Saturday, April 30, 2016





"தீபாவளியின் போது ...."









 அப்போதெல்லாம் தீபாவளியின் பொது "தீக்கதிர் " உழியர்களுக்கு போனஸ் போடுவார்கள். அன்று விடுமுறையும் விடுவார்கள். கட்டிடமே வெறிச்சோடி இருக்கும். தலைமை இடம் என்பதால்செயற்குழுமட்டத்தில் ஆசிரியர் தோழர் கே.முத்தையா அவர்கள் மட்டும்  இருப்பார். அவரும் சில சமயம்  சென்னை சென்று விட்டால் வேறு யாராவது எம்.ஆர் வெங்கடராமன் ,ஏ .பாலசுப்பிரமணியம் என்று இருப்பார்கள்.

"கம்யூன்" தோழர்  திருப்பரம்குண்றம்   மணியும் சென்றுவிடுவர் என்பதால் இருக்கும் தலைவர்களுக்கு உணவு சிக்கல்தான் .

எங்கள் எல்.ஐ. சி தீக்கதிர் ஆபிசிலிருந்து நடந்து போகும் தூரம் தான்.ஆகவெஅவர்களை காலை ,மதியம் உணவிற்கு அழைத்து வருவேன்.    . எல் ஐ சி காலனியில்வசிக்கும் மூத்ததொழர்கள் கிருஷ்ணன்,நாராயண்சிங், தண்டபாணி, சீனு ,  மாணிக்கம் ,கபூர் என்று எல்லோரும் கூடுவோம். வந்திருக்கும் தலைவர் கட்சி,தத்தவுவார்த்த பிரச்சின பற்றி பேசக் கூடாது. அவர் கட்சிக்கு வந்தது,அவருடைய சொந்த அனுபவம் இவற்றை பற்றி கேட்டு தெரிந்து கொள்வோம். எ.பி ,கே.எம், ஐ.மா பா .என்று  வந்துள்ளனர். எம் ஆர்.வெங்கடராமன்  வந்திருந்தார்.

அவர் காலை 9 மணிக்கு சைக்கிளில் வந்தார். எங்கள் வீட்டில் ஹாலில் ஊஞ்சல் உண்டு. அதில் அவர் நடுநாயகமாக அமர  நாங்கள் சுற்றி உட்கார்ந்தோம். அவர் புதியதாக வேட்டியும்ஜிப்பாவும்  அணிந்திருந்தார்.

"தோழர் ! தீபாவளி வந்துட்டதா உங்களுக்கும் ?"

"புது துணிய பாத்து கேக்கற !இல்லையா ! அது ஒரு பெரியகதை என்றார்"

"ரொம்ப கொஞ்ச பேருக்கு தான் தெரியும் !என் மைத்துனர்விடு மதுரை ! என்.சுப்பிரமணியன் என்ற வக்கீல் தான் என் மைத்துனர். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு செட்டு டிரஸ் கொடுத்து விடுவார்."

ஆழ்ந்த மௌனம் . கம்பிரமான ஆறடி ஆகிருதி . பறந்த நெற்றி  . அகன்ற வாய் .கூர்மையான முக்கு .  ரோமானிய வீரன் போன்ற தோற்றம் . 

ஊஞசலின் கம்பியை பிடித்துக் கொண்டு ஒரு பெருமூச்சு விட்டார்.  

