Tuesday, May 03, 2016





காவிரி ஒப்பந்தமும் ,

கருணா  நிதியும் .....!!!



1892ம் ஆண்டு பிரிடிஷார் காவிரி நதி நீரை  பங்கீடு   செய்வது பற்றி ஒரு ஒப்பந்தம் போட்டார்கள். 

அதன் பிறகு  மைசூர் உடையார்கள் ஆட்சி பொறுப்பில்  வந்தது. சமஸ்தான அதிகாரிகளும்,பொறியாளர்களும் விவசாயத்தை மேம்படுத்த காவிரி நீர பயன்படுத்த விரும்பினார்கள் . காவிரியின் குறுக்கே அணைகட்ட திட்டமிட்டார்கள். இது பற்றி  பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு பேசினார்கள். அப்போது பிரிட்டிஷாருக்க      சாதகமான ஒரு ஒப்பந்தம் தயாரானது .மைசூர் அதிகாரிகளும் பொறியாளர்களும் அதனை எதிர்த்தனர். பிரிட்டிஷ் சக்கரவர்த்திக்கு முன்னால் உடையார் என்ன செய்ய முடியும் .

1924 ம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது .

படு பாதகமான ஒப்பந்தமானாலும்  அதிகாரிகள் அதன் ஒரு  ஷரத்தை வெகுவாக விரும்பினார்கள். ஒப்பந்தம் 50 ஆண்டுகள் இருக்கும். அதன் பிறகு இருதரப்பும் விரும்பினால் நீட்டித்துக் கொள்ளலாம் . நீட்டிக்க வில்லை என்றால் புதிதாக பங்கிட்டு பற்றி பேச்சுவார்த்தை   நடத்தி புதிய ஒப்பந்தம் போட்டுக் கொள்ளலாம் . 

1969ம் ஆண்டு எதிர்கட்சிகள் தமிழக சட்டமன்றத்தில் எழுப்பின.  உடனடியாக பேசி ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று கோரின.

முதலமைச்சர் நாற்காலியில் முதன் முதலாக அமர்ந்த கருணாநிதி இதனை கண்டுகொள்ளவில்லை . 

இந்திரா அம்மையாரின் அரசியல் நெருக்கடியை தனக்கு சாதகமாக பயன்படுத்த விரும்பினார். 1971ம் ஆண்டு        சட்ட மன்றத்தை  கலைத்து தேர்தலுக்கு சென்றார். இந்திரா அம்மையாரோடு . உடன்பாடு செய்து கொண்டார் . 173   இடங்களை பிடித்து ஆட்சி அமைத்தார்.

 கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ்காரர்கள் ஒப்பந்தம் நீட்டிக்கப்படாமல் இருப்பதையே  விரும்பினர். காய்களை நகர்த்தினர். 

கருணாநிதி காவிரி   பற்றி பேசும் போதெல்லாம் காங்கிரஸ் தலைமை போக்கு காட்டிக்கொண்டே இருந்தது.

1974 ம் ஆண்டு ஒப்பந்தம் காலாவதியானது.

   . காவிரி நதி நீர்  பற்றி எந்த ஒப்பந்தமும் இல்லாத நிலையில் புதிய ஒப்பந்தத்திற்கான பேச்சு வார்த்தை நடக்க கர்நாடகா தன்னுடைய பங்கை வற்புறுத்த ஆரம்பித்தது  .

1969-70 ஆண்டுகளில் எதிர்கட்சிகள் சொன்னபடி ஒப்பந்தம்பற்றி விவாதிக்காமல் காங்கிரசும் ,கருணாநிதியும் காலம்தாழ்த்தியதால் ஏற்பட்ட வினை இன்று தமிழகத்தை வாட்டுகிறது.     




2 comments:

சிவகுமாரன் said...

அடப் பாவிகளா😱

சிவகுமாரன் said...

அடப் பாவிகளா😱