Tuesday, June 12, 2012

inthi ethippu pOraattaththin pOthu ............

                                                        இந்தி  எதிர்ப்பு போராட்டத்தின் போது ......... 

                                     1954ம் ஆண்டு -தி.லி.ஜங்கஷனில்  "இந்து" கல்லூரியில்  இன்டர் படித்துக்கொண்டிருந்தேன்.இந்தி  எதிர்ப்புப்  போராட்டம்நடந்தது . கடயநல்லூர் சத்யமுர்த்தி,ஷாகுல் ஹமிது,.எ.எல் சுப்பிரமணியம் என்று சேர்ந்தார்கள். ".  படியும் பண்ணிசைக்கும் பச்சையப்பன் கல்லூரியில் வேலை நிறுத்தம்! இடிந்த சுவரும் இன்  கவிபாடும்   இந்து கல்லூரியில் வேண்டாமா! வாருங்கள் தோழ்ர்களே! என்று ஒவ்வொரு வகுப்பறயாக. சென்று அழைப்போம் . போராட்டம் வெற்றி .

                                      எனக்கு பலகலைக்கழக  தேரவு எழுத தேந்தெடுக்க மறுத்துவிட்டார்கள் '


                                       வசதியான குடும்பம் என்று சொல்லமுடியாது. மணிமுத்தாறு அனைத்திட்டத்தில் தினக்கூலியாக சேர்ந்தேன் .வயதாகவில்லை என்பதால் boy சர்வீஸ்.ஒரு     நாளைக்கு 14 அணா கூலி.அங்கிருந்து  நாகபுரி   ,பின்  சேலம்   மேட்டூர்   ,ஹைதிராபாத் என்று சுற்றினேன். .நாகபுரியிலும், ஹைதிராபாத்திலும்  " பானி லா " என்று கூற மாட்டேன் .bring water  என்று என் கற்பை காப்பாற்றிக் கொள்வேன்..அப்போதெல்லாம் தபால் கார்டு காலணா. அதில் முகவரி எழுதும் இடத்திற்கு  எதிராக உள்ள காலி இடத்தில் கிழே இடது ஓரத்தில் "do notimpose Hindi ;down with Hindi Imperialism "என்று அச்சடித்து   அதனைத்தான்  பயன்படுத்துவோம்.  

                                       ஹைதிராபாத்தில்  ஹுசைன் சாகர் ஏரிக்கரையில் ஒருசின்ன -குன்று கூட அல்ல வெறும்  பாறை கள்  கொண்ட  மேடு இருக்கிறது அதன் உச்சியில் சில நன்பர்களோடு  சேர்ந்து கொண்டு "திராவிட நாடு     திராவிடருக்கே "என்று எழுதுவோம்  .இப்போது அந்தப் பாறை களைப்பெயர்த்து "பிர்லா" கோவில் கட்டிவிட்டார். அலுவலக நண்பர்கள் "க்யா ரே கஜகம் " என்று வித்தாரம் பேசுவார்கள்..குஜராத்தி,பெங்காலி  நண்பர்கள் "then why should u work in lic of india ? என்று கேட்பார்கள். மிகவும் நிதானமாக  "to earn foriegn exchange to my mother land "  என்பேன்.நாங்கள் எங்களை " dlf" என்று கூறிக்கொள்வோம்  "dravidian liberation force "

                                        என்ன செய்ய? யாரக் கேட்க? அண்ணா பிரிவினையை கைவிட்டார். நாங்கள் சிலர் பித்துப்பிடித்து அலை ந்தோம் நான் ஆன்மிகத்தை நாடினேன் ஹைதிராபாத்  keys பள்ளியில் நடக்கும் சின்மயா பிரசங்கத்தைக் கேட்பேன்.ஒருகட்டத்தில் பம்பாய் பாவை யில் நடக்கும் சாந்திபணி கல்லூரியில் சேர்ந்து "பரிவ்ராஜகனாக" மாறி  மக்களை  மறந்து மகேசன் சேவைக்குபுறப்பட ஆயத்தம் செய்தேன்.  என் குடும்பமும்,அகில இந்திய இன்சுரன்ஸ் ஊழியர் சங்கமும் என்னை திசை திருப்பி ஆட்கொண்டதுமதுரைக்கு மாற்றல் வாங்கிக் கொண்டேன். மனதளவில், தத்துவார்த்த அளவில் மாற்றம்    கொண்டேன்.

                                        1965ம் ஆண்டு.   இந்தி மத்திய ஆட்சி  மொழியாவதை  எதிர்த்து  மாணவர்கள்  ஊர்வலம்  நடத்தினார்கள் .மதுரையில்   மேலமாசி வீ தி  கடந்து  வடக்குமாசி  வீ தி க்கு  ஊர்வலம்  வருகிறது  .ராமாயனச்சாவடிஅரு   கில்    காங்கிராஸ் காரர்கள் வேடிக்கை     பார்த்துக் கொண்டிருந்தார்கள்.அவர்களில் ஒருவன் பெயர் வீரய்யன்.   அவன் மாணவர்களை கிண்டல் 
செய்து கொண்டிருந்தான்..பதிலுக்கு மாணவர்கள் பேச தள்ளு முள்ளு ஆகி தாக்குதல் பதில் தாக்குதல் அருவாள் என்றாகிவிட்டது.வெவ்  வேறு  ஊர்களுக்கு வெவ்வேறு தகவல் போக தமிழ்நாடு முழுவதும்கலவரம் பரவியது..மணப்பறை ரயில் நிலையம் தீயிட்டு
கொளுத்தப்பட்டது.அரசு அடக்குமுறையை ஏவிவிட்டது.மதுரையை கேந்திரமாகக் கொண்டு மாணவர்கள் செயல்பட்டனர்.

