Monday, November 20, 2017





"அறம் " என்ற 

திரைப்படத்தை ,


முன்வைத்து .... 2





1988  ஆண்டு . தூர்தர்ஷன் தவிர தனியார் தொலைக்காட்ச்சி அலைவரிசை அதிகம் இல்லை. மிகவும் ஆரோக்கியமான தொடர்கள் வந்து கொண்டிருந்தன .அப்படி வந்த தொடர் தான் "தமஸ் " (இருட்டு ) இந்தியில் வந்தது.

பால்ராஜ்  சஹா னியின் சகோதரர் பீஷ்ம சஹானி .பஞ்சாப் பல்கலையில் ஆங்கிலப்பேராசிரியராக இருந்தார்> அவர் எழுதிய நாவல்தான் "தமஸ் ". இந்த நாவலுக்காக சாகித்ய  அகாடமி  விருது பெற்றார் .

இந்திய வரலாற்றின் இருண்ட  பகுதியான பிரிவினையை சித்தரிக்கும் நாவல் .மனிதத்தை இழந்து இந்து,முஸ்லீம்,சீக்கியன் கொன்று குவித்துக் கொண்டிருந்த காலத்தை விவரிக்கும் நாவல்.

இந்த வேளையில் கம்யூனிஸ்டுகள்,காங்கிரஸ் காரர்கள் முஸ்லீம் லீக் ,இந்து மகாசபை ஆகிய அரசியல் இயக்கங்கள் ஆற்றிய பணியை சொல்லும்நாவல்.

" நாத்து செருப்பு தைக்கும் தொழிலாளி.  லாகூர் அருகில் ஒருகிராமத்தில் வசிக்கிறான் . கிராமத்து பெரியவர் அவனிடம் கால்நடை மருத்துவர் ஒருவருக்காக ஒரு பன்றியை வெட்டி  தரும்படி கேட்கிறார் .பன்றியை வெட்டி பழக்கமில்லாத அவன் .தயக்கத்தோடு  வெட்டித்தருகிறான் ."

காங்கிரஸ் காரர்கள் உள்ளூர் பிரமுகர்களோடு பேச வந்திருக்கிறார்கள். திடீரென்று முஸ்லிம்கள் கூட்டமாக ஆவேசத்தோடு வருகிறார்கள். அவர்கள் வசிக்கும் பகுதியிலுள்ள மசூதியின் முன் பன்றி யின் சடலம் கிடப்பதாக சொல்லி கலகம். 

நாதுவுக்கு பயம்.ஒடிசென்று அந்த பன்றியை பார்க்கிறான் .கால்நடை மருத்துவருக்காக அவன் வெட்டிய பன்றிதான் அது .வீட்டிற்கு வந்து கர்ப்பமாக இருக்கும் தன மனைவியிடம் சொல்லி நாம் இந்தக்கிராமத்தை விட்டு இந்துக்களத்திகமாக இருக்கும் கிராமத்திற்கு செல்ல லாம் என்று புறப்படுகிறான்"


தூதர்ஷனில் ஒவ்வொரு சனிக்கிழமை 10 மணிக்கு வெளியான இந்த தொடர் மொத்தம்    ஆறு வாரங்கள் ஒளிபரப்பாயிற்று .இந்து,முஸ்லீம்,சீக்கியர்கள் பட்ட பாட்டினை நெஞ்ச்ம கரைய சொன்ன தொடர் இது. இதனை ஒளிபரப்பும் பொது பல  தடை களை  சந்திக்க நேர்ந்தது.

இந்தியாவின் தலை சிறந்த நடிகர்கள் நடித்தார்கள். ஓம் பூரி,அம்ரிஷ் பூரி , ஸாக்ஸேனா, சிக்ரி அம்மையார், பாதக் , என்று நடித்தார்கள்.

வனராஜ் பாட்டியா இசை அமைக்க, கோவிந்த் நிஹிலாணி இயக்கினார் .


2013 ஆண்டு மிகுந்த பிரயாசைக்கு பின் திரைப்படமாகவும் வந்தது .கிட்டத்தட்ட நாலரை மணி நேரம் ஓடும்  படமாகும் .

அரசியல் படத்தை விரும்புபவர்கள் கூகுளில் tamas என்று கிளிக் செய்தால் கிடைக்கும்.

கண்டிப்பாக பார்க்கவேண்டிய ஒன்று !!!




0 comments: