Monday, October 09, 2017






பா . ஜ . க  -

குறுக்கு ஒடிந்த 

விஷ பாம்பு ...!!!




கோடை  விடுமுறையில் நாங்கள் எங்கள் கிராமத்திற்கு செல்வோம். கிராமத்திலிருந்து ஒன்று அல்லது ஒன்றரை மைல்  துரத்தில் தாமிரவருணி ஆறு ஓடிக்கொண்டிருக்கும் .  சிறுவர்களாகிய எங்களை ஆற்றில் சென்று குளித்துவர சொல்வார்கள். 

வெள்ளி,செவ்வாய், அமாவாசை,மாசப்பிறப்பு என்றால் விடிவதற்கு முன்பே எழுப்பி ஆற்றுக்கு போக எழுப்பி விடுவார்கள்.நாங்களும் கப்பி சாலையில் புழுதி பறக்க  விளையாடிக்கொண்டே செல்வோம் . பாரவண்டிகள் சென்று நொண்டும்  நொடியுமாக சாலை இருக்கும்.

இருபுறமும் வயல் வெளி. சாலையின் பக்கமாக இரண்டு புறமும் தென்னைமரங்களிருக்கும்.அருப்புமுடிந்த வயல்கள் வெரிச்சோடி  இருக்கும் .

விடிவதற்கு முன்பே கிளம்பிவிட்டால்  தாத்தா எச்சரிப்பார் ! " ஏல ! பாத்து   போங்கல ! ரோட்ல  குறுக்கு   ஒடிஞ்ச  பாம்பு  கிடக்கும் !  சாக்கிரதை  !" என்பார்.

    காய்ந்த வயக்காட்டில் இறை கிடைக்காதபாம்புகள்ரோட்டைத்தாண்டி வந்து தவளை,எலியை  விழுங்கும் . வேகமாக ஊர்ந்து  செல்லமுடியாமல் சாலையின்  குறுக்கே கிடக்கும் . பாரவண்டிகளின் சக்கரத்தில் அடிபட்டு குறுக்கு ஒடிந்து     ரோட்டில் ஒட்டிக்கொண்டு இருக்கும் ,இதில் விஷ பாம்புகள் என்றால் அதிர்வுகளை உணர்ந்து சீரிக்கொண்டிருக்கும் .அருகில் சென்றால் கொத்திவிடும்.

எங்கள் செட்டில் "சுப்பா "  பெரியவன் . "ஏல !சுப்பா  ! கைல  ஒரு குச்சி வச்சுக்க ! பாம்பு சீ ரித்துநா  குச்சியால   தூக்கி  " வாருகால்ல "  போட்டுடூ " என்பார்  .


குறுக்கொடிந்த விஷ பாமபை வாருகாலில்  தூக்கி எறியும் நேரம் வந்துவிட்டது .!!!


  

1 comments:

koilpillai said...

கதையோடு கருத்துரைத்தவிதம் அருமை.

கோ