்தது   அந்தக் குழுவில் உறுப்பினர்களாக கே.எம்.முன்ஷி ,அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர் ,என்.கோபாலசாமி
அய்யங்கார்,மிட்டார் ,சாதுல்லா ,கைதான் ஆகியோர் இருந்தனர்.
,

        முன்ஷி 

                  லட்சுமி காந்தன் கொலை வ ழ்க்கில்  என்.எஸ்.கிருஷ்ணனுக்காக
 வாதாடி வெற்றி பெற்றவர். அவருடைய வாததிறமையாய் கேட்க மற்ற நீதிபதிகளே மன்றத்திற்கு வருவார்களாம.

                              ஆந்திராவின் நெல்லூரில் பிறந்த அல்லாடி கிருஷ்ணசாமி மெட்ராஸ் மாகாணத்தின் அரசு வக்கீல்.

                      
  அய்யங்கார் ஜம்மு-காஷ்மீரின்  பிரதமராக  இருந்தார்  .சர்வதேச  நீதி 
றத்தில் காஷ்மீர் பிரச்சினையில் இந்தியா சார்பாக வாதாடியவர்.நேரு
 அமைசரவையில் இருந்தார். SIR ,MSM ,BNR  என்று தனியார் வசம் இருந்த
 ரயில்வேயை அரசுடைமையாக்கி
உலகத்தின்  பிரும்மாண்ட அமைப்பாக  இந்திய ரயிவோயை உரூவாக்கி உலகை வியக்க வைத்தவர்.


                     மத்திய அரசின் அரசு வக்கீலாக இருந்தவர் மிட்டார் அவர் விலக நேர்ந்தபோது அவருக்குப் பதிலாக மாதவராவ் வந்தார்.

                     இந்தியாவின் தொழிலதிபர்கள் குடும்பத்திளிருந்துவன்தவர் கைதான். அவர இறந்ததால் அவருக்குப் பதிலாக வந்த டிடி கிருஷ்ணமாச்சார்  கல்லுரி பேராசிரியராக இருந்து அரசியலுக்கு வந்தவர்.

                       இந்தக்குழுவுக்கு ஆலோசகராக இருந்தவர் பெநகல்  நரசிங்க ராவ். இவர் சர்வ தேச நீதி மன்ற நீதிபதியாக இருந்தவர்.

                           இந்த குழுவின் தலைவராக ஒப்பாரும் மிக்காருமில்லாத அண்ணல் அம்பேத்கர் இருந்தார்.

                             ( இந்தக் குழு உறுப்பினர்கள் ஒன்றும் செய்யாமல் அத்துனையையும் அம்பேத்கர் செய்ததாக  பிரச்சாரம் செய்தவர்களும் உண்டு)

                             உலகத்திலேயே மிகச்சிறந்த அரசியல் சட்டம் என்றால்
அவை நான்கு.  
கானடா,சுவிஸ் சோவியத் நாடு. ஆஸ்திரேலியா ஆகியவைதான் அவையாகும். இந்த நாடுகளில் மைய அரசும் உண்டு.தனியான பிரதேச அரசுகளும் உண்டு ,மைய அரசு பிரதேச அரசுகளுன் உரிமையைப் பறிக்கமுடியாது பிரதேச அரசுகள் மைய அரசைப் பலவீ னப்படுதத முடியாது.

                             கானடா நாட்டின் சட்டம் உருவாக இரண்டு ஆண்டுகளும் ஐந்து மாத
ங்களும் ஆயிற்று .ஆஸ்திரேலிய உருவாக ஒன்பது ஆண்டுகள் ஆயிற்று.

.                          ஆசிய ஆப்பிரிக்க மக்களின் ஈரலை வெந்து , வறுத்து,  போரித்து சாப்பிட்டவர்கள்  ஐரோப்பியக்  காலனி   ஆதிக்கவாதிகள்   ..தாங்கள் சுரண்டிய நாட்டை  சுதந்திரமாக வாழ விட்டதில்லை.வியட்நாமை
 வடக்கு,தெற்கு என்றார்கள் கம்போடியா,லாவோஸ் ,இந்தோனிஷியா,கொரியா
எதையும் விட்டு வைக்கவில்லை அபிசினியா,காங்கோ,என்று அவர்கள் நடத்திய அராஜகம் கொஞ்சமல்ல.
     .    .
                                 ஆனால் இந்தியா, பாக் , இலங்கை, பர்மாஆகிய நாடுகள் சுதந்திர மடைந்த பொது இப்படியாகவில்லை  .இதற்குக்  காரணம்  அவர்களின்   நல்       எண்ண மல்ல."மடத்தனமாக அட்லி  பிரபு  சுதந்திரம் கொடுத்துவிட்டான் இல்லையென்றால் இந்தியாவே இருக்காது.ஐம்பத்தாறு தேசங்களாக  பிரிந்து ஐரோப்பிய நாடுகளின் மாவட்டங்களாகியிருக்கும்" என்று  பேராசிரய நண்பர் கூறுவார் . .

