கெளதம் கோஷும் ரவி குமார்களும்...!!!
1975 ம் ஆண்டு வாக்கில் பங்களுருவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் " மா பூமி " என்ற தெலுங்கு படம் மிகச்சிறந்த அரசியல் படத்திற்கான விருதினை பெற்றது !
தெலுங்கானா விவசாயிகள் ஆயுதமேந்தி நடத்திய தெலுங்கானா புரட்சிபற்றிய படமாகும் ! docofiction முறையில் எடுக்கப்பட்ட அந்தப்படம், நேரு,ராஜாஜி, காங்கிரஸ் கட்சி ஆகியவை அந்த விவசாயிகளுக்கு செய்த துரோகத்தைச் சித்தரிக்கும் படம் !
கர்னல் சௌத்திரி தலைமையில் இந்திய ராணுவம் ஹைதிராபாத்துக்குள் நுழைந்து புரட்சிநடத்திய கம்யுனிஸ்டுகளை நரவேட்டையாடியதை சித்தரித்த படம் !
அதன் இயக்குனர் தான் கெளதம் கோஷ் ! அவரிடம் ஒரு நேர்காணலின் பொது நிருபர் கேட்டார் " ஐயா! இந்தப்படம் அரசாங்கத்தை நேரடியாக குற்றம் சாடுகிறது ! இதனை சென்சாரில் அனுமதிப்பார்கள் என்று எப்படி எதிர் பார்த்தீர்கள் ? "என்று !
"இந்திய சுதந்திரப் போராட்டத்தின் மிக முக்கியமான தருணத்தை படமாக்க விரும்பினேன் ! விக்டோரியா நூலகத்தில் தேடினேன் ! அப்போது கிடைத்த தகவல்தான் தெலுங்கானா புரட்சி ! அதன் உன்னதமும் உக்கிரமும் குறையாமல் சித்தரிக்க விரும்பினேன்! படமெடுக்க ஆரம்பிக்கும்போதே சமரசம் செய்ய வேண்டுமா? பார்ப்போமே ஒரு கை ! என்று நினைத்தேன்! அதுமட்டுமல்லாமல் தணிக்கை உறுப்பினர்களின் அறிவு பற்றியும் எனக்கு ஒரு அனுமானம் உண்டு " என்றார் கெளதம் கோஷ் !
நம் ஆயுட்காலத்தில் ஒரு முறையாவது பார்க்க வேண்டியபடம்"மா பூமி
2 comments:
Watched the movie on Youtube. The movie was a very good documentation of social/political set-up back then. Thanks for writing about the movie...
தெலுங்கானப் புரட்சி பற்றிய திரைப்படத்தை அறிமுகம் செய்ததர்கு மிகவும் நன்றி தோழரே! நேற்றிரவு தான் மாபூமி பார்த்தேன். நிலப்பிரபுத்துவத்தின் கொடுமைகளுக்கு மொழியோ, மதமோ தடையிருக்காது. தமிழகத்திலும் ஜமிந்தார்கள் இப்படித்டான் இருந்திருப்பார்கள். சங்கம் இல்லாவிட்டால் அடிமைகள் என்பவர்கள் மனிதர்கள் ஆகியிருக்க முடியாது, ஆனால் நேருவின் ஆட்சி யில் மீண்டும் நிலப்பிரபுக்கள் கையில் நிலம், போலீஸ் எல்லாம். இந்திய சுதந்திரம் தெலுங்கானாவில் நிஜாமை தூக்கிப்போட்டது ஆனால் விவசாயிகளை சொந்த நாட்டு மக்களை கொன்றொழித்தார்கள்..
Post a Comment