Nokia என்றால் தெரியும்.....
Nokia என்றால் நம்மில் பலருக்குத் தெரியும்.E-kiaஎன்றால் தெரியுமா? E-kia என்பது அமெரிக்க ராணுவத்தின் குறியீட்டுச்சொல்.E- kia என்றல் enemy-killed in action. பின் -லேடன் கொல்லப்பட்டதும் வாஷிங்க்டனில் உள்ள ஒபமாவுக்கு " Gerinomo E-kia" என்று செய்தி வந்தது
பின்-லேடனின் மரணத்திற்காக நாம் துக்கம் அனுசரீக்க வேண்டாம் அமெரிக்காவுடனான ரணுவக். கூட்டு என்பது அதன் மரியாதையை குலைத்து,முதுகில் குத்திவிடக்கூடியது என்பதை உலகிற்கு வெட்டவெளிசமாக்கிய ஒன்றாகும் இதில் பாகிஸ்தனும் சரி, அமெரிக்காவும் சரி துரோகமிழைப்பதில் சளைக்கவில்லை.
இதற்கானவித்து இந்தியா பாகிஸ்தன் உருவான போதே போட்டாயிற்று. அன்றய இந்தியா அமெரிக்காவின் பூட்ஸ் கால்களை நக்க மறுத்துவிட்டது.பாகிஸ்தனை தன்னூடைய கூட்டளியாக அமெரிக்கா அறிவித்துக் கொண்டது.பனிப்போர் காலத்திலிருந்தே அமெரிக்க தன்னுடைய ரத்தவெறியை மறைத்துக் கொண்டதில்லை.தன்னுடைய ஈவு இரக்கமற்ற அடாவடிதனத்தின் மூலம் லட்சகணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்துள்ளது.
வியட்னாமில் அமெரிக்கனுக்கு என்ன வேலை? அங்கு அவன் கிழித்தது என்ன?ஈராக்கில் செய்த அட்டூழியம்...?இஸ்ரேல் முளம் பாலஸ்தீனத்தில் நடத்திய கொடுமைகள்...?பாவம்.... அப்பாவி அமெரிக்க மக்கள்...அவர்களுடைய மனநிலையையே சுயநலம் சார்ந்தாக மாற்றி விட்டார்கள் அவர்களுடைய ரத்தம் சிந்தவில்லை என்றால் அமெரிக்க மக்கள் மற் ற நாட்டவர்கள் கொன்ரு குவிக்கப்படுவதை பற்றி கவலைப்படமாட்டார்கள் என்பது. வரலாறு. . வில்லியம் காலி என்பவன் " மைலே"என்ற வியட்நம் கிரமத்து மக்களை அங்குள்ள ஆடு,மாடு,குழந்தைகள், பெண்கள் என்று பார்க்காமல் கொன்று குவித்தான். அவர்கள் வட வியட்நாம் கொரில்லக்களுக்கு பதுகாப்பு அளிப்பதாக அவன் நினைத்ததால்... அமெரிக மக்கள் அவனை ஒரு நாயகனாக கொண்டாடி மகிழ்ந்தார்கள்.சர்வதேச அளவில் ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக வில்லியம் காலே ராணுவ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டான்..
அ.மெரிக்கவை எதிர்க்கும் எந்த தலைவனையும் C.I.A விட்டு வைக்காது.பின் லேடனைக் கொன்றதிலும் பங்கு உண்டு.
.. பின்லேடன் பெயரை "கெரினொமோ "என்று சங்கேத வார்த்தையில் குறிப்பிட்டுள்ளனர் .
ஸ்பானியர்களையும். ஐக்கிய அமெரிக்க நாட்டவர்களையும் விரட்டி தன் சிவப்பிந்திய மக்களுக்கு விடுதலை வேண்டும் என்று பொராடிய மாவீரனுடைய பெயராகும் அது. அது பற்றி தனியாக ஒரு இடுகை போடுவேன்..
22 comments:
அமெரிக்க உறவால் பாகிஸ்தான் நாசமாகிவருகிறது கண் முன்னே தெரிகிறது, அந்த நாட்டின் அனுமதியில்லாமலேயே அமெரிக்க ராணுவம் வேட்டையாடுகிறது. இந்திய ஆட்சியாளர்கள் அமெரிக்காவுடன் ராணுவ உற்வை வலுப்படுத்தத் துடிக்கிறார்கள், இதிலிருந்து பாடம் கற்றுக்கொள்வார்களா?
