மஞ்ரு சுல்தன்புரி ......
1945ம் ஆண்டிலிருந்து2000 வரை இந்தி திரைப்படத்துறையை தன் கவிதை வரிகளால் அழகு படுத்தியவர்.அஸ்ரர் உல் ஹாஸன் கான் என்ற மஞ்ரு சுல்தான் புரி என்ற உருதுக்கவிஞர் ஆவார் .
1918ம் ஆண்டில் பிறந்த வர். உ.பி.யில் உள்ள சுல்தான் புரியில் பிறந்தவர் ஆங்கில
கல்வி படிக்க வசதியில்லாததால் அரபி மொழியும்,பாரசீகமும்கற்று புலமை பெற்றார் .
1936ம் ஆண்டு கான்பூரில் காங்கிரஸ் மாநாடு நடந்தது, அப்பொதுதான் இந்தியமுற்பொக்கு எழுத்தாளர் சங்கமும் உருவானது. (நேருவின் ஆதரவோடு.) .இ.எம்.எஸ்,முன்ஷி பிரேம்சந்த் ,மூல்க் ராஜ் ஆனந்த் ஆகியொர் கலந்து கொண்டனர். இளம் மஞ்ரு வும் சென்றிருந்தார். இடதுசாரிகளுக்கும் அவருக்குமானதொடர்பு ஆரம்பமானது. கவியரங்கங்களில் அவருடைய கவிதைகள் புகழ் பெற்றன . மும்பைக்கு அழைத்தபொது அங்கு கவி அரங்கத்தில் கலந்து கொண்டார். கர்தார் என்ற இடதுசாரி இயக்குனர் அவர் தயாரிக்கும் ஷாஜகான் படத்திற்கு பாட்டெழுதச்சொன்னார். இசைஅமைப்பு நவுஷாத். இது 1945ல் நடந்தது.
கவி அரங்கங்களில் திவிர இடதுசார் கருத்துக்களை பாடுவார் .கஜல் பாடினால் கூட அது அரசை எதிர்த்துப்பாடியதாகவே இருக்கும் .மற்ற இடது சாரி கலைஞர்களான பால்ராஜ்
சஹானி ஆகியொரோடு கைது செய்யப்பட்டார். மன்னிப்பு கெட்கச்சொன்னார்கள். மறுத்துவிட்டார். இரண்டு ஆண்டுகள் சிறை என்று தீர்ப்புவந்தது. குடும்பம் தத்தளித்தது .அவர் சிறையில் இருக்கும் போதுதான் அவருடைய முதல் மகள் பிறந்தாள் .ராஜ்கபுர் அவரை சந்தித்தார். 1000ரூ கொடுத்து ஒரு கவிதை கேட்டார்."இவர்கள் இந்த மண்ணையும் விற்றுவிடுவார்கள் ஒருநாள் " (ஏக் தின் பிகே ஜாயெகா மட்டி கி மோல் ) என்று எழுதிக் கொடுத்தார்.
கிட்டத்தட்ட 8000 பாடல்களை எழுதியுள்ள அவர் 2000ம் ஆண்டு மே மாதம்24ம் தேதி மாரடைப்பு எற்பட்டு காலமானார்.நவுஷாத்திலிருந்து ரஹமான்வரை அவர் பாடல் எழுதியுள்ளார். கே.எல் .சைகால் முதல் உதித்நாராயண் வரை அவருடையபாடல்களைப் பாடியுள்ளனர்.
2 comments:
அன்பு காஸ்யபன் அவர்களுக்கு
மஜ்ரு சுல்தான் புரி அவர்களின் பேரை ஆயிரம் தடவை கேட்டிருப்பேன் அடுத்த விட்டு வானொலிப் பெட்டியில், காஞ்சியில் படிக்கும் போது எங்கள் பாட்டி வீட்டுத் திண்ணையில் இருந்து...
இந்தி பாட்டு புரியும் அளவு பாண்டித்தியம் கிடையாது எனக்கு...ஆனால் தமிழில் இல்லாத அளவுக்கு அதிகமாக வயலின்கள் அதில் இழைக்கப்படுவது போல் எப்போதுமே தோன்றியதுண்டு...
எங்கள் அண்ணன்கள் உபயத்தில் ஒரு சில பாடல்களைக் கேட்டு மனப்பாடம் செய்த காலங்கள் ரிஷி கபூர் நடித்த பாபி, பின்னர் யாதோன் கி பாராத் போன்ற பாடல்களுக்காகவும் படங்கள் பிரபலம் பெற்ற நேரம்...
ஒரு கட்டத்தில், காவல் துறையில் பயிற்சி எடுக்க வெவ்வேறு மாவட்டங்களில் இருந்து காஞ்சிக்கு வந்து சேர்ந்த போலிஸ் பயிற்சி ஆட்கள் இரவு நேரங்களை எங்களுக்கு சொர்க்கமாக்கிய நேரம் மறக்க முடியாதது...1970 களின் நடுப்பகுதி நேரம் அது..
ஆனால் மஜ்ரு அவர்களின் பின்னணி என்னைச் சிலிர்க்க வைத்தது..கஜல்கள் பற்றி போதை கொள்ளும் அளவு வாசிக்கவும், கேட்கவும் வாய்த்த எனக்கு அதை வாங்கி உள்ளே சேமித்து வைத்துக் கொள்ளும் வரம் கிடைக்க வில்லை...
இசை என்பது மனிதர்களைச் சீர்மைப் படுத்தும் இடம் என்றும், புண்களைப் பண் படுத்தும் தலம் என்றும், வசீகர உலகில் கம்பீரச் செருக்கோடு உலவ வைக்கும் தளம் என்றுமாகப் பலவாறு புரிந்து வைத்திருக்கும் எனக்கு கவிஞர்கள் சுயமரியாதையும், அதிகார எதிர்ப்பும் மிக்கவர்களாகவும் அமைந்துவிடுவது இன்னோர் எல்லையையும் காட்டுகிறது.
மஜ்ரு அவர்களுக்கு எனது மானசீக வணக்கங்களும், அஞ்சலியும்...
சபாஷ் காஸ்யபன் உங்கள் எழுத்து வன்மைக்கு...
எஸ் வி வேணுகோபாலன்
தெரிந்த கவிஞர், தெரியாத விவரம். மிகவும் நன்றி சார். ராஜ்கபூர் ஹிட் பாடல் உருவான விதம் எத்தனை பொருத்தம்!
வேணு அவர்களின் பின்னூட்டம் அட்டகாசம்!
Post a Comment