கீழ    வெளிவீதியில் உள்ள செயின்ட்  மேரி பள்ளி  அருகே மகால் போகும் சாலை  உள்ளது .அதன் முதல் கட்டிடம்   இன்சுரன்ஸ் கட்டிடம். அதற்கு அடுத்தது வக்கீல்  சுப்பிரமணியன் வீடு. எம்.ஆர்.வி அவ்ர்களின் துணைவியார் தன இறுதி காலத்தில்   தங்கி  இருந்ததும் அங்குதான்  

"அப்போது நாங்கள் தலைமறைவாக  இருந்தோம். நானும் சுந்தரய்யாவும வேலூர் அருகே உள்ளமலைப்பகுதியில் இருந்தோம். அவ்வப்பொது  கீழெ வந்து கட்சி பணி  செய்வோம். என்மனைவி  சகோதரன் வீட்டில்தங்கி இருந்தார்.  உடம்பு சரியில்லை . அதனால் அங்கிருந்தார்.ஒரு  நாள் கட்சி  குரியர் மூலம் தகவல் வந்தது .   அவருக்கு என்னை பார்க்க வேண்டும் என்று   தோன்றுவதாகவும் உடனே வர வெண்டும் என்பது  செய்தி . உடனேயே கிளம்பி செங்கல்பட்டு வந்தேன். அங்கிருந்து விழுப்புரம் ,மாயவரம், தஞ்சை என்று போலிசுக்கு போக்கு காட்டி மதுரை வந்தேன். மதுரையில் ரயிலடிக்கு எதிரே உள்ள மங்கம்மா சத்திரத்தில் தங்கினேன். கூரியர் மூலம் என் மைத்துனருக்கு செய்தி அனுப்பினேன்."

கேட்டுக் கொண்டிருந்த நாங்கள் இதயத்தை  பிடித்துக் கொண்டு காத்திருந்தோம் .தொடர்ந்தார்.

"என் துணைவியாருக்கு உடல் நலம் சரி இல்லை என்பதை போலிஸ் மோப்பம் பிடித்து  விட்டது . மைத்துனர் தகவல் அனுப்பவில்லை. உடல் நலம் சீரியசாக ஆரம்பித்ததால் டாகடர் அழை க்கப்பட்டார். நான் மதுரை வந்து விட்டேன் என்பதை அவரிடம் சொல்லி இருக்கிறார்கள் . போலிஸ் கெடு பிடி குறைந்ததும் வருவேன் என்று சொல்லி இருக்கிறார்கள். " 

நாங்கள்  மூச்சு விடாமல் அமர்ந்திருந்தோம்..

"நான் அவரைபார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன் ஆனால் அவர் போலீசில் சிக்கி சித்திரவதை படவேண்டாம். அவர் வரவேண்டாம் என்று சொல்லி அனுப்புங்கள். அவர் இந்த வீட்டுப்பக்கம் வரவேண்டாம் என்பது தான்  இப்போது என் ஆசை "

 " எனக்கு தகவல் சொல்லப்பட்டது. நான் ரயிலேறி வெல்லூர் வந்தேன்.    அங்கு அவர் மறைந்த செய்தி எனக்காக காத்திருந்தது."

என்  தொண்ட்டைகுழிக்குள்  இதயம் வந்து விட்டது போல் உணர்ந்தேன் . என்னிட மிருந்து இரு விம்மல் தான் வெளிவந்தது.

ஊஞ்சலில்  இருந்து அவர் இறங்கினார்.

என் முதுகை தட் டி தடவினார் .

"Comrade ! it often happen in the life of a communist "

அந்த பாரத புத்திரரின் கம்பீரமான முகத்தை தரிசித்தேன் .!!!

 






 

2 comments:

சிவகுமாரன் said...

வருத்தமளிக்கிறது அய்யா. இவ்வளவு பேரின் தன்னலமற்ற தியாகங்களால் வளர்ந்த கட்சி இன்று யாரோ உதவாக்கரைகளை குடிகாரர்களை முதல்வராக்கப் பாடுபட்டு வருகிறது

சிவகுமாரன் said...

வருத்தமளிக்கிறது அய்யா. இவ்வளவு பேரின் தன்னலமற்ற தியாகங்களால் வளர்ந்த கட்சி இன்று யாரோ உதவாக்கரைகளை குடிகாரர்களை முதல்வராக்கப் பாடுபட்டு வருகிறது