பின்லேடன் அமெரிக்காவால் கொல்லப்பட்டதை இந்தியமக்கள் அமெரிக்காவை புகழ்கிறார்கள், அவனை வளர்த்தது யார் என்று அவர்களுக்கு தெரியவில்லையோ?
பாவம் அமெரிக்க மக்கள், அந்த நாட்டின் ஏகாதிபத்தியத்தைய கொள்கையால் அவர்களும் சொல்லடிபடுகிறார்கள்.
அறியாமைக்கு அளவே இல்லை போலிருக்கிறது. வருந்துகிறேன்.
அப்பாதுரை அவர்களே! யாருடைய அறியாமைக்கு வருந்துகிறீர்கள்! ---காஸ்யபன்
தவறாக எண்ண வேண்டாம், இந்தக் குறிப்பிட்டப் பதிவு குறித்த உங்கள் அறியாமைக்குத் தான்.
அமெரிக்கா என்றாலே கசப்போடு நினைக்கும் மார்க்சிசம் ஒரு புறம் இருக்கட்டும். பின்லேடன் ஒரு அரக்கன். ஹிட்லரை விடக் கொடியவன். அமெரிக்காவின் தினசரிப் பாமர வாழ்க்கை செப்11க்குப் பிறகு எந்த அளவுக்கு மாறியிருக்கிறது என்பதைப் பற்றியும், பின்லேடன் என்ற தனியரக்கன் உலகத்து மானிடத்துக்கு இழைத்திருக்கும் வணிக, பொருளாதார, பழக்கவழக்க, கொள்கைப்பிடிப்பு தொடர்பான அளவிட முடியாதக் கொடுமைகள் பற்றியும், தீவிரவாதம் என்ற பொதுக்கொடுமையினால் வருடக்கணக்கில் வாடிகொண்டிருக்கும் உலக நாடுகளின் நிலமை பற்றியும் புரிந்து கொள்ளாமல், அமெரிகா என்ற காழ்ப்புணர்ச்சியோடு எழுதப்பட்டிருக்கும் பதிவு. மாமியார்த்தன வரிகள்.
அமெரிகாவின் இந்த வெற்றி - capitalism/socialism கொள்கைகளுக்கு அப்பாற்பட்ட வெற்றி. வெற்றி கூட அல்ல, தவறாகச் சொல்கிறேன், இது ஒரு தீர்வு, முடிவு. ஆயிரமாயிரம் மனதுகளை இறுக்கிப் பிழிந்த சோகம் ஆத்திரம் துயரங்களைப் போக்க ஒரு சிறு வடிகால்.
கொள்கைகளுக்கப்பாற்பட்டு பாராட்ட முடியாவிட்டாலும், ஒரு கொடுமையான தீவிரவாதி ஒழிந்தான் என்ற நிம்மதியை வெளிப்படுத்தாவிட்டாலும்,அமெரிகாவின் இந்தச் செயலிலும் ஒரு 'முதுகு குத்தலை'ப் பார்த்திருக்கும் உங்கள் அறியாமை மிகவும் வருந்தத் தக்கது என்பதைப் பணிவுடன் சொல்லிக் கொள்கிறேன்.
பின்லேடன் கொல்லப்பட்டதும் தங்களிடமிருந்து இப்படி ஒரு பதிவை நான் எதிர்பார்த்தேன். பின்லேடனுக்காக மசூதிகளில் தொழுகை நடத்தும் கூட்டத்துக்கும் தங்களுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறேன்.
அமெர்க்காவைப் போல நாமும் பாகிஸ்தானுக்குள் ( இப்போது சவூதி அரேபியா ) புகுந்து தாவூத் இப்ராகிமை தாக்கிக் கொல்ல வேண்டும் என்கிறேன் நான். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.?
