யார் இந்த ரஞ்சன் பட்டாசார்யா .......?
ரஞ்சன் பட்டாசார்யா என்பவர் யார்.........?
கடந்த இரண்டு நாட்களாக பத்திரிகையில் அடிபட்டு வரும்பெயர் ரஞ்சன் பட்டாசார்யா.இவரைப் பற்றி தகவல்களை அறிய முற்பட்டேன் அப்போது வினோத் மேத்தா என்பவர் அவசர நிலை, வாஜ்பாய் என்று" இந்துஸ்தான் டைம்ஸ்" . பத்திரிகையில் (4-11-111) எழுதிய கட்டுரை ஒன்று கிடைத்தது.
வினோத் ஒரு பத்திரிகையாளர்.வாஜ்பயை நன்றாகத் தெரிந்தவர்."லக்னோ பையன்" (luknow boy) என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்த புத்தகம் பற்றிதான் "இந்துஸ்தான் டைம்ஸ்" கட்டுரை எழுதியிருந்தது.
"வாஜ்பாய் அவர்களை சமூகதளத்திலும் ,அரசியல்தலத்திலும் எனக்கு தெரியும்.நான் 1991ல் டெல்லி வந்தேன். அவருடைய நண்பர் பிரிஜேஷ் மிஸ்ரா. பிரிஜேஷ் ஐ.நாவில் இந்தியாவின் பிரதினிதியாக செயல்பாட்டவர்.வாஜ்பாய் அரசியல் ரீதியாகவோ,மற்றவகையிலோ சோர்வடைந்தால் நியூயார்க்பொய்விடுவார். அங்கு பிரிஜேஷ் உடன் தங்குவார்.ஒருபத்து நாள் தங்குவார். "ஜாலி"யாக இருப்பார்கள். கொஞ்சம் 'கச முச"இருக்கும். வஜ்பாய் ஒன்றும் " சந்நியாசி "இல்லை. புலால் உண்ணுவார்."முடாக்" குடியரில்லை. பெண் நண்பர்கள் உண்டு." என்று தன் நூலில் விணொத் குறிப்பிட்டுள்ளார்.
" அவர் பிரதமர் ஆனதும் 7 ரேஸ் கோர்ஸ் சாலை வீட்டில் தங்கினார். அவரோடு திருமதி கௌல் என்ற அம்மையாரும் தங்கினார். கணவர்கௌல் டில்லியில் பெராசிரியராக இருந்தார். இறந்து விட்டார், கௌல் அம்மையாருக்கு இரண்டு குழந்தைகள். மூத்தவர் பெயர் "நிமிதா".அவருடைய கணவர் தான் ரஞ்சசன் பட்டசார்யா.நிமிதாவை தன்னுடைய தத்து மகளாகவும்,ரஞ்சனை தத்து மறுமகனாகவும் வாஜ்பாய் அறிவித்தார்.எந்த சந்தர்ப்பத்திலும் வாஜ்பாய் இந்த நால்வர் குடும்பத்தை மறைக்கவோ ,மறுக்கவோ இல்லை" என்றும் வினோத் தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறர்.
பா.ஜ.க.வில் வாஜ்பாயை எதிர்ப்பவர்கள் உண்டு.அந்த எதிர் கோஷ்டியில் இருப்பவர்' "சக்தி சின்கா என்பவர்.இவர் கௌல் அம்மையாரின் இரண்டாவது மகளை (நிமிதாவின் தங்கையை)திருமணம் செய்து கொண்டவர்.
வாஜ்பய் ஆட்சியில் அதிகாரமையமாக செயல்பட்டவர் ரஞ்சன் என்பது தான் அரவிந்த் கெசரிவால் அவர்களின் குற்றச்சாட்டு. முக்கிய நகரங்களை இணக்கும் "நாற்கர சாலை" அமைக்க 50000கோடி ஒப்பந்தம் போடுவதில் ஊழல் என்றும் அதில் ரஞ்சனுக்கும் தொடர்பு உண்டென்றும் புகார் எழுந்துள்ளது.
6 comments:
A right man in a wrong party என்று வாஜ்பாயைப் பற்றி சொல்வார்கள். அவரும் அப்படித் தானா ?
வாஜ்பாய்க்கு ஜெண்டில்மேன் என்ற பட்டத்தை கொடுத்தவர் நமது தமிழின தலைவர்.ஒரு right person எப்படி wrong party ல் இருக்கமுடியும்.
மன்மோகன் சுத்தமானவராக இருந்தாலும் ஊழலுக்கு துணைபோகிறார், வழிசெய்கிறார். அதே மாதிரி வாஜ்பாய் கடப்பாரையை தூக்காவிட்டாலும் தூக்கிக்கொடுத்தார்.
நல்ல தொரு பகிர்வு! வாஜ்பாய் பற்றிய அறியாத தகவல்கள்! அறிந்து கொண்டேன்! நன்றி!
இது மருமகன்களின் காலம் !
I don't understand the "Right man in the wrong party" concept. Being in a party- is a personal choice. Wrong party, hence, must essentially be accompanied with the "wrong man" tag, for any person in a particular party must speak the language of the party. Personally I am not in favour of any party that's formed along the religious lines.
Whatever you have, sir, written about Mr. Vajpayee is news to me. But since, I am a skeptic by nature, I would rather not let it in my mind. Whoever they may be- Mr. Vajpayee/Mr. Manmohan- and all those who come along with the "Right man" tag, they all seem to lack one important thing though- "Integrity of mind".
Good to be here...
Madam ! there are leaders whose integrety of mind is perfectly all right and they serve their respective party.The dirty internal politics of men with doubtful integrity polutes the atMosphere.That drives the people of good intentions away from the political system .---kashyapan
Post a Comment