Wednesday, May 25, 2011

girls shine in H.S.C

அவள்குதித்துகொண்டுவந்தாள்."அக்கா! நான் பாஸ்".
"எவ்வளவுடீ?"
"1117"
"என்ன செய்யப்போற?"
"ம்..லண்டன் போப்போறென்'
"கொன்னுருவேன்"
"பின்ன ஏன் கேக்க"
'நம்ம ஒண்ணு நினைக்கோம்"
"ஆத்தா வேற நினைக்கு"
"என்ன நினைக்கு?"
"மில்லுக்கு போ.. ங்கா"
அக்கா என்று அழைக்கப்பட்ட பக்கத்து வீட்டு அக்கா அவள் அருகில் வந்தாள்.ஆதுரமாக அவள் கை களைப் பற்றிக் கொண்டாள்."நீ என்னடி செய்யப்பொற?"
அவள் அக்காவை கட்டிக் கொண்டாள்.அக்காவின் காதருகில் சொன்னாள்."ஆத்தா....முக்கியமக்கா...அவதான் எல்லாம்.."
அக்கா அவளை விட்டு விலகினாள்.அக்காவின் கண்களில் வழிந்த கண்ணீரை இவள் துடைத்தாள்

9 comments:

அழகிய நாட்கள் said...

திரு காஸ்யபன்!
69.4% பெற்று பட்டப்படிப்பு தாவரவியல் முடித்துவிட்டேன் ஒரு வழியாக. மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரியில் எம் எஸ் சி படிக்க இடம் கிடைத்தது. அதிகமில்லை 1980 இல் ஒரு 411 ரூபாய் கட்டச்சொல்லி கடிதம் வந்தது. அப்படி இப்படி என்று அனைத்து வழியிலும் தேடிப்புரட்ட முடிந்தது ரூ 250/- மட்டும்தான். எனது நினைவலைகளை இந்தப்பதிவு கொண்டு வந்து விட்டது

kashyapan said...

திலீப் நாரயணன் அவர்களே! 1952ம் ஆண்டு அம்பை தீர்த்த பதி பள்ளியில் 11 வகுப்பு.அப்போது தேர்வு எழுத 16ரூ கட்டமுடியாமல் தவித்தவன் நான்.டிசம்பர் மாதம் கட்டவேண்டும்.கட்டவில்லை.ஜனவரியில் கட்டவில்லை.மார்ச் 15ம் தெதி தேர்வு.பிப்ரவரியிலும் கட்டமுடியவில்லை. தோழா! விருதுபட்டி காமராஜர் தொழப்படவெண்டியவர்.---காஸ்யபன்

hariharan said...

இலவசக்கல்வியும் மதிய உணவுத்திட்டமும் இல்லையென்றால் தமிழகமும் இந்தியாவும் இன்னும் 40 சதவீத கல்வியறிவு கூட பெற்றிருக்காது. பிந்தங்கிய பிரிவினர் கல்லூரியை கன்வில் கூட காணமுடியாது.

மோகன்ஜி said...

ஆத்தா தான் எல்லாம்... மனம் தைத்த பதிவு..
நீங்கள் சொல்வது போல் காமராஜர் ஒரு
காருண்யமூர்த்தி..
இன்னமும் கூட கல்விப்பணியில் அரசாங்கம் நிறைய செய்ய வேண்டும்.

அப்பாதுரை said...

எவ்வளவு தூரம் வந்திருக்கிறோம்!

kashyapan said...

அப்பாதுரை அவர்களே! "miles to go "(john faster)---kashyapan

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.

சிவகுமாரன் said...

The woods are lovely, dark and deep,
But I have promises to keep,
And miles to go before I sleep,
And miles to go before I sleep.

இது நான் படித்த, Robert Frost எழுதிய Stopping by Woods on a Snowy Evening
என்னும் கவிதை. நீங்கள் குறிப்பிடும் john faster வேறு நபரா ?

kashyapan said...

சிவகுமரனவர்களே! நீங்கள் கவிஞர் .Robert froster என்பது தன் சரி.நெருவின்மெசை கண்ணாடிக்கு அடியில் இந்தக்கவிதைதான் வைக்கப்பட்டிருக்குமாம் .தவறைத் திருத்தியதற்கு நன்றி .---காஸ்யபன்