அப்பாதுரை அவர்களே! உங்களுடைய அந்த virulent attack நீங்கள் பழய நிலைக்கு வந்து விட்டீர்கள் என்பதைச் சுட்டுகிறது. எனக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. 1941 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 7ம் தெதி வரை ஹிட்லர் ஐரோப்பாவில் நடத்தியது ஐரொப்பாவின் யுத்தம். போலந்தைக் கபளிகரம் செய்தது சரி. !அமெரிக்காவின் கொள்கையான் isolationism த்திற்கு ஏற்றது பெர்ல் துரைமுகத்தில் குண்டு விழுந்து 2300 சொச்சம் அமெரிக்கர்கள் செத்ததும் அது ஊலகயுத்தாமாக மாறியது. லுமும்பாவைக் கொன்றது யார்? அல்லண்டெயை சுட்டது எவர்? அன்பரே ! மொய்னிஹானை படியுங்கள். செஸ்டர் பவுல்ஸ் ஸை படியுங்கள்,உலகத்தின் மிகச்சிறந்த படங்களில் முதல் பத்தில் உள்ளது "the great dictator"(1940) இந்த படம் வந்த பொது அமெரிக்கா யுத்தத்தில் செரவில்லை .ஹிட்லரை கிழிததுப் போட்ட படம். மக்கார்த்தியும், எட்கார் ஹூவரும் சார்லிசாப்ளினை அதற்காக படுத்திய பாடு...! அவர் நடு கடத்தப்பட்டு பிரிடிட்டனுக்கு சென்றார். எழுதிக் கொண்டே போவேன்.வாழ்த்துக்கள்---காஸ்யபன்
சிவகுமரன் அவர்களே! அமெரிக்கா அத்துமீறி நுழைந்தது தவறு. பகிஸ்தான் பின் லேடனுக்கு இருப்பிடம் கோடுத்ததும் தவறு. இந்தியாவை ஆத்திரமூட்டி எதிர் வினை புரியச்சொல்வதும் தவறு.வாழ்த்துக்கள்---காஸ்யபன்
மும்பை தாஜ்ஹோட்டல் குண்டுவெடிப்பில் குற்றவாளியான டேவிட் ஹெட்லி அமெரிக்காவில் தானெ இருக்கிறான், இந்தியாவில் அவனை கொண்டுவந்து நீதிமன்றத்தில் நிறுத்தமுடியவில்லை, அப்புறம் எங்க சவுதிக்கு போயி ஒருத்தனை கொல்லுறது.
virulent attack எதுவும் இல்லை சார். உங்களை மிகவும் மதிக்கிறேன்.
எனினும், இந்தப் பதிவுக்குப் பின்னே கொஞ்சம் கூட இங்கிதமோ அறிவோ இல்லை என்பதே என் எண்ணம். அமெரிக்க எதிர்ப்பு எந்த அளவுக்கு உங்களுக்குள் வேரூன்றி இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.
உங்கள் கருத்தைச் சொல்ல உங்களுக்கு இல்லாத உரிமையா? என் பின்னூட்டத்தை அனுமதித்ததே பெரிது, நன்றி.
பின்னூட்டத்திலும் எதையெதையோ சொல்கிறீர்களே தவிர, அமெரிக்கா உலக அமைதியைக் குலைக்கும் நாடு என்பதற்குத் தோதான காரணம் எதையும் காணோமே? எத்தனை எழுதினாலும் அதன் பின்னே கண்மூடித்தன எதிர்ப்பு இருந்தால் எழுதுவதில் அறியாமை தானே தொனிக்கும் ஐயா?
வெளி விவகாரங்களில் தலையிடுவதில்லை என்பதே அமெரிகாவின் கொளகையாக இருந்து வந்தது. இ உலகப் போரில் அமெரிக்கா கலந்து கொள்ளக் காரணம் நீங்கள் சொல்வது போல் பேர்ல் ஹார்பர் தாக்குதலே. அமெரிக்க உள்நாட்டில் தாக்குதல் தொடங்கிய பின்னரே அமெரிக்கா போரில் இறங்கியது. 'அது வரை ஐரோப்பா போர் அமெரிக்கா இறங்கியதும் உலகப் போர்' என்பதெல்லாம் ஊடகக் கதை. அமெரிக்கா உலகின் மிகப்பெரிய வல்லரசாக இருந்த காரணத்தால் உண்டான பெயர். அமெரிக்கா உலகப் போரை விரும்பவும் இல்லை, தொடங்கவும் இல்லை.
