Tuesday, July 23, 2013

எங்கள்  ஆழகேசன் சார் .....!!! 

1942ம் ஆண்டு நான் முதல் வகுப்பில் சேர்ந்தேன்! அது நகராட்சி பள்ளி! அப்பொது பிரிட்டிஷ் ஆட்சி ! 
காலை எட்டரை மணிக்கு பள்ளி சென்று விடுவோம்! இறை வணக்கம் உண்டு! "ஆண்டவரே   ! ஆறாயிரம் மைல்களுக்கு அப்பால் இருக்கும் அரசரை காப்பாற்றும் ! (god save our king ) என்று பாடிவிட்டுத்தான் "பொன்னார் மேனியனே " என்று படுவோம்!
பெரியகிளாசு அண்ணன் மார்கள் "அறம்  செய விரும்பு " என்று ஆரம்பிக்க நாங்கள் திரும்பிச் சொல்லுவோம்! கூட்டல்,கழித்தல்,பெருக்கல்,குழிப்பெருக்கம்,என்று வாய்ப்பாட்டு சொல்லுவோம்! அதன் பின் தான் வகுப்புக்குள் செல்லுவோம்!

அப்போதெல்லாம் ஆரம்பப்பள்ளி ,நடுநிலைப்பள்ளி ,உயர்நிலை பள்ளி என்றுதான் உண்டு !

நான் தி.லி டவுணில் உள்ள மந்திர மூர்த்தி உயர்நிலைப்பள்ளியில் ஆறாப்புசெர்ந்தேன்! 

வாரத்திற்கு மூன்று நாள்,ஓவியம்,கைவினை,நல்லொழுக்கம் என்று வகுப்புகளுண்டு ! மூன்று வகுப்புகளையும் அழகேசன் சார் தான் எடுப்பார்! 
கோடு வரைய ,வட்டம் போட , அழுத்தமான கோடு, மெலிதான கோடு, கோட்டின் நிழல் என்று சொல்லிக் கொடுப்பார்!

கைவினை வகுப்பில்,உளி,சுத்தியல்,,இழைப்புளி,திருப்புளி ,திருகாணி ஆகியவற்றைக் கொண்டுவந்து அதன எப்படி பயன்படுத்த வேண்டும் என்று கற்றுக் கொடுப்பார்!

நல்லோழுக்கக்கிளாசில் நல்ல நல்லகதைகளை சொல்லுவார்! ஏழாம் வகுப்பில் எங்களுக்கு "ஏழை  படும்பாடு " என்றகதையச் சொல்லுவார்! சோல்லும் போது அவர் குரல் பிசிறடிக்கும்! "uncle toms cabin " கதையச் சொல்லும் பொது எங்களுக்கும்   அழுகைவரும் !

எட்டாப்பு படிக்கும் போது சிறு புத்தகங்களை படிக்கச் சொல்லுவார்! 20-30 பக்கமுள்ள நீல அட்டைபோட்ட புத்தகங்கள்! அவை ஐரோப்பிய நாட்டு தலவர்கள் வாழ்க்கை வரலாறாக இருக்கும்! ரூசோ ,சமுதாய ஒப்பந்தம்,வால்டயர்,மாஜினி, கரிபால்டி ,ஆலிவர் கிராம்வல்,என்று இருக்கும்! 

"ஒரு முறை என்னிடம் வீட்டிற்கு கோண்டு போகாதே ! இங்கேயே படி" என்று ஒரு புத்தகத்தைக் கொடுத்தார்! நீல அட்டையில் தாடி வைத்த ஒருபடம் போட்டிருந்தது! "கார்ல் மார்க்ஸ் " என்று எழுதியிருந்தது! அவர் ஜெர்மன் நாட்டில் இருந்தார் ! கணிதத்தில் கெட்டிக்காரர் ! ஒரு பணக்காரப் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்! அவரை அரசுக்கு  பிடிக்கவில்லை என்பதால் நாட்டைவிட்டு லண்டனுக்குசென்றார் ! அங்கு வறுமையில் கஷ்டப்பட்டார்! தன கஷ்டத்தை விட உலகமக்களின் கஷ்டத்தை போக்க பாடுபட்டார் " என்று அந்த புத்தகம் சொல்லியது!