                                    பிரிட்டன்,பெல்ஜியம்,பிரான்சு,ஜெர்மனி,இத்தாலி ஆகிய நாடுகள்
 இரண்டாமுலகப்போரில்  குறுக்கு ஒடிந்து குப்புற விழுந்து கிடந்தன.அவர்கள்  எழுவதற்குள்.காரியங்களை முடிக்க வேண்டும் என்று தலைவர்கள் நினைத்தனர்.    
                         
                                      1947ம ஆண்டு சுதந்திரம் பெற்றாலும் நமது ராஜா பிடிட்டி ஷ்  ராஜாதான்.விரைவில் குடியரசாக வேண்டும்.அதற்கான சட்டங்களை விரைவு படுத்த வேண்டும்  .அதனை  தாமதப் படுத்த  சிலர் இருந்தனர்.சட்டம் நிறைவேறியவுடன் அம்பேத்கர் கூ றி யது இங்கு நினைவு கூற தக்கது. நமது சட்டத்தை நாம் இரண்டு ஆண்டுகள் பதினொரு மாதத்தில் நிறை வேற்றியுள் ளோம் நம்முதுகில் தட்டி பாராட்டிக் கொள்ளலாம்."என்றார்

                                         அம்பேத்கரும் சட்டத்தை விரைவாக கொண்டுவர விரும்பினர்.
அதனால் தான் சங்கர் தன கார்டுனில்    "அவர்  கையிலும்  ஒரு  சவுக்கை"  கொடுத்தார்.

4 comments:

அழகிய நாட்கள் said...

//இந்தக் குழு உறுப்பினர்கள் ஒன்றும் செய்யாமல் அத்துனையையும் அம்பேத்கர் செய்ததாக பிரச்சாரம் செய்தவர்களும் உண்டு// நீங்கள் குறிப்பிடும் அல்லாடி கிருஷ்ணசாமி தனது உரையில் அண்ணல் அம்பேத்கார் அவர்கள் உடல் நிலையை வருத்தி தலைவராக இருந்து அத்தனை சுமைகளையும் ஏற்றுக்கொண்டு சட்டவரைவை சமர்ப்பித்தார் என்று குறிப்பிட்டது சரியில்லையோ...

kashyapan said...

"அம்பேத்கர் விமரிசனத்திற்கு அப்பார்பட்டவர் அல்ல.அவருக்கு ஒரு புனித பிம்பம் தேவையில்லை அவர்முன்வைத்த கருத்துக்கள் அவரது அரசியல் சமூகபொருளாதார பார்வை அவர் முன்வைத்த விழுமியங்கள் எது ஒன்றையும் விமரிசிக்கலாம்,அவர் உருவாக்கிய அரசியலமைப்புச்சட்டம் உட்பட" என்று இமானுவேல் பிரபு குறிப்பிட்டுள்ளார். ஒரு குழுவின் தலைவராகசெயல்படும்போது குழு உறுப்பினர்களை விடகூடுதல் போறுப்புபினை தங்கிக் கொண்டவர். அம்பேத்கரின்செய்நேர்த்தியை நாம் மதிக்கவேண்டும். குழு உறுப்பினர்களையும் மதிப்போம் ---காஸ்யபன்

சிவகுமாரன் said...

காந்தித் தாத்தா தான் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார் என்பது போலத்தான்.
என்ன செய்வது
வேர்கள் வெளித் தெரிவதில்லை.

அழகிய நாட்கள் said...

அம்பேத்கர் மட்டுமல்ல நேரு காந்தி உள்ளிட்ட அனைவரும் விமர்சனத்துக்கு உட்படுத்தப்படவேண்டியவர்கள்தான் என்பதில் நான் உங்களுடன் உடன்படுகிறேன். அதற்காக குழு உறுப்பினர்களான உயர் சாதியினரை மதிக்க வேண்டும் என்ற வரையரை ஏதும் எழுதப்படாமல் நடைமுறையில் இருக்கிறதா என்ன?