இந்த நாட்டுக்குள் வந்து போகும் சுதந்திரத்தை அனுமதித்த அமெரிக்காவின் முட்டாள்தனம் தான் பின்லேடன் வளரக் காரணம். இங்கே வந்து இந்த ஊர் விமானத்தைக் கடத்தி இந்த ஊர் கட்டிடத்தை இடித்து இந்த ஊர் அப்பாவிகளை ஆயிரக்கணக்கில் கொல்லவும் அமெரிக்கா சுதந்திரம் கொடுத்தது என்பதை மறந்து விடாதீர்கள். முட்டாள்தனம் என்றாலும் அது உலக மக்களுக்கு அந்த நாள் வரை இருந்த 'திறந்த கதவு - திறந்த உள்ளம்' கொள்கை. அதை மறந்து விட வேண்டாம்.
இந்த ஊரில் அத்துமீறி வந்து அக்கிரமம் செய்துவிட்டு இன்னொரு ஊரில் பதுங்கியிருந்தவனைப் பிடித்துக் கொன்றால் அத்துமீறலா? இருந்துவிட்டுப் போகட்டும். பத்து வருடங்கள் போல் பதுக்கி வைத்து உதவி செய்தவர்களிடம் வம்புக்குப் போவதா? மறுபடியும் அரக்கனைத் தப்பிக்க விடுவதா? இல்லை அவனைக் கொல்வது என்று துணிச்சலாக முடிவெடுப்பதா? நீங்கள் தலைவராக இருந்தால் என்ன முடிவெடுப்பீர்கள்? உங்கள் நாட்டுப் பாதுகாப்புக்குப் பொறுப்பாளியாக இருந்தால் என்ன முடிவெடுப்பீர்கள்?
இத்தனை சொல்கிறீர்களே, சோவியத் ரஷ்யாவைப் பற்றி எழுத மறுக்கிறீர்களே? இன்றைக்கு உலகில் அமைதி குறைந்திருப்பதற்குக் காரணமே அன்றைய சோவியத் அதிகாரிகளின் கண்மூடித்தன அகங்காரம் தான். ஐரோப்பாவில் சோவியத் அராஜகம் (தந்திரம்) வேரூன்றியதால் தான் உலகப் போர்களே தொடங்கின என்பேன். நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை - நிறைய புத்தகங்கள் வந்துவிட்டன. ஸ்டாலின் காலத்து ராஜதந்திரங்கள் எப்படி சமுதாயப் புரட்சி என்ற பெயரில் உட்பூசலையும் போர்களையும் child labor, prostitution போன்ற சமுதாயக் கொடுமைகளையும் உண்டாக்க ஏதுவாக இருந்தன. இந்தக் கருத்தைச் சொல்லும் நிறைய புத்தகங்கள் வந்து விட்டன.
அமெரிக்க-ரஷ்ய coldwar அதற்குப் பிறகு உண்டானது தான்.
coldwarன் விளைவுகள் இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்காவது இருக்கும் என்பதில் எனக்கும் அவமானம் தான், வருத்தம் தான். இடையில் வேறு தீவிரவாத கும்பல்கள் சேரத்தொடங்கி விட்டனவே? அது இன்னும் கலவரம் உண்டாக்குகிறது. இன்னும் ஐம்பது ஆண்டுகளுக்குள் சைனாவின் கம்யூனிசம் கலைந்ததும் வேறென்ன விளைவுகள் வருமோ?
இந்தியாவின் அண்மை நாடான பாகிஸ்தானின் மக்கள் நிலை என்ன? ஒரே நேரத்தில் சுதந்திரம் கிடைத்தாலும் சென்ற அறுபது ஆண்டுகளில் - குறிப்பாக சென்ற இருபத்தைந்து ஆண்டுகளில் - படிப்பிலும், வசதியிலும், பொருளாதாரத்திலும் மிக மிகத் தாழ்த்தப்பட்ட நிலைக்குச் சென்றிருக்கும் பாகிஸ்தானிய மக்களின் நிலை என்ன? இன்னொரு ஆப்கனிஸ்தானா? கிடைக்கும் உதவி எல்லாவற்றையும் மேல்தட்டு நவாபுகள் பங்கு போட்டுக்கொண்டு பாமரர்களை ஏய்த்துக் கொண்டிருக்கிறார்களே? இந்த நிலை நீடித்தால் பாகிஸ்தானின் சராசரி பிரஜையின் நிலை என்ன? சந்ததிகள் நிலை என்ன? பங்களா தேஷை விட கல்வியறிவிலும் வேலைவாய்ப்பிலும் இன்றைக்குப் பாகிஸ்தான் குறைந்திருக்கிறதாம். இந்நிலை தொடர்ந்தால், முதலில் இந்தியாவுக்குத் தான் அபாயம். பாகிஸ்தான் மக்களுக்கு உதவுவது எப்படி?
