Tuesday, February 05, 2013

"விஸ்வரூபம்"

படமும் -பாடமும் .....!!!


நாளை மறு நாள் "விஸ்வருபம் " திரைப்படம் தமிழகத்தில் வெளியாகிறது என்ற அறிவிப்பு வந்துள்ளது ! நேற்று இரவு  11மணி  வரை இந்திய அமைதிமையத்தின் முன்னாள் இயக்குனர் டாக்டர்.ஜாண் செல்லத்துரை அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தேன்! "விஸ்வரூபம்" பற்றியும்பேச்சு வந்தது !

நாகபுரியில் நான்குநாட்களாக ஐந்து அரங்குகளில் ஐந்து காட்சிகள் அரங்கு நிறந்த காட்சிகளாக ஒடுகிறது !

":கோடிகணக்கில் சிலவு செய்தாலும் கமலுக்கு இவ்வளவு விளம்பரம் கிடைக்காது "என்றார் டாக்டர் 

"தமிழகம் தவிர மற்ற மாநிலங்களிலும் ,மற்ற நாடுகளிலும் ஓடுகிறதே "-நான் 

"பாவம்! 90 கோடி  சிலவாமே "

"இருக்குமா ?"

"சந்தேகமா?"

"75 லட்ச்ம்கோடி கறுப்புப் பண த்தின் அங்கம் அந்த தொழில் திரைப்படத்துறை " 

"அதனால் "

"இரண்டுலட்சம்  கொடுத்துவிட்டு ஒருலட்சத்திற்கு ரசீது வாங்கும் துறை " 

"பரபரப்பு அதிகம் ! அதில் என்னதான் இருக்கிறது என்ற ஆவல் !"

டாக்டர் பெருமூச்சு விட்டார் !" தேவையற்ற சர்ச்சை! தணிக்கைஆன பிறகும்"   

"சட்டம் இருக்கிறதே "

"சட்டம் தனி நபரை மட்டுமே தண்டிக்கும் " 

"அரசியல் சட்டம் இருக்கிறதே "

"அரசியல் சட்டம் தான்  நீதிமன்றத்தை தந்தது ! அரசியல்சட்டம்தான் நிர்வாகத்தையும் , தணிக்கையையும் தந்தது " 

"தணிக்கையை   எதிர்த்தது தனி நபர் அல்ல ! 24 இஸ்லாமிய கூட்டமைபு ! தங்கள் தங்கள் ஆதரவாளர்களை தக்கவைத்துக் கொள்ள one up manship நடந்தது"

"யூ டுயுபில்" பார்த்தேன் ! கமலின் குடும்பத்தினரை இழிவாக பேசினார்கள் "

"நானும் பார்த்தேன் "என்றார் டாக்டர் 

பெருமூச்சு விட்டார் ! 

"இவர்களை தண்டிக்க முடியாதா ? "நான் கேட்டேன் 

மெதுவாக நிதானமாக சொன்னார் " வழிபாட்டுத்தலத்திற்குள் ஒருவன் புகுந்து பங்கம் செய்தால் தண்டிக்கலாம் ! பாபர் மசூதிக்குள் புகுந்து இடித்தவர்களை என்ன செய்தோம் ??? "சட்டம் தனி நபர்களைத்தான் தண்டிக்கும் ! இது தான் "விஸ்வரூபம்" படம் தரும் பாடம் !!!!


3 comments:

Prem said...

Nice message in last line.

சில நாட்களாக இந்த விஷயத்தில் மனதில் ஒரு குழப்பம் இருக்கவே செய்கிறது. மதத்தை துறந்து, கடவுளை துறந்த போதிலும், ஒரு சமுகதில் இருந்து இது போன்று குரல் எழும் பொழுது அடி மனதில் ஒரு வெறுப்பு மன நிலை உருவாகிறது. இது ஒரு ஆதிக்க மன நிலையா அல்லது மத வெறுப்பு மன நிலைய என்று தெரியவில்லை.

Media is playing vital role in creating such confusions. It takes some amount of time to come out of emotional reactions and do some rational thinking. You might have reached that matured state with good experiences but I sometimes feel that with repeated communications, the mind may turn to a rightist view. Wish it does not :)

John Chelladurai said...

ஐயா வணக்கம்,
படமும் பாடமும் இடுகை பார்த்தேன். விஷ்வரூபத்தைக் கூட ரத்தின சுருக்கமாக சொல்லி அதிலிருந்து ஒரு அரசியல் கருத்தும் சொல்லமுடியும் என்பதையும் காட்டியிருப்பது தங்களின் எழுத்து சாமர்த்தியம். படித்தேன் ரசித்தேன்.

John Chelladurai said...

அரசியல் சாசனம் தனி மனித குற்றவாளிகளைத்தான் தண்டிக்கும் என்பது அதன் பாரபட்சம் அல்ல, குறைபாடு - limitation - என்றே கொள்ளணும். மக்களாட்சியில், 'மக்கள் வாக்கே மகேசன் வாக்கு' என்பதால் கூட்டம் கூடினால் சாசனம் கூட நின்று செவி சாய்க்கிறது. பிரச்சனை என்னவென்றால், குடிகள் மேம்மக்களாக (Enlightened) இல்லாத பட்சத்தில், சாசனமும் அவர்களளவில் நின்றுதான் / யோசித்துதான் செயல்படும்.. 'The strength of a chain is as strong as its weakest link' என்பதற்கு இணங்க, நமது அரசியல் சாசனமும், சந்தியில் நின்று below the belt அடிப்பவனுக்கும் கைகட்டி சேவகம் செய்கிறது. அவன் தனி மனிதனாக வந்திருந்தால் நடப்பதே வேற.