அவங்களை கெட்டவார்த்தை சொல்லி
திட்டணும் போல இருக்கு .........!!!
மும்பை தாஜ் ஹோட்டல் லவும்,ரயிலடியிலையும் தீவிர வாதிகள் தாக்கினாங்க ! இது நடந்தது 26-11-2008! கொள்ள பேரு செத்தாங்க !
இப்படி தாக்குதல் நடக்குது நு தெரிஞ்ச நிமிடமே அந்த இடத்துக்குஓடிபோனார் ஹேமந்த் கார்காரே என்ற அதிகாரி. ! அவர்தான் மும்பாய் நகர தீவிர வாத எதிர்ப்பு படையின் தலைவர் !
படைவீரரகளை அனுப்பிட்டு பினால நிக்கற வம்சமில்ல கார்காரே! நெஞ்ச நிமித்தி முன்னால போறவரு ! அந்த மோதலில் அவர்வீர மரணம் அடைந்தார் !
அவர் பிள்ளைகுட்டிங்க என்ன பாடுபடும் ! பாவம்! அவர் அவர்கள் பாதுகாப்புக்காக 25 லட்சம் ரூ ஆயுள் காப்பிட்டு கழகத்தில் பாலிஸி எடுத்திருந்தார் ! மும்பை தாதர் கிளைல உள்ள அதிகாரிகள் அவர் இறந்த ஐந்தாவது நாள் அவர்க்கு சேர வேண்டிய பணத்தை அவர்வீட்டிற்கு கொண்டுபோய் கொடுத்து தங்கள் இரங்கலையும் சொல்லி விட்டு வந்தாங்க!
2009 ம் ஆண்டு மைய அரசு அவருக்கு அசோகா சக்ர விருது கொடுத்தது !
பா.ஜ.க.,காங்கிரஸ் அம்புட்டு பயகளுமா சேர்ந்து காப்பிட்டு துறையை வளர்க்க தனியாரை கொண்டுவந்தாங்க இல்லையா!
பாவம் ! கார்காரே தனியார் கம்பெனி ஒன்றின் மூலமும் பாலிஸி எடுத்திருக்கிறார்!
அந்த கம்பெனி காரன் சொல்லிட்டான் ! " தீவிர வாதிகள்சுட்டுகிட்டுஇருக்கான்! நீ புத்தி கேட்டு அங்க போனா குண்டு பாயத்தான செய்யும் ! என்ன --துக்கு அங்க போன! அதுக்கு நாங்காசு எதுக்கு கொடுக்கணும்" நு சொல்லி இன்னக்கி வரை கொடுக்கல !!
எனக்கு கெட்டவார்த்தை சொல்லி திட்டணும்போல இருக்கு !!
யாரை திட்ட???
5 comments:
emotion ஆகாமல் இதைப் பார்க்க வேண்டும். பாலிசி கொடுத்தவர்கள் தங்கள் வேலையைச் செய்வதாகவே தோன்றுகிறது.
occupation hazard என்ற disclaimerகளுடன் பாலிசி எடுத்திருந்தால், பாலிசி கொடுத்திருந்தால், நிச்சயம் பணம் கொடுத்தே ஆகவேண்டும்.
in any case, இந்தக் குறிப்பிட்ட caseல் நிச்சயம் கார்கரே குடும்பம் வழக்கு போட்டு வெற்றி பெறலாம் என்றே தோன்றுகிறது. அவருடைய தொழில் risk தெரிந்தே பாலிசி கொடுத்ததால் நிச்சயம் பாலிசி பணத்தைத் தந்தாக வேண்டும் (சின்ன எழுத்தில் disclaimers போட்டிருந்தால் ஒழிய).
இதற்கெல்லாம் அரசாங்கம் எதுவும் செய்யாதது ஆச்சரியமாக இருக்கிறது.
அப்பாதுரை அவர்களே! வாருங்கள்! நமது கிரமங்களில் நிராதரவான குடும்பங்கள் உஞ்சவிருத்தி ஒவ்வாதானம்,எடுத்து பிழப்பதை பார்த்திருக்கலம்! அந்தக்காலத்தில் burialsociety என்று இந்தியவில் இருந்தது! bread winner இறந்துவிட்டால் அந்த குடும்பத்தை காப்பாற்றும் பொறுப்பை அந்த சமூகமே ஏற்றுக்கோள்ளும்! கிராமங்களில் வாரச்சாப்பாடு சாப்பிட்டு படித்துமுன்னேறியவர்கள் உண்டு! இவை எல்லாம் நவீன ஆயுள்காப்பீடின்புராதன வடிவங்கள்! insurance is a contract of indemnity! No body shoud get somthing more than he lost ,no bOdy can gain from that contract! Itis the principle on which the whole modern insurance is fuctioning! insurance is not a wager!அப்பாதுரை அவர்களே! மகாரஷ்ற்றாவில்பூகம்பம்வந்தபோது ,பொதுத்துறை நிறுவனமான எல்.ஐ.சி அந்தபகுதிமக்களுக்கு பிபிரீமிய சலுகைஅளீத்தது!சுனமியின்போது சலுகைஅளித்தது! சமூகநோக்கோடு செய்ல்பட முடிந்தது!
1956க் கு முன்பு இசூரன்ஸ் கம்பெனிகள் தனியார் வசம் இருந்தன! ஒவ்வொரு முதலாளியும் ஒரு இன்சூரன்ஸ் கம்பெனி,ஒரு வங்கி வைத்திருந்தான்! புகுந்து விளையாடினார்கள்.செண்ற்றல் பாங்கு,நியூ இன்டியா டாடாவுக்கு! யுகோ வங்கி, பிர்லாவுக்கு! செட்டியாருக்கு இந்தியன்வங்கி, உனைடெட் இந்தியா! பனம்பொட்டவனும்,இன்சூரன்ஸ் எடுத்தவனும் கட்டை விரலோடு ! அதனால் தான் 1956ல் இன்சுரன்ஸ் துறை நாட்டுடமை ஆக்கப் பட்டது!
இப்போது மீண்டும் தனியாரிடம் கோடுத்துள்ளார்கள்! சமூக நோக்கம் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டதே என்ற ஆதங்கம் தான்---வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்.
its a wrong information kashyapan. the private insurance has settled the claim even before the claim is raised - it proactively settled the claim of Hemant Karkare immediately after the news of his unfortunate death in a terrorist attack.
Better luck next time!
its a wrong information kashyapan. the private insurance has settled the claim even before the claim is raised - it proactively settled the claim of Hemant Karkare immediately after the news of his unfortunate death in a terrorist attack.
Better luck next time!
Dear Indy! mY information is based on the article written by Sri Shunglu in HinDu dated 25-2-13 !---kashyapan.
Post a Comment