                         அரசின் கேடுபிடி அதிகமாகியது   .கைது  படலம்  துவங்கியது  .ஆங்காங்கே  வன்முறைச்சம்பவங்கள்  நடந்தான்  ..போராட்டத்தை தி.மு.க துண்டிவிடுவதாக அரசு  அறிவித்தது. தி.மு.க துண்டிவிடவில்லை என்று அண்ணா அவர்கள் அறிக்கை விட்டார்கள். தலைமையில்லாமல் மாணவர்கள் தவித்தனர். மதுரையில் மருத்துவக் கல்லுரி மாணவர்கள் முன்கை எடுத்திருந்த.னர் .டாக்டர் செதுராமன்,டாக்டர் சீனிவாசன் ஆகியோர் செயல்.   பட்டனர் அவர்களுக்கு  தொழிற்சங்கங்கள் உதவ முன்வந்தன.வக்கீல் புதுத்தெருவில் இருந்த lic உழியர் சங்கம.சுற்றறிக்கை ஆகியவைகளை தயாரிக்க உதவியது.மோப்பம்பிடித்த போலிஸ் சங்கத்த்ளைவர்களை காவல் நிலையம் அழைத்து சென்றது.

                             கம்யுனிஸ்ட் கட்சியை  சேர்ந்த மோகன்  குமாரமங்கலம்  தலையிட்டு  அரசொடு பெச்சுவார்த்தை  நடத்தினார் . .இந்திரா  அம்மையார் இந்தி பேசாத மக்கள்விரும்ம்பும் வரை ஆங்கிலமும் தொடரும் என்று அறிவித்தார்..

                              இந்தி பேசும் மக்கள் ஆங்கிலம்,அல்லது இந்தி என்றால்  அவ்ர்கள்  தாய் மொழி இந்தி சவுகரியம். இந்திபெசாதமக்களுக்கு அவர்கள் தாய் மொழி என்னாவது.?இதனை சரி செய்ய மும்மொழிக்கொள்கை என்றார்கள்.இந்தி பேசுபவர்கள் ஆங்கிலம்,இந்தி தவிர இந்திபேசாத மக்களின் மொழி ஒன்ரைக்கற்க வேண்டும் என்றார்கள.
ஆங்கிலம்,இந்தி,தமிழ் ஆகியவற்றை நாம்படிக்கலாமேன்றார்கள்..ஆனால்திமு.க இதனை ஏற்கவில்லை. மற்ற இடங்களிம்மும்மொழி க்கொள்கை யும்,,தமிகத்தில்  இருமொழிக்கொள்கையும் அமலாயிர்று. இங்கு தமிழ், ஆங்கிலமேன்றாயிர்று. காலப்போக்கில் ஆங்கிலம் முன்னணிக்கு வந்துவிட்டது கேரளா,கர்நாடகா,ஆந்திரம் ஆகிய இடங்களில் மும்மொழிக்கொள்கைகளின் பலனை அனுபவிக்கிறார்கள்.. 
.
                       


..

                                                              

4 comments:

சிவகுமாரன் said...

இவர்கள் இந்தியால் தமிழ் அழியும் என்றார்கள். தமிழை எங்கே வளர்த்தார்கள்.? இன்றைய தலைமுறையில் பலருக்கு டமில் பேச மட்டுமே தெரிகிறது. தெரியாது என்பதை பெருமையாகவும் சொல்லிக் கொள்கிறார்கள். மெல்லத் தமிழினி சாகும் என்றொரு பேதை உரைத்தான் - என்பான் பாரதி. சொன்னவன் பேதை அல்ல மேதை.

அப்பாதுரை said...

இப்ப திடீர்னு இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை எல்லாரும் பிடிச்சு உருட்டுறாங்கே என்ன விஷயம்?

மோகன்ஜி said...

நான் ஒண்ணும் ஹிந்திய விட்டுடலயே! ஹேமமாலினியும் ஜீனத் அம்மனும் பேஷா சொல்லித் தந்தாங்களே!

Vetirmagal said...

அருமை! பழைய நினைவுகளை கிளறி விட்டது.
இங்கேயே இருந்தாலும், இந்தி மாத்திரம் வேண்டாம் என்று, மனதில் , செயலில் கடைபிடித்த்து , பல வருடங்களாக!

இப்போதும், தெலுங்கில் படித்தாலும் , மனம் ஒன்றுகிறதே தவிர, இந்தி, அப்படி ஒன்றும் கவர்ச்சியாக இல்லை( சினிமா தவிர).