Monday, February 18, 2013

1952ல் சரியாகவே ஆரம்பித்தோம்...!


மத்தியிலும் சரி ,மாநிலத்திலும் சரி 1952ம் ஆண்டு சரியாகவே ஆரம்பித்தோம் !  

1952ம்   ஆண்டு முதல்தேர்தல் நடந்தது ! பண்டித  ஜவகர்லால்நேரு பிரதமராக பதவிஏற்றார் ! அதிகார பூர்வமான எதிர்கட்சியாக எந்தகட்சிக்கும் தேவையான எண்ணிக்கையில்  நா டாளுமன்ற உறுப்பினர்கள் இல்லை !

கம்யுனிஸ்ட்கட்சிக்கு காங்கிரசுக்கு அடுத்தபடியாக 18 உறுப்பினர்களிருந்தனர். சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டார்  ! ஜி.வி .மாவ்லங்கர் என்ற காந்தீய வாதி வெற்றி பெற்றார் ! 

இந்தியா தன்னுடைய நாடளுமன்ற நடைமுறையை பிரிட்டனின் மரபை ஒட்டி நடைமுறைப்படுத்த விரும்பியது. சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அவரை ஆளும் கட்சி தலைவருமேதிர்கட்சிதலைவரும் இருபுறமும் "கைலாகு" கொடுத்து  அழைத்துவந்து சபாநாயகர் இருக்கையில் அமர்த்த வேண்டும் !

உலகமே பண்டித நேருவுக்கு அடுத்து இந்தியாவின் அடுத்தபடியான   தலைவர் யார் என்று தெரிந்து கொள்ள காத்திருந்தது ! 

மாவ்லன்கரின் வலது புறம்    நேருவும் இடது புறம் எ.கே .கோபாலனும்  கைலாகு கொடுத்து அழைத்து வந்தனர் !

ஆம்! இந்திய குடியரசின் முதல் நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவராக  "நான் என்றும் மக்கள் ஊழியனே" என்று அறிவித்த எ.கே.ஜி 1952லிருந்து 1967வரை 15 ஆண்டுகள் எதிர்க்கட்சி தலைவராக பணியாற்றினார் !

அன்றைய மதறாஸ் மாகாணத்திலும் தேர்தல் நடந்தது !

சட்டமன்றத்தில்  காங்கிரஸ் கட்சிதோல்வியத்தழுவியது ! கம்யூனிஸ்களு க்கு 68 இடங்கள்கிடைத்தன! சோசலிஸ்டுகள்,பிரஜா சோசலிஸ்டுகள் ,மற்றும் சிலகட் சிகளோடு சேர்ந்து ஐக்கிய ஜனநாயக முன்னணி உறுவாகியது ! பிரகாசம் காரு தலைமையில் அரசு உரூவாக   கவர்னர் பிரகாசாவை சந்திக்க சென்றனர் !   

இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி ,முதலாளி கோயங்கா, டிடி கிருஷ்ணமாசாரி இதனை எதிர்த்தனர்! காமராஜர் கம்யுனிஸ்டுகள் வந்தால் என்ன ?வரட்டுமே? என்று மௌனம் காத்தார் ! அவருடைய எதிர்ப்பாளர்கள்  
ராஜாஜியை சந்தித்தனர் !அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ராஜாஜியை கவர்னர் அழைத்து முதலமைசராக பதவிப் பிரமாணம் செய்வித்தார் ! அப்போதைய வன்னியர்கட்சியான காமன்வீ ல்,,உழப்பாளர்கட்சிகளை விலைக்கு வாங்கி அமைசரவையை அமைத்தார் ராஜாஜி! 

சட்டமன்ற சபாநாயகர் தேர்தல் வந்தது !  தலித்துகளின்தலைவர்  சிவசண்முகம்பிள்ளை தேர்ந்தெடுக்கப்பட்டார்! சட்டமன்ற கட்சி தலைவர் சி சுப்பிரமணியம் ஒர்பக்கமும், எதிர்கட்சியான கம்யூனிஸ்ட்கட்சிதலைவர் நாகி ரெட்டி மற்றொரு பக்கமும்  கைலாகு கொடுத்து அவரை இருக்கையிலமர்த்தினர் !


























































 













0 comments: