Thursday, October 26, 2017






காஸ்யபனின் சிறுகதையும் ,


பேராசிரியர் சுப. வீரபாண்டியன் அவர்களும் ...!!!




சென்னை "கலைஞர்   நியூஸ் " தொலைக்காட்ச்சியில் பணியாற்றும் உமா அவர்கள்பத்து நாட்களுக்குமுன்பு நாகபுரி வந்திருந்தார்கள். அண்ணல் அம்பெத்கார் தீட்சை  பெற்ற இடத்தை பார்த்து அதுபற்றிய செய்திகளை சேகரிக்க வந்திடிருந்தார்கள். பது டில்லியில் இருக்கும் "வட க்கு வாசல் " பத்திரிக்கை ஆசிரியர் பென்னேஸ்வரன் நாகபுரியில்வசிக்கும் சத்தியமூர்த்தி (என் மகன்) பெயரை குறிப்பிட்டு உதவி ஏதாவது தேவைப்பட்டால் அணுகும்படி கூறி உள்ளார்.

உமா அவர்கள் கைபேசிமூலம் சத்யமூர்த்தியை  நாகபுரி வந்ததும் தொடர்பு கொண்டார்.அருகில் இருந்த என்னிடமும் பேசினார் . அம்பேத்கார் பற்றி "பேராசிரியர் சுப.வீ "ஒரு நூல் எழுதவிருப்பதாகவும் அதற்கு தான் கூ ட இருந்து ஒத்துழைப்பதாகவும் கூறினார். ஒய்வு நேரம் இருந்தால் வீட்டிற்கு வரமுடியுமா என்று அழைத்தேன் .அவரும் அவருடைய நண்பர் தேவேந்திரன் அவர்களும் வந்தனர்.

மிகவும் உற்சாகமான உமா அவர்களோடு பேசிக்கொண்டிருந்தேன். பேராசிரியர் பற்றி மிகவும் பெருமையாக பேசினார் . "திராவிட இயக்கத்தின் அறிவார்ந்த மனிதர் . மிகசிறந்த படிப்பாளி. தேடல்மிகுந்த சிந்தனையாளர் .அவர் திறமைக்கும், நேர்மைக்கும் இன்னும் உயரத்திற்கு போக வேண்டியவர்  , " என்று என் பங்குக்கு நான் கூறினேன்.

நான் எழுதிய   சில நூல்களை உமா அவர்களிடம் கொடுத்தேன் . வெகுநேரம் பேசிக்கொண்டிருந்து விட்டு புறப்பட்டார்.மறுநாள் மதியம் கைபேசி மூலம் தொடர்பு கொண்டார் . என் "கருகமணி " தொகுப்பை பிடித்ததாகவும் அதில் உள்ள "அவளும் அந்த அவளும்  " கதையைப்பற்றி மிகவும் உயர்வாக புகழ்ந்து பேசினார் .இந்த புத்தகங்களை பேராசிரியர் "சுப.வீ " அவர்களிடம் கொடுக்க விருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சென்ற வாரம் யூ டியூபில்  தமிழ் அலைவரிசைகளில் வரும் சர்ச்சை  களை  பார்த்துக்கொண்டிருந்தேன். "சுப.வீ " அவர்களின் நிகழ்ச்சி . கை பேசி   அழைத்தது . நம்பமுடியவில்லை. "சுப.வீ " அவர்களே அழைத்தார்கள். "கருகமணி " தொகுப்பை படிதேன் . ஐந்து ஆறுகதைகளை படித்தேன். சிறப்பாக உள்ளது குறிப்பாக "அவளும் அந்த அவளும் " கதை மிகவும் நன்றாக வந்துள்ளது . "கலைஞர்   டிவி யில் அதுபற்றி பேசலாம் என்றிருக்கிறேன். என்றார் . 

அறிவார்ந்த அந்த மனிதரின் பாராட்டை விட அவரின் பெருந்தன்மை என்னை வியந்து போற்றவைத்தது..


இன்று காலை எனக்கு மின் செய்தி  வந்தது .


"காலம் தாழ்ந்து  விடை அனுப்புவதற்கு மன்னிக்கவும்.நவமபர் 3 வெள்ளிக்கிழமை  காலை  8.30 மணிக்கு,கலைஞர் தொலைக்காட்ச்சியில்  உங்கள் சிறுகதை குறித்து  பேசியுள்ளேன்.  பார்த்துவிட்டு உங்கள் கருத்தை கூறிட வேண்டுகிறேன் "  


பேராசிரியர் சுப.வீ  அனுப்பிய செய்தி அது .


தோழர்களுக்கும், பதிவர்களுக்கும் ஒரு வேண்டு கோள் ! நீங்களும் பார்த்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்களேன் .


1 comments:

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நல்ல செய்தி. பகிர்வுக்கு நன்றி.