இதையெல்லாம் சிந்தித்து எழுத வேண்டியதல்லவா மூத்த அறிஞர்களான உங்கள் கடமை? அதைவிட்டு உலக எதிரியான கொடும்பாவி பின்லேடனைக் கொன்றதைக்கூட அத்துமீறல் என்று அம்மி அரைக்கிறீர்களே? நியாயமா?
மெகார்த்தி என்றாலே பன்றிப்பீ என்று 99% அமெரிக்கர்கள் கருதுகிறார்கள். அன்றைய கால நிலவரத்தில் கம்யூனிசம் என்றாலே உலகக்கேடு என்று நினைத்த மெகார்த்தி அதிகாரத்தில் இருந்ததால் வந்த வினை. மெகார்த்திக்கு நேர்ந்த கதி உங்களுக்குத் தெரியுமே, அதைச் சொல்லவில்லையே? அமெரிக்கா தவறே செய்யாது என்று சொல்ல வில்லை, அதற்காக அது என்ன செய்தாலும் தவறு என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. சார்லி சாப்லின் இங்கிலாந்து போன காரணம் மெகார்தி அல்ல, அவருடைய காதல் தோல்வி, சோகம், போதைப் பொருள், முதுமை.. சாப்லினின் வாழ்க்கை வரலாறு கிடைக்கிறது. சாப்லினுக்கும் பின்லேடனுக்கும் பாலமா? இது என்ன கூத்து!
நாட்டாமை , நாட்டாமை என்று அமெரிக்காவை சொல்கிறோமே ..இந்த விஷயத்தில் எவ்வளவு பொறுமை காத்திருக்கிறார்கள் ..உடல் எனும் உலகுக்கு சேதாரமில்லாமல் ரத்தம் உறிஞ்சும் கொசுவை மட்டும் அடித்துள்ளார்கள்.. அர்ஜுன குறி .. அவர்களுக்கு இருக்கும் பலம் வேறு யாருக்கு இருந்தாலும் இது அணு ஆயுத போரில் முடிந்திருக்கும்...
அப்பாதுரை அவர்களே! நீர் தக்குவதாக நினைப்பதை நான் மகிழ்ச்சியோடு அனுபவிக்கிறேன்.மூன்று வயது பேரன் நெஞ்சில் மிதிக்கும் சுகமான தாக்குதல்.பதிவுலக நண்பர்கள் அவர் யார்? யார்? என்று கெட்கிறார்கள். ந்ம் இருவருடைய விவாதங்களும் அவர்களுக்கு பல விஷயங்களை தெளிவு படுத்துவதாக கூறுகிறார்கள்.. ஜமாயும்! நானும் பின்னி எடுக்கிறேன்--- கஸ்யபன்
(பிகு. அந்த நிதி அமைச்சர் என்ற இடுகையில் தோழர் நாறும் பூ நாதன் பின்னுட்டத்தைப் பாருங்கள்)
தாக்கும் எண்ணம் துளிக்கூட இல்லை காஸ்யபன் சார்.
ஹரிஹரன் சார்.. டேவிட் ஹெட்லி என்று பெயர் மாற்றிக் கொண்ட தாவூது, அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருக்கும் பாகிஸ்தானியன். சிகாகோவில் பிடிபட்டுச் சிறையிலிருக்கிறான். இந்திய அமெரிக்க அதிகாரிகளுடன் ஒத்துழைக்கிறான். இரு நாடுகளுக்கிடையே extradition ஒப்பந்தம் இருந்தும் அவனை இந்தியாவுக்குக் கொண்டு வரத் தடையாக இருப்பது அவனுடைய plea agreement, மற்றும் அமெரிக்க அதிகாரிகளிடையே இருக்கும் சந்தேகம்: இந்தியா போனால் தப்பி விடுவானோ? பி.சிதம்பரம் பேசியிருப்பதைப் பாருங்கள் - சரியான வழவழ. terrorist என்பதால் அமெரிகா வெகு சுலபமாக அவனது அமெரிக்க பிரஜா உரிமையைப் பறித்து விட முடியும். அப்பொழுது அவன் பாகிஸ்தான் போய்விடுவான். தாவூதே இதைப் பற்றி ஆலோசனை செய்திருக்கிறான்.
