சூரியனெல்லி வழக்கும்
மாநிலங்கள் அவையும் .....!!!
சூரியனெல்லி என்ற ஊர் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ளது ! அங்குள்ள 16 வயது பெண் ஒருவரை பஸ் கண்டக்டர் ஒருவர் ஏமாற்றி கடத்தி வேறோரு பெண்ணிடம் விற்று விட்டான் .
அந்தப்பெண் அவளுடைய கூட்டாளியான தர்மராஜன்னோடு சேர்ந்து விபசார விடுதிகளுக்குபெண்களை சப்ளை செய்பவள்.தர்மராஜன் வக்கீலுக்கு படித்த்வன் .
இது 1996ம் ஆண்டு ஜனவரி மாதம் நடந்தது ! அந்தப்பெண்ணை பல்வேறு இடங்களுக்கு கொண்டு சென்று விபசாரத்தில் ஈடுபத்தியுள்ளனர் ! பெரியமுதலாளிகள் ,அதிகாரிகள், அரசியல் வாதிகள் என்று இதில்சம்மந்தப்பட்டுள்ளனர் ! சுமார் 40 நாட்களுக்குப்பிறகு, 42 பேர் அந்தப்பெண்ணை வன்புணர்வுக்கு உட்படுத்திய பின் அவளை அனுப்பிவிட்டனர் !
அந்தபெரியமனிதர்களில் ஒருவர் தன காங்கிரஸ் தலைவர் பி.ஜே குரியன் .
இதற்கிடையில் சென்ற டிசம்பர் மாதம் டெல்லியில் மருத்துவ மாணவி ஒடும் பஸ்ஸில்கற்பழிக்கப்பட்ட சம்பவம் நடந்தது .இதனை எதிர்த்து நடந்த கிளர்ச்சியின் காரண மாக அரசு பெண்களுக்குஎதிரான குற்றங்களை தடுக்க ஒரு அவசர சாட்டம் கொண்டுவந்துள்ளது .இந்தச்சட்டம் மானிலங்கள் அவையில் விவாதிக்கப்பட இருக்கிறது.
மாநிலங்கள் அவையின் துணைத்தலைவராக இருப்பவர் பி.ஜே குரியன்.1996ம் ஆண்டு சூரியன்ல்லி பெண்ணால் குற்றம் சாட்டப்பட்ட அதே குரியன் .
இந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 42 பெரும் விடுதலை செய்யப்பட்டார்கள். இதனை எதிர்த்து உச்ச நீதி மனரத்தில்மெல்முறையேடு நடந்தது. உயர்னிதிமன்ற தீர்ப்பு தவறு என்று உச்ச நீதிமன்றம்கூறவிட்டது.
பெண்களுக்கு எதிரான வன்முறை பற்றிய சட்ட த்தை விவாதிக்கபி.ஜே குரியன் தலைமையில் கூடாது. அவரை பதவி விலகச் சொல்லவேண்டும் என்பது எதிர்க்கட்சிகள் கூறுகின்றன ..
அமைசர்கள் குறிப்பாக உலக உத்தமர் அந்தோணீ,வயலார் ரவி ஆகியொர் வாயை முடிக்கொண்டு மௌனம் சாதிக்கின்றனர
பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் சோனியா , மற்றும் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதியிருக்கிறார் !
0 comments:
Post a Comment