நான் வளர்ந்து பெரியவனாகியதும் மார்க்ஸ் பற்றியும் மார்க்சீயம் பற்றியும் புரிந்து கொண்டேன்!

ஒல்லியான கருத்தகுட்டையான  உருவம் கொண்டவர் அழகேசன் சார்! தங்க நிற ப்ரேமும் ,வெள்ளை காதர் ஜிப்பாவும் வெள்ளை வேட்டியும் கொண்ட அவரை -நான் இனி பார்க்கமுடியாது! எண்பதை நெருங்கிக் கொண்டிருக்கிறேன்!

ஆனாலும்  என்னால்   அழகேசன் சாரையும்   மறக்கமுடியாது !

மார்க்சையும் மறக்க முடியாது !!

8 comments:

”தளிர் சுரேஷ்” said...

சில ஆசிரியர்கள் நம் மனதில் நீங்கா இடம் பிடித்து விடுகிறார்கள்! உங்கள் அழகேசன் சாரும் அப்படித்தான்! நல்ல பகிர்வு! நன்றி!

கரந்தை ஜெயக்குமார் said...

ஒவ்வொருவரையும் உருவாக்குவதில் பெரும் பங்கு ஆசிரியர்க்கே. நன்றி

'பரிவை' சே.குமார் said...

நீங்கா இடம் பிடித்த ஆசிரியரைப் பற்றிய நினைவுப் பகிர்வு பல நினைவுகளை மீட்டிச் சென்றது ஐயா..

பாரதசாரி said...

எட்டாம் வகுப்பில் மார்க்கை பற்றி போதிக்காமல் மார்க்ஸை அறிமுகப் படுத்திய அழகேசன் ஐயாவை உங்கள் மூலம் பார்க்கிறோம் இன்று.எந்த கலைஞன், சிந்தனையாளன் , இப்படி எந்த துறையிலும் சிறந்து விளங்குபவர்களுக்கு குடும்பத்தார் மூலம் வலுகட்டாயமாக திணிக்கப்பட்டு வரும் ஈடுபாட்டை விட , நல்லாசிரியர்கள் மூலம் வருவது தான் அதிகம்.சொல்லப் போனால் ஆசான்க‌ளின் பணியே அது மட்டும் தான். பாட நூலைப் படித்துக் காட்டுபவர் தேவையே அல்ல.

எனக்கு எனது பள்ளி ஆசிரியர்கள் பீ வெங்க‌டேசன் (தற்போது ‍ புதுக்கோட்டை ராஜ கல்லூரியில் முதல்வர்), மற்றும் டீ.ஸ்ரீனிவாசன் (கேந்திரிய வித்யாலயாவில் பணிப்புரிவதாக பல வருடங்களுக்கு முன் கேள்விப்பட்டேன்) அவர்களையும் மறக்கவே முடியாது.

kashyapan said...

வாருங்கள் பாரத்சாரியவர்களே! உங்கள் பதிவுகள் சிரிப்பு கொத்து! அதெசமயம் சில கொஞ்சம் ரசனைக் குறைவும் கூட !--- காஸ்யபன்!

Unknown said...

Dear mooththa thozhar, vanakkam. Romba naalaikhu piraku unghalai ippadi santhikhirathu romba santhosham. Ungha idukaikhalai padikkum pothu un gha kural enn kaathilae viluthu. En kannethirae neengha uthattai nallaavae sulichikittu pesarathu appadiyae theriyuthu. Manthira moorthy school naangha pala ilakkiya koottanghal potta idam. Ayya thi.ka.si padichcha schoolu.Avaroda documentary kooda angae vaischu shoot panniyirunthanga.Innaikhu than aarambichirukaen. Ella pathivukalaiyum paarkiraen,, elutharaen. nandtri. sankaranarayanan vallioor