எப்படியோ, இந்த நிலையில் international terrorist என்பதால் அமெரிக்கா அவனுக்கு ஒரு பொழுதும் பாதுகாப்பு தராது என்பதை மட்டும் நம்புகிறேன்.
அய்யா,
கம்யூனிஸ்ட் கட்சி சாராத நடுநிலையாளர்களை கேட்டுப் பாருங்கள். அமேரிக்கா செயதது தவறா என்று. தன நாட்டுக்குள் புகுந்து நாசம் செய்தவனை அவன் இருக்கும் இடம் தெரிந்த பிறகு விட்டுவைப்பது கேவலம் அல்லவா? பாகிஸ்தான் செய்தது தவறு என்று ஒத்துக்கொள்ளும் நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் என்பதால், தாக்கியது உங்களுக்கு பிடிக்காத அமேரிக்கா என்பதால், நடுநிலை இல்லாமல் எழுதுகிறீர்கள். இதையே சோவியத் ரஷ்யா செய்திருந்தால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடியிருப்பீர்கள் (ரஷ்யாவுக்கு அந்த பலம் இல்லை என்பது வேறு விஷயம்)
சிவகுமரன் அவர்களே1சொவியத் நாடு செய்யாது. பிரன்சு படைகள் வியட்நாம் மக்களைக்கொன்ற்குவித்தபோதும் அமெரிக்கா நாபாம் குண்டுகளை வீசி வியட்நாமை அழிக்க முயன்ற பொதும் ஒரு சொவியத் விரன் அங்கு இல்லை. கொரிய யுத்தத்தின் போது மக்கள் சீனம் தன் படையை அனுப்பவில்லை.ஏன்? 1946ம் ஆண்டு தெலுங்கானா விவசாயிகள் புரட்சியின் மூலம் மூன்று ஆண்டுகள் ஆட்சிசெய்ததை மாமா நேருவும், தாத்தா ராஜாஜியும் ராணுவத்தைக் கொண்டு அழித்தார்களே அப்பொதும் சொவியத் தலையிடவில்லை. புரட்சி என்பது ஏற்றுமதிச் சரக்கல்ல.அந்தந்த நாட்டு மக்கள் உருவாக்க வேண்டிய ஒன்றாகும்.ஆனால் அமெரிக்காவின் தலைமையில்முதலாளித்துவ நாடுகள் எதிர் புரட்சியை ஏற்றுமதி செய்தன.nato,ento, எத்தனை எற்பாடுகள்.உலக வரலாறு நிங்கள் நினைப்பது போல் இல்லை ஐயா!---காஸ்யபன்
சரித்திரம் மொழி மாதிரி - யாருக்கு என்ன தோன்றுகிறதோ அதைப் போல பொருள் கொள்ளலாம். நடந்த கதையை யார் உரக்கச் சொல்கிறார்களோ அவர்கள் பக்கம் செவி சாய்க்கப்படுமோ என்னவோ! சோவியத் லட்சணம் இடலி, ஸ்பெயின், கூபா, வியட்நாம் (சோவியத் தலையிடவில்லையா? சரிதான்), வடகொரியா (கொரியா யுத்தம் எப்படி வந்தது என்கிறீர்கள்?), ம்ம்ம்.. சமீப முஜாஹித்தீன் இயக்கம் யார் தலையீட்டை - தானாகத் தோன்றிய புரட்சியை - எதிர்த்தது என்கிறீர்கள் காஸ்யபன் சார்?
ஆப்கானிஸ்தானில் முதலில் சோவியத் படையை விரட்டி அடிப்பதற்க்காகத் தானே புரட்சி தோன்றி தீவிரவாதமாய் மாறியது. அப்படிப் பார்த்தால் தீவிரவாதம் தோன்றக் காரணமே சோவியத் தானே.
டேவிட் ஹெட்லி வழக்கு பற்றி:
http://news.yahoo.com/s/ap/20110516/ap_on_re_us/us_mumbai_attacks_trial_8?bouchon=602,il
Post a Comment